தமிழகம் வரும் மத்திய மருத்துவ குழு: ஓ.பி.எஸ்.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வரும் மத்திய மருத்துவ குழு: ஓ.பி.எஸ்.,

Added : அக் 12, 2017 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், Deputy Chief Minister O. Panneerselvam, பிரதமர் மோடி, Prime Minister Modi, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, தமிழகம், Tamil Nadu,டெங்கு ,Dengue,   மின்சார உற்பத்தி, Electricity Production,நிலக்கரி,Coal,  அ.தி.மு.க.,AIADMK, ஓ.பி.எஸ்.,OPS,புதுடில்லி, New Delhi,

புதுடில்லி: தமிழக டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக, பிரதமரை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.முதல்வர் கொடுத்து அனுப்பிய மனு


டில்லியில், இன்று பிரதமர் மோடியை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். முதல்வர் பழனிசாமி தமிழக வளர்ச்சிகள் குறித்த கோரிக்கை மனுவை கொடுத்து அனுப்பினார். அதை பிரதமரிடம் கொடுத்துள்ளேன். தமிழக மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிலக்கரி தரப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


மன வருத்தம் இல்லை


என்னை தவிர பிற யாரையும் சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார் என்பது மீடியாக்களின் கருத்து. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின் துறை அமைச்சரை மதியம் சந்திக்க உள்ளோம். பிரதமருடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை. தர்ம யுத்தம் முடிந்ததால் தான், இரு அணிகளும் ஒன்றாக இணைந்துள்ளன. முதல்வர் பழனிசாமியுடன் எந்த மன வருத்தமும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கும், டெங்கு ஒழிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய, மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனக்கும், சேகர்ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல், கீழ்மட்டத்தில் இருந்து உழைத்தால் தான் கட்சியில் சேர்க்கப்படுவார்கள். தினகரனுக்கு இனி அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை. முதல்வர் பழனிசாமி அனைவருடனும் கலந்து ஆலோசித்து தான் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
12-அக்-201722:55:43 IST Report Abuse
murugu மகாராஷ்டிராவில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:49:46 IST Report Abuse
balakrishnan ஜெ அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு குழு அனுப்பினார்கள் அது போலவா, அவர்கள் வந்து என்ன செய்யப்போகிறார்கள், செயல்படவேண்டியது நீங்கள் தானே தவிர அவர்கள் இல்லை, நீங்க எதுக்கு போனீங்க, என்ன பேசுனீங்க என்றெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், தமிழகத்து மக்களுக்கு காது குத்தும் வழக்கம் இருக்கிறது அது சிறுவயதிலேயே குத்திவிடுவார்கள், நீங்கள் புதுசா குத்த முயற்சி செய்யாதீங்க
Rate this:
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
12-அக்-201716:45:03 IST Report Abuse
rajasekar அந்த மருத்துவ குழுவுக்கு டெங்குவை பரிசாக அளிக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-அக்-201716:26:03 IST Report Abuse
vnatarajan தினமலர் அவர்களே தாங்கள் தினமும் வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்து அதில் உங்கள் கருத்துக்கள் யார்மனதையும் புண்படுத்தாமல் நாகரீகமான முறையில் இருக்கவேண்டும் என்றுகேட்டுக்கொண்டும் வந்த கருத்துக்களை உரியமுறையில் தணிக்கை செய்தும் வெளியிடப்படுவதாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் பல நேயர்களின் கருத்துக்கள் மனதை புண்படுத்துவதுபோலவும் மிகவும் அநாகரீகமாகத்தானே இருக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
Rajesh - aruppukottai,இந்தியா
12-அக்-201715:09:01 IST Report Abuse
Rajesh What they can do? They couldn’t make any changes in a single hospital in UP to sort out oxygen shortages
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
12-அக்-201714:47:04 IST Report Abuse
