தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதன்முறையாக நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்

Added : அக் 11, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகம்,Tamilnadu, நடமாடும் அஞ்சலகம், mobile post office, சென்னை,Chennai, தேசிய அஞ்சல் வாரம், National postal Week, தமிழக அஞ்சல் துறை, Tamilnadu Post Office, சம்பத் , Sampath,மஹாராஷ்டிரா,Maharashtra, இந்தியா,India, தபால் தலை , Postal, விரைவு தபால்,speed Post, பதிவு தபால்,Registration Postal, மணி ஆர்டர் , Money Order,

சென்னை:தமிழக அஞ்சல் துறையில், முதன்முறையாக, நடமாடும் அஞ்சலகம், சென்னையில் நேற்று, செயல்பாட்டுக்கு வந்துஉள்ளது.

தேசிய அஞ்சல் வாரம், அக்., 9 - 14 வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அஞ்சல் தினமான நேற்று, தமிழக அஞ்சல் துறை சார்பில், நடமாடும் அஞ்சல் அலுவலகம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை அறிமுகம் செய்து, தமிழக அஞ்சல் துறை தலைவர், சம்பத் பேசியதாவது:

அஞ்சல் துறையில் முதன்முதலாக, 1949ல், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்பட்டது. 1973ல், இந்தியாவில், 18 முக்கிய நகரங்களில், நடமாடும் அஞ்சலகம் செயல்பட்டது. 1996ல், இத்திட்டம் கைவிடப்பட்டது.தற்போது, மக்களின் தேவைக்கேற்ப, தமிழகத்தில், முதன்முதலாக,நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த அலுவலகம் தென் சென்னை, பரங்கிமலையை மையமாக கொண்டு இயங்கும். தினமும், மதியம், 12:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும்.அஞ்சல் துறையின் சேவைகளான, தபால் தலை விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணி ஆர்டர் உள்ளிட்ட, பிற சேவைகளை, மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 'என் அஞ்சல் தலை' என்ற திட்டமும், இந்த நடமாடும் அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும். இந்த சேவையை, மக்கள் பயன்பாட்டிற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை, மண்டல தபால் துறை தலைவர், ஆனந்த், தமிழக தபால், வணிக விரிவாக்கத் துறை தலைவர், வெங்கடேஷ்வரலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
k. sankaran - madurai,இந்தியா
11-அக்-201717:51:41 IST Report Abuse
k. sankaran 1960 - 1968 ஆண்டுகளில் இயங்கி வந்த மொபைல் சேவையில் , மாலை 5- 30 மணி முதல் சுமார் 25 நிமிடங்கள் , சென்னை , மயிலாப்பூர் , காமதேனு டாக்கீஸ் எதிரில் நிற்கும் . அப்போது அதில் சேர்க்கப்படும் தபால் , அடுத்த நாளே மதுரை , சிவகங்கை பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டது. அந்த சேவையில் அப்போது மணியார்டர் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Subramanian - Chennai,இந்தியா
11-அக்-201710:16:35 IST Report Abuse
Sitaraman Subramanian 1980 மற்றும் 1990 ல் மெரினா பீச் க்கு மாலை 05 :30 க்கு சரியாக மொபைல் போஸ்ட் ஆபீஸ் வரும், "முதன் முதலாக" இல்லை ஏற்கனவே இருந்து கை விடப்பட்ட மொபைல் போஸ்ட் ஆபீஸ் மீண்டும் வந்துள்ளது என்பதே சரி.
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Chennai,இந்தியா
11-அக்-201709:14:22 IST Report Abuse
Balasubramanian 1960 களிலேயே நடமாடும் தபால் வண்டிகள் ( mobile post office ) இருந்தன. அக்காலங்களில் நான் பூக்கடை என்னும் George Town பகுதியில் இருந்து இந்த சேவைகளை பயன் படுத்தி உள்ளேன். எனது நண்பரின் சகோதரர் அதில் வேலை செய்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X