சசிகலா புகழ் பாடிய மந்திரிக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் கொதிப்பு! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா,Sasikala, அ.தி.மு.க.,AIADMK, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, Co-operative Minister Raju, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, ஸ்லீப்பர் செல்,Sleepar Cell, அமைச்சர்கள், Ministers,எம்.எல்.ஏ.,MLA, தினகரன் ,Dinakaran, சொத்து குவிப்பு வழக்கு,Property accumulation case, சிறைத் தண்டனை, jail sentence, பெங்களூரு சிறை, Bangalore prison, சென்னை,Chennai, குளோபல் மருத்துவமனை, Global hospital, சிகிச்சை,treatment,சசிகலா கணவர் நடராஜன்,Sasikala husband Natarajan

'அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர் சசிகலா; அதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை' என, அவரது புகழ் பாடிய, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு மீது, அ.தி.மு.க.,வினர் பயங்கர கொதிப்பில் உள்ளனர்.

சசிகலா,Sasikala, அ.தி.மு.க.,AIADMK, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, Co-operative Minister Raju, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, ஸ்லீப்பர் செல்,Sleepar Cell, அமைச்சர்கள், Ministers,எம்.எல்.ஏ.,MLA, தினகரன் ,Dinakaran, சொத்து குவிப்பு வழக்கு,Property accumulation case, சிறைத் தண்டனை, jail sentence, பெங்களூரு சிறை, Bangalore prison, சென்னை,Chennai, குளோபல் மருத்துவமனை, Global hospital, சிகிச்சை,treatment,சசிகலா கணவர் நடராஜன்,Sasikala husband Natarajan

'சசிகலா குடும்ப ஆதிக்கமே கூடாது' என, ஒட்டுமொத்த தொண்டர்களும் விரும்பும் நிலையில், அவருக்கு ஆதரவாக பேசிய, 'அமைச்சர் ராஜுவின் பதவியை பறிக்க வேண்டும்; அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்' என, முதல்வர் பழனிசாமிக்கு, மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர்.
'அரசுக்கு விரோதமாக செயல்படும், 'ஸ்லீப்பர் செல்' அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் யார் யார் என, கண்காணிக்க வேண்டும்; தினகரனின் தில்லுமுல்லு செயல்களை அவிழ்த்து விட வேண்டும்' எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தன் கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, ஐந்து நாள் பரோலில் வந்துள்ளார்.

புகழ் பாடும் அமைச்சர்கள்


இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர். அவர்களை தொடர்ந்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜுவும், சசிகலாவின் புகழ் பாடி உள்ளார்.மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

எனக்கு ஆசாபாசங்கள், விருப்பு, வெறுப்புகள் எத்தனையோ இருக்கலாம். அத்தனையையும் அடக்கிய படி, ஜெயலலிதாவின், உண்மை தொண்டனாக இருந்து வருகிறேன். இந்த நேரத்தில், அமைதியாக, கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதே, அமைச்சராகவுள்ள என் கருத்து. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய,

சசிகலா பாடுபட்டுள்ளார்; அதில், மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. அந்தக் கருத்தை, நான் மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

கிளம்பியது சர்ச்சை


இன்றைக்கு இருக்கும் சூழலில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் எடுக்கக் கூடிய நடவடிக்கை களுக்கு, என் கருத்துகள், எந்த வகையிலும் பாதகமாக அமையக்கூடாது. தனிப்பட்ட முறை யில் கருத்துகளைக் கூறலாம்; அமைச்சராக என் கருத்துகளை கூற இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சராக உள்ள ராஜு, சிறைவாசம் அனுபவிக்கும், சசிகலாவின் புகழ் பாடியது, ஆளுங்கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது போன்று, அடுத்தடுத்து பலரும் பேச ஆரம்பித்தால், நிலைமை சிக்க லாகும் என, மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த அ.தி.மு.க.,வினரும் கொதிப்படைந்துள்ளனர்.

ஏற்கனவே, முதல்வருக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறித்தது போல,அமைச்சர் ராஜுவின் பதவியை பறித்து, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளனர்.

அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கமே, அ.தி.மு.க.,வில் இருக்க கூடாது என்பது தான், ஒட்டு மொத்த தொண்டர்களின் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தான், அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை தற்காலிக பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். அத்துடன், பிரிந்திருந்த அ.தி.மு.க., அணிகளையும் ஒன்றாக இணைத் தார். தற்போது, இரட்டை இலை சின்னம் பெறவும் முயற்சி மேற்கொண்டு உள்ளார்.

அதே நேரத்தில், சசிகலாவும், அவரால் துணை பொதுச் செயலர் என, நியமிக்கப்பட்ட தினகரனும், முதல்வர் பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பதற்கான, சதி வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு

Advertisement

வருகின்றனர். முதல்வர் பழனிசாமி அணியில், தங்களின், 'ஸ்லீப்பர் செல்' ஆதரவாளர்கள் உள்ளனர் என, தினகரன் அடிக்கடி கூறி வருகிறார். அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், சசிகலாவுக்கு ஆதரவாக, அமைச்சர் ராஜு பேசியுள்ளார்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தபடி, 'ஸ்லீப்பர் செல்'லாக இருந்து, குழி பறிப்பவர் கள் யார், யார் என, ரகசியமாக கண்காணித்து, அவர்களை ஓரம் கட்ட வேண்டும். தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் தில்லுமுல்லு களை எல்லாம், அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் பகிரங்கப்படுத்த வேண்டும். அதுவே, ஆட்சிக்கும், கட்சிக்கும் நல்லது. அதை முதல்வர் பழனிசாமி செய்வார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'பூ' கதை கூறி எச்சரித்த முதல்வர்:


தர்மபுரியில், நேற்று முன்தினம் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமி கூறிய குட்டி கதை:ஒரு கிராமத்தில், பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில், பூக்கள் பூத்து குலுங்கி, நறுமண வாசனையை பரப்பின. கிராம மக்கள் மரத்தடி யில் அமர்ந்து, அதை நுகர்ந்தனர். இதனால், மரத்தில் இருந்த ஒரு பூ, 'என் வாசனைக்காகவே மக்கள் இந்த மரத்தடியில் வந்து அமர்கின்றனர்' என, கர்வம் அடைந்தது.

அப்போது, காற்றானது, 'உன் இனிய வாசனைக்காகவே, கிராம மக்கள் மரத்தடியில் வந்து அமர்கின்றனர். ஆனால், அதன் பெருமை யும், சிறப்பும் மரத்திற்கு சென்று விடுகிறது; உனக்கு கிடைக்கவில்லை. என்னோடு வந் தால், உன்னை புகழின் உச்சத் திற்கு கொண்டு செல்வேன்' என, ஆசை வார்த்தை கூறியது.

காற்றின் பேச்சை கேட்டு, பூவும் மரத்தை விட்டு பிரிந்தது.காற்று புயலாகவும்,தென்றல் ஆகவும் வீசும் என்பதை, பூ அறிந்திருக்க வில்லை. சற்று நேரத்தில், காற்று பலமாக வீசத் தொடங்கியதும், பூ மண்ணில் விழுந்து, வாசனை இழந்து,காய்ந்து போனது.அது போல, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களில் யார் அங்கு சென்றாலும், காய்ந்த பூவின் நிலை தான் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.,வில் இருப்பவர்கள், தினகரன் அணியில் சேர்ந்தால், ஒன்றுமில்லாமல் போய் விடுவர் என்பதை, எச்சரிக்கும் வகையிலேயே, முதல்வர் இந்தக் கதையை கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (80)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Bala Jawahar K N - Abqaiq,சவுதி அரேபியா
12-அக்-201714:12:59 IST Report Abuse

Bala Jawahar K Nமோடியால் காங்கிரஸ் பக்கம் மக்கள் பாதி பேர் போய்ட்டாங்க இப்படி நியூஸ பார்த்து சசிகலா மேல மக்களுக்கு பரிதாபம் வந்திடும் போல இருக்கு.

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
09-அக்-201720:04:45 IST Report Abuse

S.Ganesanஒ இவர்தான் (ஸ்லீப்பர்) 'செல்'லூர் ராஜு என்பவரா ?

Rate this:
09-அக்-201719:42:18 IST Report Abuse

nanthuji,thailandமிக கேவலமான ஆராய்ச்சி செய்தோம் என்ற, குற்ற உணர்வே இல்லாத மூடர்கள்

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-அக்-201719:10:22 IST Report Abuse

D.Ambujavalliஇந்த இபிஎஸ் முதல் எல்லாரும் பத்துநாள் சசி பின்னால் பதுங்கியிருந்து, குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு அவங்க நியமித்துதானே இப்போது உட்கார்ந்திருக்கார்? என்ன செல்லூர் உரக்க சொல்லிவிட்டார். உள்ளே வைத்துக்கொண்டு எத்தனைபேர் இருக்கிறார்களோ ? முதல்வரானதும் தின்ற நன்றி மறந்துவிட்டது போலும்

Rate this:
vijayaraja - manama,பஹ்ரைன்
09-அக்-201718:06:06 IST Report Abuse

vijayarajaசசிகலா தான் மத்திய அரசின் சிம்மசொப்பனம் அவரை உள்ளே தள்ளி அதிமுகவை அபகரித்து விட்டனர்

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
09-அக்-201717:31:29 IST Report Abuse

நக்கீரன்நாடு முழு அடிப்படை வசதியின்றி மக்கள் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவருக்கு பாத்தீங்களா கதையை.

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
09-அக்-201717:21:54 IST Report Abuse

Jeeva தினகரனை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
09-அக்-201720:43:51 IST Report Abuse

த.இராஜகுமார் மொதல்ல டெங்குவை ஒழியுங்கப்பா அப்புறமா தினகரனை பற்றி பேசலாம்...

Rate this:
Prem - chennai,இந்தியா
09-அக்-201717:07:46 IST Report Abuse

Premஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது அதில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் கிடையாது தினகரன் சும்மா பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறான்

Rate this:
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
13-நவ-201713:15:25 IST Report Abuse

Thamarai Moorthy.C.V.தமிழகத்தில் சிறப்பான ஆட்சியா? சிரிப்பா சிரிச்ச ஆட்சி என்று தெரிவித்து இருக்கலாம், முதலில் சொகுசு பங்களா, சொகுசு பதவி, பிறகு எதிரி நண்பனாகிவிட்டான், வாழை இலையில் விருந்து, விருந்து முடிந்தவுடன் இலை குப்பைக்கு பொறுத்து இருப்போம்....

Rate this:
DURAIARASUR - coimbatore,இந்தியா
09-அக்-201716:42:12 IST Report Abuse

DURAIARASURஎன்னவோ சசிகலா மாட்டும்தா FRAUD மாதிரி தினமலர் போகஸ் செய்து நியூஸ் வெளியிடுகிறார்கள் எடப்பாடி மற்றும் பன்னீரு நல்லவர்கள் மாதிரி தினமலரில் எழுதுகிறார்கள் எல்லாருமே FRAUD என்று தினமலருக்கு தெரியாத அல்லது தெரியாதது போலா நடிக்கிறார்களா

Rate this:
09-அக்-201716:32:26 IST Report Abuse

vsubramanianSELLUR RAJUS DAYS AS A MINISTER ARE COUNTED

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement