பெட்ரோல் 'பங்க்'குகள் அக்.13ல் ஸ்டிரைக் | Dinamalar

பெட்ரோல் 'பங்க்'குகள் அக்.13ல் ஸ்டிரைக்

Added : அக் 08, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெட்ரோல் பங்க், Petrol Punk,  ஸ்டிரைக் ,Strike,மத்திய அரசு,Central Government,  இந்தியன் ஆயில்,  Indian Oil,பாரத் பெட்ரோலியம், Bharat Petroleum, இந்துஸ்தான் பெட்ரோலியம், Hindustan Petroleum, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்,Public sector oil companies, வேலை நிறுத்தபோராட்டம்,  சென்னை, Chennai,

சென்னை: பெட்ரோல் 'பங்க்'குகள், வரும், 13ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு, தன் வசம் இருந்த, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை, சில ஆண்டுகளுக்கு முன், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குவழங்கின. அவை, மாதத்திற்கு,இரு முறை, எரிபொருள் விலையை மாற்றின. ஜூன், 16 முதல், தினமும் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.இந்நிலையில், தினசரி விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வரும், 13ம் தேதி, வேலை நிறுத்தபோராட்டம் அறிவித்துள்ளனர்.

13 ல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்

இது குறித்து, தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:தினசரி விலை நிர்ணயிப்பதால், வாகன ஓட்டிகள், பங்க் உரிமையாளர் என, யாருக்கும் பயன் இல்லை. வீடுகளுக்கு, பெட்ரோல் சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்தினால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும். இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள், வரும், 13ம் தேதி மூடப்படும்.

கமிஷன் தொகை உயர்வு உள்ளிட்ட, எங்கள் கோரிக்கைகளை, மத்திய அரசு, ஏற்கவில்லை எனில், 27ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-அக்-201708:32:40 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த முறையால் உங்களுக்கு தான் அதிகமான லாபம்...
Rate this:
Share this comment
Cancel
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
08-அக்-201706:49:41 IST Report Abuse
V .வெங்கடேஷ் "கமிஷன் தொகை உயர்வு உள்ளிட்ட, எங்கள் கோரிக்கைகளை..."- அதானே பார்த்தேன்... ஏதோ மக்கள் சிரமங்களுக்காக போராடுவதாக வேஷம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X