மீண்டும் சிறைக்கு கிளம்பினார் சசிகலா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் சிறைக்கு கிளம்பினார் சசிகலா

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (58)
Advertisement

சென்னை : 'பரோலில்' சென்னை வந்த சசிகலா, இன்று(அக்.,12) மீண்டும் சிறைக்கு கிளம்பி சென்றார்.
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.

பெங்களூரு சிறைக்கு மீண்டும் சென்றார் சசிகலா

அவரது பரோல் விடுமுறை, இன்று முடிவுற்றது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
13-அக்-201711:33:18 IST Report Abuse
kowsik Rishi இங்கே சசிகலாவுக்கு எதிராக சொல்லும் நபர்கள் பாஜக பினாமி ஆட்சிக்கு ஓ பி எஸ் ஆளுக்காள் தமிழ் நாட்டை திராவிட திரு நல் நாட்டை சீரழிக்க கூடும் கூட்டம் இது தமிழ் மக்களே உஷார் - சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட மோடி ஷா கூட்டத்திற்கு வரக்கூடாது எங்கே செல்வி ஜெ ஜெ விற்கே நன்றி காட்டாத தமிழ் மக்கள் நூறு சீட்டு மு.கருணாநிதிக்கு கொடுத்து தமிழ்மக்கள் நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள் அப்புறம் கண்ணீர் விடும் போது திராவிட தலைவர்கள் தான் வருவார்கள் தமிழ் மக்களே விழித்து கொண்ட நீங்கள் தூங்குவதை போலெ நடிக்காதீர்கள் காமராஜ், அண்ணாதுரை எம்.ஜி.ஆர். செல்வி ஜெ ஜெ ஒரு போதும் பாஜாகாவை ஆதரிக்க மாட்டார்கள் மோடி ஷா கூட்டம் நம் அண்ணாதுரையையே ஆக்கிரமிக்க பார்க்கிறது - டிவி ஷோ அண்ணாதுரை இருந்திருந்தால் பாஜாகா வை சேர்வார் என்று - தமிழ் மக்களே உஷார் சேற்றில் தான் தாமரை வளரும் ஆனால் ஒரு துளி சேறு கூட அதில் இருக்காது ஆனால் பாஜாகா முழுவதும் சேறு தான் அதில் அமிழ்ந்து போகும் தமிழ் நாட்டை பார்த்தல் ஐயோ பாவம் என்று தான் கதற வேண்டும் காலம் தான் பதில் சொல்லும் திராவிட அடுத்த கட்ட தலைவர்களே கை கோருங்கள் தமிழ் நாட்டை திராவிட நல் தமிழ் நாட்டை காப்பாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
12-அக்-201717:48:05 IST Report Abuse
kowsik Rishi ஒன்றும் மட்டும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நடத்தி தன்னை பாதிக்காத விதத்தில் மு.கருணாநிதியோடு புரிதலோடு ஆட்சி செய்து போய் சேர்த்தார் . செல்வி ஜெ ஜெ - இதோ மு. கருணாநிதியை அழித்துவிடுவேன் திமுகவை இல்லாமல் ஆகிவிடுவேன் என்று சொன்ன செல்வி ஜேஜே தான் இன்று அழிந்து போய் விட்டார் . மு.கருணனைதி ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல தீயசக்தி என்று எம்.ஜி.ஆர் சொன்னார் அதை புரிந்துகொண்டு செல்வி ஜெ ஜெ செயல்பட்டிருக்கவேண்டும் இன்று செல்வி ஜெ ஜெ தான் வாழவும் முடியாது சாகவும் மூடியது என்ற நிலையில் செத்தே போனார் உயிரோடு இருந்தால் நான்கு ஆண்டு சிறை அப்புறம் அரசியல் வாழவு சூன்யம் முதல்வர் பதவி அரசு மரியாதை மரணம் அடக்கம் என்று எதுவுமே இல்லை ஆகவே தான் செல்வி ஜெ ஜெ தொடர் ஆட்சி கிடைத்தாலும் சிறையில் வஙழ்ந்து ஒரு பயணம் இல்லை இவ்வள்வு காலம் வாழந்த அரசியல் வாழ்விற்கு ஸிரோ தான் பயன் என்று தெரிந்து செல்வி ஜெ ஜெ தன்னை அழித்துக்கொண்டார் அரசியல் வாதிகளே மு.கருணாநிதி பற்றி அவ்வளவு சீப்பாக நினைக்காதீர்கள் அவர் தீய சக்தி தமிழ் நாட்டை விடாது பிடித்திருக்கும் அடைத்த தீயசக்தி மு.கருணாநிதி என்ன செய்வது தமிழ் மக்களுக்கு எல்லாம் எதிராகவே உள்ளது கடவுள் தான் தமிழ் நாட்டை தமிழ் மக்களே காப்பற்ற வேண்டும் கடவுள் என்றால் உடனே பாஜாக சொல்லும் அதான் நாங்கள் ஓ பி எஸ் பினாமி ஆட்சி என்று சொல்லும் - ஐயோ தலை சூற்றுகிறதே - ஐயோ என் அருமை தமிழ் நாடே உனக்கு இப்படி ஒரு நிலையா ? கடல் , ஆழி அலை ஊழி தீயசக்தி என்று எல்லாம் தமிழ் நாட்டை தானே நாசம் செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
12-அக்-201717:11:11 IST Report Abuse
shekaran siraikkuthana poirukkaaanga enamoo miltarykku pona mari athya pathiyae solluringa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X