மியான்மர் எல்லையில் கடும் சண்டை : நாகா பயங்கரவாதிகளுக்கு பெரும் சேதம்| Dinamalar

மியான்மர் எல்லையில் கடும் சண்டை : நாகா பயங்கரவாதிகளுக்கு பெரும் சேதம்

Updated : செப் 28, 2017 | Added : செப் 27, 2017 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி: அண்டை நாடான மியான்மர் எல்லையில், நேற்று அதிகாலை நடந்த கடும் சண்டையில், நம் வீரர்கள் கொடுத்த பதிலடி தாக்கு தலில், நாகா பயங்கரவாத அமைப்புக்கு பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக, ராணுவம் தெரிவித்துள்ளது.

நம் ராணுவத்தின் கிழக்கு பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில்கூறியுள்ளதாவது:இந்தியா - மியான்மர் எல்லையில், நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு, நம் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, என்.எஸ்.சி.என்.கே., எனப்படும், நாகா பயங்கரவாத அமைப்பினர், துப்பாக்கியால் சுடத் துவங்கினர். நம் வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில், நம் வீரர்களின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல், பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில், பயங்கர வாத அமைப்புக்கு மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், இந்தியா - மியான்மர் எல்லையில் நடந்தது. நம் படைகள், மியான்மர் எல்லைக்குள் சென்று, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லியத் தாக்குதல் நடத்தியதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மியான்மர் எல்லைக்குள் சென்று, நம் படைகள், சர்ஜிகல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.மணிப்பூரில் இரண்டாண்டுகளுக்கு முன், நாகா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மியான்மர் எல்லையில் நம் படை, மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. அதன்பின், நாகா பயங்கரவாதிகள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.கடந்த ஆண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.மியான்மரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-செப்-201702:25:11 IST Report Abuse
Mani . V "ஊருக்கு தொக்கு (இளித்தவாயன்) பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுபோல் தினமும் நம் நாட்டு மக்களையும், ராணுவ வீரர்களையும் கொன்று குவிக்கும் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியாவின் வீரத்தை மியான்மாரிடம் காட்டுவதால் பாகிஸ்தான் ஒன்றும் பயப்படப் போவதில்லை.
Rate this:
Share this comment
Krish Srinivas - chennai,இந்தியா
30-செப்-201709:45:31 IST Report Abuse
Krish Srinivas உன் புத்தி தெரியுது...
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
27-செப்-201720:25:56 IST Report Abuse
Nagarajan D நமது ராணுவத்திற்கும் நமது வீரர்களுக்கும் எதுவும் நேரவில்லை என்பது மனத்திற்கு நிம்மதி. பாரத் மாதா கீ ஜெய்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
27-செப்-201718:56:30 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) ஒரு ராணுவக்காரர் மூலம் வந்த செய்தி .குறைந்தது 45 பேர் இறந்திருப்பார்கள் என்று. இந்த நிகழ்வு ஒரு வாரம் முன்பே திட்டம் இடப்பட்டு நமது ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டது . மியான்மர் அரசின் மிக உயர் அதிகாரிகளுக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டு .இந்த அதிரடி மேற்கொள்ளப்பட்டுள்ளது . NCSN போராளிகளின் சங்கேத மொழிகளை அடையாளம் கண்டு கொண்டு , மிக நவீன ரேடார் , ஹெலிகாப்டர் , sniper மற்றும் , சாட்டிலைட் தொழில் நுட்ப உதவியுடன் இது நடத்தப்பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை