இன்று சிறை திரும்புகிறார் சசிகலா| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்று சிறை திரும்புகிறார் சசிகலா

Added : அக் 12, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறை,திரும்புகிறார்,A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

'பரோலில்' சென்னை வந்த சசிகலா, இன்று(அக்.,12) மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்.

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.
அவரது பரோல் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். எனவே, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு, காரில் செல்ல திட்டமிட்டுள்ளார். 'அவரை வழியனுப்ப, திரளாக வாருங்கள்' என, தினகரன் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appu - Madurai,இந்தியா
12-அக்-201709:17:12 IST Report Abuse
Appu போயி தொலையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-அக்-201708:33:50 IST Report Abuse
தேச நேசன் அவங்களுக்கென்ன கவலை? திமுக காங்கிரஸ் மேலிடமே இவரது கூட்டணியை விரும்புவதால் கர்நாடக அரசு சிறையில் செவன் ஸ்டார் வசதிகூட செய்து கொடுப்பர் விரும்பும் நேரம் ஷாப்பிங் போகலாம் செல்போனில் கட்சியே நடத்தலாம் கவிழ்க்கலாம் சொத்துகுவிப்பு வழக்குப்படி எத்தனை நாள் வேண்டுமானாலும் பத்துகோடி X 3 = 30கோடி அபராதம் செலுத்தாமல் இருக்கலாம் தீர்ப்புப்படி நடக்கவேண்டிய சொத்துக்கள் பறிமுதலையும் தவிர்க்கலாம் ஸ்டாலின் ஒத்துழைப்பு அமோகம் இதுதாண்டா கொடுத்துவெச்சவரின் வாழ்க்கை
Rate this:
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
12-அக்-201709:12:37 IST Report Abuse
R.BALAMURUGESAN...நல்ல கற்பனை அய்யாவுக்கு....
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
12-அக்-201708:31:52 IST Report Abuse
rama தீயசக்திகள் எப்படி வேண்டுமானாலும் கஷ்டபடுத்தலாம் நட்புக்கும் நன்றிக்கும் இலக்கணம் நீங்கள் தான். நல்ல நண்பர்களை கொலை குற்றம் சாற்றும் தூரோகம் தமிழ்நாட்டில்தான் நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
12-அக்-201708:26:38 IST Report Abuse
Rajendra Bupathi அழக்கூடாது? எதுக்கு அழனும் ?அதுதான் அடிச்ச பந்து மாதிரி திரும்பி வரபோறோமில்ல? இப்போவே அழுதா ?இன்னும் சடங்கு சம்பிராதாயங்கள்ளாம் இருக்கு இல்ல?
Rate this:
Share this comment
Cancel
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
12-அக்-201708:00:51 IST Report Abuse
V .வெங்கடேஷ் ஒபிஸ், எடப்பாடி வைகையறா.. அப்பாடி... விட்டது ச(சி)னி என நினைக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201707:59:28 IST Report Abuse
Srinivasan Kannaiya நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று அதனாலே முழிக்குதே சசி கண்ணு...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
12-அக்-201707:57:58 IST Report Abuse
rajan கன்டைனர் லாரியை இந்த கைதியின் பின்னாலே ஓட்டி செல்லுங்கள் அத்தனை அன்னக்காவடிகளும் பின்னாடியே கூட்டமா வருவானுக. இது ஒன்னு தான் vali
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-அக்-201707:52:03 IST Report Abuse
Kasimani Baskaran தமிழகமே கண்ணீரில் மிதக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
12-அக்-201707:50:53 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. சென்று வா மகளே சென்று வா. கம்பியை சரியாக எண்ணி வா. எடுப்பு உன்னை தொடர்ந்து வரும் என்று நம்பி போ. மோடி ரொம்ப நாள் தாங்கி பிடி‌க்க முடியாது எடுப்பை என்றும் நம்பி போ.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
12-அக்-201707:36:09 IST Report Abuse
Amirthalingam Sinniah திருடியை திட்டி தீர்க்க வாருங்கள் வாருங்கள் என்று அழைப்பு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை