பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி Dinamalar
பதிவு செய்த நாள் :
பா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி

மும்பை:மத்தியில் ஆளும், பா.ஜ.,வை, அதன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், 'பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, அந்த கட்சி வலியுறுத்திஉள்ளது.

 பா.ஜ., கூட்டணிக்கு,திடீர்,நெருக்கடி

நாட்டின் பொருளாதார நிலைமையை விமர்சித்து, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்ஹா, சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதி

இருந்தார்; இது, அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ.,கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் பத்திரிகையான, 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

'கட்சித் தலைமைக்கு எதிராக பேசுவதற்கு, பா.ஜ., தலைவர்கள் பயப்படுகின்றனர்' என, யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்; இது, ஆபத்தில் முடியும். நாட்டின் பொருளாதார நிலை குறித்து, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் கருத்து கூறியபோது, அவர்களது வாய்களை, மத்திய அரசு அடைத்து விட்டது.

அதே நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தைரியமாக சில கருத்துக்களை

Advertisement

கூறியுள்ளார்; அது உண்மையில்லை என்றால், அதை, பா.ஜ., நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூட்டணி கட்சியான, சிவசேனாவின் இந்த கடுமையான விமர்சனம், பா.ஜ., மேலிடத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
29-செப்-201716:42:48 IST Report Abuse

இடவை கண்ணன் மோடிக்கு எதிராக கால் கால் என கத்துங்க...நீங்க கத்த கத்த மக்கள் மோடி பின்னால் அணி வகுப்பாங்க

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-அக்-201702:43:22 IST Report Abuse

Anandanமுட்டாள்கள் கண்டிப்பாக அணி வகுப்பார்கள்....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
29-செப்-201716:35:30 IST Report Abuse

Endrum Indianதிருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எப்போ விவாகரத்து ஆகுமோ என்பது போல் நடக்கின்றது இந்த மகாராஷ்டிரா கட்சி ஆட்சி ?????

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
29-செப்-201714:27:32 IST Report Abuse

த.இராஜகுமார் கோவிந்தா கோவிந்தா

Rate this:
Ravikumar - Wardha,இந்தியா
29-செப்-201712:01:08 IST Report Abuse

Ravikumarநல்ல முயற்சிக்கு எதிர்ப்பு எப்பவும் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியைவிட்டு செல்லும்போது கடன், ஊழல், மானியம், சோம்பறித்தனம் (100 நாள் வேலை), மதம் சார்ந்த அரசியல் என பல நல்ல விஷயங்களை விட்டு சென்றுஉள்ளது. ஆகவே பா ஜா க ஆட்சி ஒரு மோசமான ஆட்சி தான். வாஜ்பாய் ஆட்சி நல்ல ஆட்சி தான் ஆனால் மக்கள் ஏன் அவரை மீண்டும் தேர்வு செய்யவில்லை?

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-அக்-201702:44:51 IST Report Abuse

Anandanஉங்க கருத்தை ஒத்து கொள்வதாக வைத்துக்கொள்வோம். அப்புறம் எப்படி பற்றாக்குறை பட்ஜெட் வருகிறது? பெட்ரோல் விற்பனையில் மட்டும் பல லட்சம் கோடி அரசுக்கு வருமானம். வெறும் வாய்ப்பேச்சில் மக்களை ரொம்ப நாட்களாக ஏமாற்ற முடியாது....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-செப்-201708:52:32 IST Report Abuse

Srinivasan Kannaiyaபா.ஜ., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி என்பது தவறு மக்களுக்குத்தான் பா.ஜ., கூட்டணியால் எப்பவுமே பயங்கர நெருக்கடி... மக்கள் வாழ்வா சாவா என்று காலத்தை நகர்த்துகிறார்கள்...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
29-செப்-201707:57:30 IST Report Abuse

தங்கை ராஜாமோடிக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற அறிவிப்பு கூட தேர்தல் நெருக்கத்திலோ தேர்தலுக்கு பிறகோ வெளியாகலாம். வாஜ்பாயும் அத்வானியும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை காப்பாற்ற அது ஒன்றே வழி.

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
29-செப்-201707:32:10 IST Report Abuse

தாமரை இந்த சின்ஹா பதவியை எதிர்பார்த்தார் அது கிடைக்கவில்லை. இவரைப் போலவே இன்னொரு நடிகரான சின்ஹாவுக்கும் நஹி. இப்போது குமுறுகின்றனர். சோனியாவின் தலையாட்டிப் பொம்மை மண்ணு மோகனும் உலகக் கொள்ளையர் தலைவன் சிதம்பரமும் சர்ட்டிபிகேட் கொடுத்தால்தான் பொருளாதார முன்னேற்றம் என்று ஒத்துக்கொள்வதாக இருந்தால் அது நடக்காது. இந்த சிவசேனா மஹாராஷ்டிரத்தில ஆட்சியைப் பிடிக்க விடாம பா ஜ க தடுத்த வயிற்றெரிச்சலில் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் ஏதேதோ அலறியபடியே இருக்கிறது. பேசாமல் இந்த மாநில பதவி வெறி பிடித்த கட்சியைக் கழட்டி விட்டுவிடுவதே சிறந்தது.