John Shiva   U.K பன்னீரின் வாயில் இருந்து வருவது எல்லாம் பொய் .சேகர் ரெட்டியுடன் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு பின்பு அவரை எனக்கு தெரியாது என்று சொன்னவர்தான் இந்த பன்னீர்.இவர் தனியா சந்தித்ததின் நோக்கம் பழனிசாமியை எப்படி அகற்றுவது ,பிஜேபி இன் சின்னத்தில் அண்ணா தி மு க உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் .எங்களுக்கு இனி இரட்டை இலை தேவை இல்லை .தேர்தல் கமிஷனுக்கு சொல்லுங்க இரட்டை இலை தீர்ப்பை காலவரை இன்றி ஒத்திவைக்க .சசியை மடக்கி சிறையில் வைத்ததட்கு நன்றி.ஆனால் தினகரனை சிறையில் அடைத்தால் பிஜேபி தமிழ்நாட்டில் அண்ணா தி முக வுடன் சேர்ந்து தாமரை இலை யில் போட்டி இட்டு பிஜேபி ஆட்சி அமைக்கும் .மோடியே துணை என்று அலறிவிட்டு சதி திட்டங்களையும் பேசிவிட்டு பன்னீர் திரும்ப போகிறார் தமிழ்நாட்டுக்கு .
Rate this:
Share this comment
jayvee - chennai,இந்தியா
12-அக்-201715:43:52 IST Report Abuse
jayveeபி ஜே பி தமிழகத்தில் ஆட்சி செய்ய அணைத்து தகுதியும் உள்ள கட்சி.. திருட்டு காங்கிரஸ் மற்றும் கொள்ளைக்கார திமுகவிற்கு உரிமை உள்ளதே ஆனால் பி ஜே பி க்கும் தகுதி உள்ளது.. ஜான் இயேசு அவர்களே.. (அது என்ன ஷிவா.)...
Rate this:
Share this comment
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
12-அக்-201720:45:43 IST Report Abuse
John Shiva   U.Kஎவருக்கும் தமிழகத்தில் ஆட்சி செய்ய உரிமை இருக்கு .நான் சொல்வது என்னவென்றால் MGR ஆள் உருவாக்கப்பட்ட அண்ணா தி மு க வை அம்மாவால் வளர்க்கப் பட்ட கட்சியை BJP உடைத்ததை மன்னிக்க முடியாது .எடப்பாடியும் ,பன்னீரும் கட்சிக்கு விசுவாசமில்லாமல் இருப்பது தமிழரின் வீரத்தை கேள்விக்குறியாகி இருக்கிறதுBJP யின் சரியான கொள்கைகளை ஆதரிக்கலாம் .தி மு க வும் காங்கிரசும் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த கட்சிகள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற வீட கூடாது...
Rate this:
Share this comment
Cancel
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
12-அக்-201714:35:06 IST Report Abuse
எல்.கே.மதி தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய, மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.மானம் கெட்ட துணை முதல்வர். இங்குள்ள சுகாதார அமைச்சரும், சுகாதாரத்துறையும் சீரழிந்து விட்டது என்று மோடிக்கு படம் போட்டுக் காட்டவா இவரது டெல்லி பயணம்? காதிலே பூ சுத்துங்க
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201713:58:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மருத்துவ குழுவை அனுப்பி இவரையும் சேர்த்து மந்திரிசபையில் இருப்பவர்களுக்கு முதுகெலும்பு எப்படி காணாம போச்சுன்னு கண்டுபிடிக்கணும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-அக்-201715:43:44 IST Report Abuse
Nallavan Nallavan\\\ முதுகெலும்பு எப்படி காணாம போச்சுன்னு //// மத்தியக் குழுவை அனுமதிப்பதால் தன்மானத்துக்கு இழுக்கு என்ற பொருளில் சொல்லியிருக்கிறீர்கள் ..... இதில் அரசியலுக்கு இடமில்லை ..... மாநில அரசின் சுகாதாரத்துறை வசம் சில தொழில்நுட்பங்கள் இல்லாதிருக்கலாம் ..... உதாரணமாக சோதனைக்கான கருவிகள் (ANALYSER), நுண்ணோக்கிகள் (MICROSCOPE) ..... சிலரது கருத்துக்களில் அவர்களது அறிவு வளர்ச்சி, கல்வியறிவு வெளிப்படுகிறது ..... இது எனக்கும் பொருந்தும் .......
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201713:53:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தினகரனுக்கு இனி அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை
Rate this:
Share this comment
12-அக்-201714:38:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நீ வெட்டியாக இருந்தால் அதற்காக செய்தியை ஈ அடித்தான் காபி அடிக்க வேண்டுமா ?...
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
12-அக்-201715:38:07 IST Report Abuse
Appuவெட்டிகளுக்கு பதில் கொடுக்கும் அறிவாளியே.. நீ ரொம்ப அறிவு ஒளி..போ போயி மட்டன் பிரியாணி சாப்புட்டு பிரஸ் ஆவு... மந்த புத்தி போவ மட்டன் சுக்காவும் சேர்ந்து சாப்புடு......
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-அக்-201713:53:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எனக்கும், சேகர்ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:50:31 IST Report Abuse
balakrishnanஅப்ப ரெண்டு பெரும் சேர்ந்து திருப்பதி போனதெல்லாம் நடிப்பா கோபால்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை