என்.ஐ.ஏ., விசாரணைக்கு கேரளா கடும் எதிர்ப்பு | Dinamalar

என்.ஐ.ஏ., விசாரணைக்கு கேரளா கடும் எதிர்ப்பு

Updated : அக் 08, 2017 | Added : அக் 08, 2017 | கருத்துகள் (16)
Advertisement
என்.ஐ.ஏ., NIA,விசாரணை, Investigation, கேரளா , Kerala,புதுடில்லி,  New Delhi, முதல்வர் பினராயி விஜயன், Chief Minister Pinarayi Vijayan,ஹிந்து, Hindu, முஸ்லிம் ,Muslim,  லவ் ஜிஹாத், Love Jihad,  உச்ச நீதிமன்றம், Supreme Court,மத்திய புலனாய்வு அமைப்பு ,national Intelligence Agency, எஸ்.ஐ.டி., SID, சிறப்பு புலனாய்வு குழு, Special Investigation Division,

புதுடில்லி: 'கேரளாவில், ஹிந்து பெண், முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணை நடத்துவதற்கான அவசியம் எழவில்லை' என, அம்மாநில அரசு கூறியுள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஹிந்து பெண் ஒருவர், சமீபத்தில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவரை, காதலித்து திருமணம் செய்தார். பின், முஸ்லிமாக மதம் மாறிய அந்த பெண், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அது போன்று பல பெண்கள், முஸ்லிம்களின், 'லவ் ஜிஹாத்'துக்கு இரையாகி வருவதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, என்.ஐ.ஏ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், கேரள மாநில அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துஉள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:கேரளாவில், 24 வயது ஹிந்து பெண், முஸ்லிமாக மதம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாநில உள்துறை சார்பில், எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு குழு, இரண்டு மாதங்கள் தீவிர விசாரணை நடத்தியது.

அதில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடும் வகையிலான, குற்ற ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.இத்தகைய விவகாரங்களில், விசாரணை நடத்துவதில், கேரள மாநில போலீஸ், திறன் வாய்ந்ததாக உள்ளது. என்.ஐ.ஏ., விசாரணை தேவைப்படுமானால், அதுபற்றி, மத்திய அரசுக்கு, கேரள போலீசார் தகவல் அளித்திருப்பர்; இருப்பினும், ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், இந்த வழக்கை, என்.ஐ.ஏ.,விடம், கேரள போலீஸ் ஒப்படைத்தது.கேரள மாநில அரசுடன் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, 'லவ் ஜிஹாத்' விவகாரத்தை, பா.ஜ., எழுப்பி வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
08-அக்-201711:41:40 IST Report Abuse
Kuppuswamykesavan "..... , உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, என்.ஐ.ஏ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது...". - ஆக அந்த குழு, அவர்களின் கடமையை, செயல்பட விடுவதுதான், கேரள மாநில அரசு, இந்திய சட்ட நடைமுறைகளை, மதிப்பு செய்வதற்கு சமம் எனலாம். சரிதானே வாசகர்களே?.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
08-அக்-201710:26:03 IST Report Abuse
rajan இங்கு NIA தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இது சார்ந்த முழு உண்மைகளும் வெளியாக இது தான் ஒரே வழி.
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
08-அக்-201710:22:17 IST Report Abuse
Raman எல்லா பிஜேபி சொம்புகளும் வந்து பொலம்பவும். உங்க வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது.. போகும் வழிக்கு புண்ணியம் கிடைக்கும்.. செய்த பாவம் எல்லாம் சரியாக வாய்ப்பும் உண்டு..
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
08-அக்-201723:51:51 IST Report Abuse
Aarkayதைரியம் இருந்தால், சொந்த பெயரில் கருத்தை எழுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X