ஆன்-லைனில் அமேசானை ஏமாற்றியவர் கைது| Dinamalar

ஆன்-லைனில் அமேசானை ஏமாற்றியவர் கைது

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆன்-லைன்,On-line, மொபைல் போன் மோசடி,mobile phone fraud,அமேசான் , amazon, விசாரணை,investigation, ஓட்டல் மேனேஜ்மென்ட் , hotel management, சிவம் சோப்ரா,shiv chopra, சிம் கார்டு,sim card, சுனில் ஜெயின், sunil jain,

புதுடில்லி: ஆன் - லைன் மூலமாக, 166 மொபைல் போன்களுக்கு, 'ஆர்டர்' கொடுத்து, பொருள் கிடைக்கவில்லை என, பணத்தை திரும்பப் பெற்று, 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, டில்லியைச் சேர்ந்த பட்டதாரி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆன் - லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும், அமேசான் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், டில்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.


போலி, 'சிம் கார்டு' :


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டில்லியைச் சேர்ந்த, ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரியான சிவம் சோப்ரா, 21, வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது, மொபைல் போன், 'சிம்' கார்டுகளை விற்கும் சுனில் ஜெயின், 38, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சுனில் ஜெயினிடம் இருந்து போலியான பெயர், முகவரி கொடுத்து, சிவம் சோப்ரா, 'சிம்' வாங்குவார். அதைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனமான அமேசானில், விலை உயர்ந்த மொபைல் போனுக்கு ஆர்டர் கொடுப்பார்.
நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முகவரியை கண்டுபிடிக்க முடியாதபோது, அருகில் இருப்பதாகக் கூறி, பார்சலை வாங்கிக் கொள்வார். பார்சலை பிரித்து, மொபைலை எடுத்து விட்டு, தனக்கு வந்த பார்சலில் எதுவுமே இல்லை என்று பொய்யான புகார் கூறி, பணத்தை திரும்பப் பெறுவார்.


புகார் :


இவ்வாறு, 144 போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி, 166 போன்களுக்கு ஆர்டர் கொடுத்து, நிறுவனத்தை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக பெற்றுள்ளார். இவ்வாறு கிடைக்கும் மொபைலை, ஆன் - லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள மார்க்கெட்டிலோ விற்றுவிடுவார்.தொடர்ந்து, தங்கள் மொபைல் போன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காததால் சந்தேகம்அடைந்து, அமேசான் நிறுவனம் புகார் கொடுத்தது.

விசாரணையில், சிவம் சோப்ரா இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், அவருக்கு உதவிய சுனில் ஜெயினையும் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து, 19 மொபைல் போன்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஒரு ஆண்டில் மட்டும், இவ்வாறு, 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
12-அக்-201711:20:55 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) விஞ்ஞான முறைப்படி திருட பயிற்சி எடுக்கவில்லை. நம்ம கட்டுமரத்துக்கிட்ட வேலை செய்துவிட்டு அப்புறம் தொழில் செய்து இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
12-அக்-201710:38:43 IST Report Abuse
Prabaharan அரசியலுக்கு வர எல்லா தகுதியும் இவருக்கு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201710:36:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சிவம் சோப்ரா மற்றும் சுனில் ஜெயின், பேரை பார்த்தாலே தெரிகிறதே.. பக்கா இந்து திருடர்கள் என்று.
Rate this:
Share this comment
parthiban - coimbatore,இந்தியா
12-அக்-201712:38:29 IST Report Abuse
parthibanஏங்க அது என்ன இந்து, முஸ்லீம், கிருத்துவ திருடர்கள்? உங்கள மாதிரியான ஆட்களை என்னவென்று சொல்வது......
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
12-அக்-201712:46:33 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan)நீ செய்யும் தொழிலை அவர்கள் செய்துள்ளார்கள்...
Rate this:
Share this comment
guru - Trichy,இந்தியா
12-அக்-201713:06:26 IST Report Abuse
guruபேர முதல்ல மாத்துடா பிக்காளி...
Rate this:
Share this comment
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
12-அக்-201713:23:19 IST Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan)டெல்லியில் சோர் பஜார் மற்றும் சென்னை ரிச்சி தெரு இங்க வரி காட்டாமல் மற்றும் போலி மின்னணு சாதனங்கள் அதிகம் விற்பவர்கள் யார் தெரியுமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X