Rate this:
kuthubdeen - thiruvarur,இந்தியா
29-செப்-201708:24:02 IST Report Abuse

kuthubdeenசர்வாதிகாரமா எல்லாமே நான் மட்டும் தான் என்னால் மட்டுமே என்று நினைப்பதே அழிவின் தொடக்கம். மோடி அவர்கள் இதைத்தான் நினைக்கிறார். கட்சியால் தான் அவரை மக்களுக்கு தெரியும். இப்படி மூத்தவர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார். இது நீடிக்குமா என்பது போக போக தெரியும். சின்காவிற்கு பதவி இல்லை என்பதால் இப்படி பேசுறார் என்ற வாதம் சரி இல்லை. பல பொருளாதார மேதைகள், ஆய்வு அறிக்கைகள், சாமி குருமூர்த்தி சிதம்பரம் மன்மோகன் இப்படி அனைவருமே வளர்ச்சி இல்லை என்றே தெரிவித்து வருகிறார்கள். இன்று நிதி அமைச்சரே தேக்க நிலை தற்காலிகம் என்று சொல்லிவிட்டார். இப்ப என்ன பதில் சொல்ல போறீங்க. தவறான கொள்கை முடிவு எடுத்தால் அதை தவிர்க்கணும் ,நாம் கொண்டுவந்தோம் என்று விடா பிடியா நின்றால் நாட்டுக்குத்தான் நஷ்டம் ....

Rate this:
sachin - madurai,இந்தியா
29-செப்-201710:39:42 IST Report Abuse

sachinமோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது ...40 இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது ...இனி இந்திய பொருளாதாரம் நிமிர்ந்து நிற்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் .....மன்மோகன் சிங்க் பொருளாதார மேதை ....மோடி ஊர் சுத்துவத்துக்கு தான் லாயக்கு .....உண்மை சொன்னால் கசக்க தான் செய்யும் எல்லாருக்கும் ....இந்திய வளரும் நாடு என்கின்ற அந்தஸ்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளது உலக நாடுகளால் .......

Rate this:
29-செப்-201711:44:41 IST Report Abuse

Palanisamyஇந்தியப் பொருளாதாரம் படு பாதாளம் சென்று விட்டது. சின்ஹா சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு??...

Rate this:
29-செப்-201707:12:25 IST Report Abuse

hariharankசிவசேனாவுக்கு மந்திரி பதவி குடுக்காததனாலும் மகாராஷ்டிரத்திலேயே அது பிஜேபியை விட குறைந்த இடங்களையே பெற்றதாலும் உண்டான மன உளைச்சலில் தினமும் ஏதாவது சொல்வதே வாடிக்கையாகி விட்டது. பிடிக்கவில்லை என்றால் ஏன் கூட்டணியிலிருந்து விலக வில்லை. சந்தர்ப்பவாத அரசியல் செய்து ஒரு பிரயோஜனமும் இல்லை

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
29-செப்-201709:49:45 IST Report Abuse

Rahimநீங்க ஏன்பா உண்மையை உலகுக்கு காட்ட மறுக்கிறீர்கள் , எதிர்த்து கேள்வி கேட்போருக்கு உரிய பதிலை கொடுங்கள் இல்லையேல் வாயை மூடுங்க....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
29-செப்-201706:59:27 IST Report Abuse

தேச நேசன் சிவசேனா கடைசி நாட்களை எண்ணுகிறது

Rate this:
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
29-செப்-201710:28:24 IST Report Abuse

அறிவுடை நம்பி யோவ்...சிவா சேனாவா..பிஜேபி யா???...

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
29-செப்-201710:29:37 IST Report Abuse

ஜெயந்தன்மோடியை இப்படியே சகித்து கொடிருந்தால் இந்தியாவை இன்னொரு வட கொரியாவாக ஆக்கி விடுவார்......

Rate this:
Anandan - chennai,இந்தியா
01-அக்-201702:46:27 IST Report Abuse

Anandanவேலை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறைந்தது, விலைவாசி பெரும் அளவில் உயர்ந்தது மோடி அரசின் சாதனை, யாராலும் முறியடிக்க முடியாதது....

Rate this:
rama - johor,மலேஷியா
29-செப்-201706:08:13 IST Report Abuse

ramaகெடுவான் கேடு நினைப்பான் தமிழ் நாட்டை கொள்ளை புறமாக எடுத்த பாஜக வுக்கு இது போதாது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை விட டெல்லியில் இருப்பது தான் அதிகம்

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-செப்-201711:23:34 IST Report Abuse

Pasupathi Subbianகொல்லைப்பறமும் இல்லை வாசலும் இல்லை. தமிழகத்துக்கும் பி ஜெ பிக்கும் ஏழாம் பொருத்தம்...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement