தொழில் பயிற்சி : 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொழில் பயிற்சி : 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (91)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தொழிற்பயிற்சி, Vocational Training, இளைஞர்கள், Youth, ஜப்பான், Japan,  தர்மேந்திர பிரதான், Dharmendra Pradhan, வேலைவாய்ப்பு, Employment,  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் , Union Minister Dharmendra Pradhan, இந்திய தொழில்நுட்ப துறை, Indian Technical Department, புதுடில்லி , New Delhi, மத்திய அரசு ,Central Government,

புதுடில்லி : மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிக்காக 3 லட்சம் இளைஞர்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்திய தொழில்நுட்ப துறையை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நிதி செலவிட ஜப்பான் முன்வந்துள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிய முதலீடுகளும் இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மூன்று நாள் பயணமாக நான் அக்டோபர் 16 ம் தேதி டோக்கியோ செல்கையில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்திய இளைஞர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதனால் பல இளைஞர்களுக்கு ஜப்பானில் தங்கும் வசதியுடனான வேலைவாய்ப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏறக்குறைய 50,000 இளைஞர்கள் ஜப்பானில் வேலைவாய்ப்பு பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.தொழில் பயிற்சி: இளைஞர்களை ஜப்பான் அனுப்ப திட்டம்

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
12-அக்-201716:51:49 IST Report Abuse
ganapati sb புல்லட் ட்ரைன் ஸ்மார்ட் சிட்டி தொழில் நகரம் போன்ற ஜப்பானிய தொழில் நுட்பம் முதலீடு கொண்டு இந்தியாவில் செய்யப்பட இருக்கும் வேலைகளுக்கு படித்த இளைஞர்களுக்கு இது பயன் படும் அவர்களில் சிலர் ஜப்பானிலேயே வேலை கிடைக்கும் ஜப்பானுக்கும் பொருளாதார சுழற்சி மற்றும் வளர்ச்சி நமக்கும் தொழில் நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு வளர்ச்சி மோடி அபே நட்பால் நல்லது நடக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201716:26:11 IST Report Abuse
அப்பாவி இதுலேயும் சமூக நீதி உண்டா? இல்லே நீட் தேர்வு விலக்கு மாதிரி உண்டா? தமிழர்கள் படிக்காத மேதைகள். பெரும்பாலான முதல்வர்கள் ஹைஸ்கூல் கூட போனதில்லை...கூத்தாடிகள் வேறெ. போய் ஜப்பானை அவனுக்கே விற்றுவிட்டு வந்துவிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201716:23:02 IST Report Abuse
அப்பாவி நம்ம விட 10 மடங்கு சிறியது ஜப்பான்.... அவங்க கிட்டே நாம போய் ட்ரெய்னிங் எடுக்கணுமா? உள்ளூர் IIT, MIT, NIT எல்லாம் என்ன பண்றாங்க? 5 பைசாவுக்காவது சுயமா சிந்திப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை