திருப்பூர்- ஹவுரா இடையே சரக்கு ரயில் இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூர்- ஹவுரா இடையே சரக்கு ரயில் இன்று துவக்கம்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருப்பூர்- ஹவுரா இடையே சரக்கு ரயில் இன்று துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் - ஹவுரா இடையே, சரக்கு ரயில் சேவை, இன்று(அக்.,12) துவக்கப்படுகிறது.

திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு, தினமும் பல டன் சரக்குகள் அனுப்பப்படுகின்றன. தற்போதுள்ள ரயில்களில், தொழில் துறையினர் அவ்வப்போது சரக்குகளை அனுப்பினாலும், திருப்பூர் -- மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கு, பொருட்களை உடனுக்குடன் அனுப்புவதில், பல இடையூறுகள் ஏற்பட்டன.

'வட மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்ப, சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்' என, தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தெற்கு ரயில்வே, திருப்பூர் -- ஹவுரா இடையே, 'காட்டன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில், சிறப்பு சரக்கு ரயிலை, இன்று முதல் இயக்க முடிவு செய்துள்ளது.

வாரந்தோறும் வியாழன் மாலை, திருப்பூரில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ், சேலம், சென்னை, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஷ்வர், ஜெய்ப்பூர் வழியாக, ஹவுராவை, சனிக்கிழமை மதியம் சென்றடையும். ரயிலில், 20 சரக்கு பெட்டிகள் இருக்கும்; ஒரு பெட்டியில், 23 டன் சரக்குகள் ஏற்ற முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201708:20:46 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல வியாபாரம் வேண்டும் என்றால் நல்ல போக்குவரத்து வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X