"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு: பதவி விலக ராதாகிருஷ்ணன் முடிவு?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு: பதவி விலக ராதாகிருஷ்ணன் முடிவு?

Added : பிப் 12, 2011 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு: பதவி விலக ராதாகிருஷ்ணன் முடிவு?

புதுடில்லி: "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கான நிறுவனமான ஆண்ட்ரிக்சின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பிற்காக முழு நேர தலைவர் ஒருவரை புதிதாக பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் எஸ்-பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இஸ்ரோவின் வர்த்தக பிரிவு நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், திவாஸ் மீடியா நிறுவனத்துக்கும் இடையே, எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 2005ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, திவாஸ் மீடியா நிறுவனத்துக்கு, ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் எஸ்-பாண்ட் டிரான்பாண்டர்களை ஒதுக்கீடு செய்தது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாகவே, அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சதுர்வேதி, விண்வெளி கமிஷன் உறுப்பினர் ரோத்தம் நரசிம்மன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. இதில், திவாஸ் மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் குறித்தும், இதில் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. கூட்டம் முடிந்ததும், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இஸ்ரோவின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள புகாரை அடுத்து, இந்த நிறுவனத்தின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்காக புதிதாக, முழு நேர தலைவர் ஒருவரை பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தலைவரை நியமிப்பது குறித்த பணிகளுக்காக ஒரு கமிட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படாது.


கொள்கை ரீதியான சில முடிவுகளின் அடிப்படையில் எஸ்-பாண்ட் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திவாஸ் மீடியா நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் முழு விவரமும், மத்திய அமைச்சரவை (பாதுகாப்பு) கமிட்டியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.


பரபரப்பு: இதற்கிடையே, ஆண்டிரிக்ஸ் - திவாஸ் மீடியா நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாவதையடுத்து, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பதவி விலகப் போவதாகவும், நேற்று சில தகவல்கள் வெளியாயின.


Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hvacsrini hvacsrini - doha,கத்தார்
13-பிப்-201115:11:06 IST Report Abuse
hvacsrini hvacsrini நல்ல திறமை மிக்கவர்கள் தன் நாட்டுக்கு தேவையே தவிர மொழி வாரியாகவோ இன வாரியகோ நாட்டுக்கு தேவையில்லை அவ்வளவு ஏன் வளைகுடா நாடுகளில் வந்து பாருங்கள் தெரியும் எந்த அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் என்று நான் தவறாக சொல்லவில்லை எல்லோரையும் அணைத்து செல்லும் இந்தியன் என்ற பற்று வேண்டும். திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
13-பிப்-201114:21:01 IST Report Abuse
appu evanaa irundhaa enakenna?kutram kutrame.spectrathil raaja purindhadhu kutram pola ISRO seithathum kutrame.ISRO vin thalaivarum P.M m thandikkapadavendiyavarkal.CBI ithilum sathanai padaithal sari illavittal arasum makkalum oru thalai patchamaka seyalpaduvathu endraakividum.
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
13-பிப்-201113:00:05 IST Report Abuse
K Sanckar ராதாக்ருஷ்ணன் ராஜினாமா செய்துவிட்டால் போதாது. வாங்கிய கமிஷன் தொகையை வசூல் செய்து அரசாங்க கஜானாவில் கட்ட வேண்டும். யார் வாங்கி இருந்தாலும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். ராஜினாமா தீர்வு ஆகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை