கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக்கு அதிக வட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் சேமிப்புக்கு அதிக வட்டி

Added : பிப் 12, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி : கூட்டுறவு வங்கிகளில், சேமிப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களில் வைப்பு நிதிகளுக்கு அதிக சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
அதன்படி, 46 முதல் 90 நாட்கள் வரையிலான வைப்புகளுக்கு 4.5 சதவீதம், 91 முதல் 180 நாட்கள் வரை 5.5 சதவீதம், 181 முதல் 270 நாட்கள் வரை 6.5 சதவீதம், 271 முதல் 364 நாட்கள் வரை 7.5 சதவீதம், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை 9 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 9.5 சதவீதம் வழங்கப்படுகிறது.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை 9.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 10 சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் 10 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 10.5 சதவீதமும் வட்டி அளிக்கப்படுகிறது, என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை