அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரியில் மழை வாய்ப்பு| Dinamalar

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம்,புதுச்சேரியில் மழை வாய்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
தமிழகம், 
Tamil Nadu,மழை, Rain, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், Chennai Meteorological Center Director Balachandran, வங்க கடல் ,Bengal Sea, தென்மேற்கு பருவமழை,Southwest Monsoon,  வடகிழக்கு பருவமழை,Northeast Monsoon,  வானிலை மையம்,Weather Center,  புதுச்சேரி, Puducherry,
Share this video :
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (அக்.,12) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகவில்லை. நான்கைந்து நாட்களில் படிப்படியாக விலகும். வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் அறிகுறியே தோன்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baski - Chennai,இந்தியா
12-அக்-201714:39:53 IST Report Abuse
baski நிலத்தடி நீர் மட்டம் உயரனும்...
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
12-அக்-201714:18:03 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் எத்தனை தலைமுறைக்கு இந்த மாதிரி வானிலை அறிக்கை கொடுக்க போறீங்க. மாவட்ட வாரியா உங்களால வானிலை அறிக்கை கொடுக்க முடியாதா. எப்ப பார்த்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரின்னுட்டு. புதுமை புகுத்தாத எதுவும் மக்கள் ஆதரவை இழக்கும். இந்த துறையால் மக்களுக்கு என்ன பயன்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-அக்-201714:05:12 IST Report Abuse
Kuppuswamykesavan ஆமாமாம், வருசா வருசம், மழை வரும் போகும். எப்பவும் போல, எங்கள் குடிநீர் பிரச்சனைகள்?. காலி பிளாஸ்டிக் குடங்களுடன், தண்ணீர் லாரிகள் வரவுக்காக, இரவு பகல் பாராமல் காத்திருப்பதுதான். (ஓர் சென்னை வாசியின் மைண்ட் வாய்ஸ்).
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-அக்-201713:25:16 IST Report Abuse
தேச நேசன் உள்ளத்திலே பெரிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை அரசுக்குறிப்பில்  விவசாய ஏரியென குறிப்பிடப்பட்டுள்ளதால் அதனை ஆழப்படுத்தவோ தூர்வாரவோ சட்டப்படி இயலவில்லை . உடனடியாக குடிநீர் ஏரியாக மறுவகைப்படுத்தி ஆழப்படுத்தவேண்டும். அடையாறு ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை ராணுவ உதவியுடனாவது அகற்றாவிட்டால் மீண்டும் வெள்ள பாதிப்புகளுக்கு வாய்ப்பதிகம்.
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
12-அக்-201713:08:22 IST Report Abuse
Appu ம(லை)ழை...அண்ணாமலே ..மட்டன் வறுவல் அண்ணாமலை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.