ரசிகர்களை சம்பாதிப்பதே லட்சியம் - சொல்கிறார் நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர்| Dinamalar

ரசிகர்களை சம்பாதிப்பதே லட்சியம் - சொல்கிறார் நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர்

Added : அக் 08, 2017
Advertisement
ரசிகர்களை சம்பாதிப்பதே லட்சியம் - சொல்கிறார் நகைச்சுவை நடிகர் அம்பானி சங்கர்

இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான அம்பானியின் பெயரை தன் பெயரோடு சேர்த்து கொண்டு, தமிழ் ரசிகர்களின் கைதட்டல், பாராட்டு மற்றும் ஆதரவை சம்பாதித்தால் மட்டும் போதும் என்கிறார் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த அம்பானி சங்கர். நாங்களும் மதுரைகாரய்ங்க தான் என்று வடிவேலு, அல்வா வாசு, செந்தில், விவேக் போன்ற காமெடி நடிகர்கள் வரிசை கட்டி கொண்டு திரையில் தோன்றி மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றனர். அவர்களின் வரிசையில் தானும் முக்கிய இடம் பிடிப்பதாக கூறும் அவர், தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி

* நடிப்பில் ஆர்வம் வர காரணம்?பள்ளியில் படிக்கும் போதே மேடை நாடங்களில் நடிக்க முதல் ஆளாக சென்று பங்கேற்பேன். அப்போதும் கூட நான் உயரம் குறைவாக இருப்பதால் என்னவோ நகைச்சுவை பாத்திரங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதனை தொடர்ந்து தான் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் உண்டானது. * ரோல் மாடல்?நிச்சயமாக வடிவேலு தான். சிறு வயதில் இருந்து அவரின் நடிப்பை பார்த்து தான் என்னை நான் தயார்படுத்தி கொண்டு வருகிறேன். * திரைத்துறைக்கு சென்றது பற்றி? இயக்குனர் லிங்குசாமி மூலம் திரைத்துறைக்கு வந்தேன். அஜித் என்னை முதலில் சந்தித்த போது, சிறுவன் என நினைத்து பேசினார். பிறகு தான் நான் இளைஞன் என்பதை அறிந்தார். என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
* பெயருடன் அம்பானி எப்படி ஒட்டி கொண்டார்? அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தது. பொது இடங்களுக்கு செல்கையில் மக்கள் என்னை அம்பானி சங்கர் என்றே அடையாளம் கண்டு கொண்டனர். அது அப்படியே ஒட்டி கொண்டது.
* உங்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்கள்?பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் குலேபகாவலி, வினய் நடிக்கும் நேத்ரா, புதுமுக நடிகர் நடிக்கும் சகா போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளேன். இந்த படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது.
* சினிமா தவிர்த்து உங்களின் ஆர்வம்? 'இனி ஓர் விதி செய்வோம்' என்ற அமைப்பின் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வருகிறோம். நகரில் இழந்து கொண்டிருக்கும் இயற்கையை மீட்டெடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.
* நகைச்சுவை காட்சிகளில் ஆபாசம் அதிகரித்துள்ளதே? நகைச்சுவை காட்சிகளுக்கு கண்டிப்பாக ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் கொண்ட வசனங்கள் தேவையில்லை. ரசிகர்கள் எதை ரசிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.தொடர்புக்கு sankeyactor@gmail.co

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X