தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : அக் 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தர்மபுரி: தொடர்மழையால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், தொப்பையாறு, நாகாவதி, வாணியாறு, சின்னாறு, கேசர்குழி, தும்பலஹள்ளி உள்ளிட்ட அணைகள் மற்றும் மத்தளப்பள்ளம், ஈச்சம்பாடி ஆகிய அணைக்கட்டுக்கள் உள்ளன. இதில், மாவட்டத்தில் உள்ள அணைகள் மூலம், 8,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வந்ததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், அணைகள் மூலம் பாசனம் பெற்று வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் சற்று காலதாமதமாக துவங்கினாலும், சராசரி அளவை விட, கூடுதலாக பெய்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகளில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, 65 அடி உயரம் கொண்ட வாணியாறு அணையில், 31.49 அடியில் தண்ணீர் உள்ளது. 50 அடி கொண்ட சின்னாறு அணையில், 48 அடி தண்ணீர் உள்ளது. 50.18 அடி உயரம் கொண்ட தொப்பையாற்றில், 14.26 அடி தண்ணீர் உள்ளது. 25.20 அடி உயரம் கொண்ட கேசர்குழி அணையில், 11.48 அடி தண்ணீர் உள்ளது. 24.60 அடி உயரம் கொண்ட நாகாவதி அணையில், 8.85 அடி தண்ணீர் உள்ளது. 14.76 அடி உயரம் கொண்ட தும்பலஹள்ளி அணையில் மட்டும், எப்போதும் போல், தண்ணீர் வரத்து இன்றி உள்ளது. வடகிழக்கு பருவமழையும் வழக்கத்தை விட கூடுதலாக பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், சின்னாறு, வாணியாறு, தொப்பையாறு, கேசர்குழி, நாகாவதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், நிலங்களை உழுது, நெல் நடவு செய்து பயன்பெற முடியும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X