சிறை வாழ்க்கை கொடுமையானது; நடராஜன் சொல்படி நடக்க வற்புறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறை வாழ்க்கை கொடுமையானது; நடராஜன் சொல்படி நடக்க வற்புறுத்தல்

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (43)
Advertisement
 அ.தி.மு.க, A.D.M.K, சசிகலா நடராஜன், Sasikala Natarajan,சிறை வாழ்க்கை,  jail life, சொத்துக் குவிப்பு வழக்கு,property accumulation case, பரோல்,  parole,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, Bangalore parappana Akrahar Central jail,கிருஷ்ணப் ப்ரியா,  Krishna Priya, சென்னை குளோபல் மருத்துவமனை,Chennai Global hospital, சசிகலா, Sasikala,சென்னை,chennai

சென்னை: ' நல்லதோ, கெட்டதோ, நடராஜன் குடும்பத்திலேயே பெரிய மனிதர். நான் இல்லாத சூழலில், அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை' என, , தினகரனை, சசிகலா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினகரனுடன் சந்திப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஐந்து நாட்களுக்கு முன், கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளி வந்தார். சென்னையில், தனது அண்ணி மகள் கிருஷ்ணப் ப்ரியாவின் தி.நகர் வீட்டில் தங்கியிருந்து, சென்னை குளோபல் மருத்துவமனைக்குச் சென்று நடராஜனை சந்தித்து திரும்பினார் .
ஒரு நாளில் ஒரு முறையாவது, குளோபல் மருத்துமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து, அதன்படி செய்த சசிகலா, மற்ற நேரங்களில், கட்சிக்காரர்களை ரகசியமாக சந்தித்தார். மற்றபடி, அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே உறவுக்காரர்கள்தான். ஆனால்,தினகரனை அழைத்து, பல முறை பேசியிருக்கிறார். கடைசியாக, நேற்று 11ம் தேதி, தினகரனை சந்தித்த சசிகலா, ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டு பேசியிருக்கிறார்.வேறு வழியில்லை

'சிறை வாழ்க்கை கொடுமையானதுதான். அதுவும் ஒரு பெண்ணுக்கு, சிறை வாழ்க்கை மிகப் பெரிய தண்டனை தான். 2 ஜி வழக்கில் கைதாகி, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, கிட்டதட்ட ஆறு மாத காலம் வரை சிறையில் இருந்தார். அந்த சூழ்நிலையை, அவர் ஒரு தைரியமிக்க பெண்ணாக எதிர்கொண்டார். அதே நிலைமை, தற்போது, எனக்கும், இளவரசிக்கும் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது; வேறு வழியில்லை.


இன்றோடு பரோல் முடிகிறது. மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதை நினைத்தாலே, நெஞ்சு பகீர் என்கிறது. இப்படிப்பட்ட சூழலில், சிறையில் இருந்து நான் ஆலோசனை கொடுத்து கட்சியை நடத்து என்றால், உன்னால் முடியவில்லை. ஆனால், கட்சி தான் எனக்கு முக்கியம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சரியான முடிவெடுக்கும், ஆலோசனை சொல்லும் நபர் ஒருவர் என்றால், அது என் கணவர் நடராஜனே. அதனால், அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்' என்று, உருக்கமாக சொல்லி இருக்கிறார்.ஆனால், தினகரன் தரப்பில், அதை ஏற்று செயல்பட தயாரில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-அக்-201705:41:36 IST Report Abuse
Ramasami Venkatesan சிறை வாழ்க்கை கொடுமையானது. இப்போதான் புரிகிறதா. கோடிகளில் கொடுத்து சுகமான சிறை வாழ்க்கையிலேயே இவ்வளவு கொடுமை. அப்போ ஜெ வுடன் ஜெயிலில் இருந்தபோது இந்த கரிசனம் இல்லையே. எம் ஜி ஆர் ஆரம்பித்து ஜெயலலிதாவால் கட்டி காத்த அ தி மு க உங்களிடம் வந்து மறைந்துவிடக்கூடாது. அரசியல்வாதிகளுக்கும் மந்திரிகளுக்கும் பாயும், அளவுக்கு மீறிய சொத்து குவிப்பு, இவர்கள் மீதும் பாயவேண்டும். இதற்கு ஒரே முன்னுதாரமாக இருக்கக்கூடிய தண்டனை சொத்து பறிப்பு குடும்பத்தாரிடமும் பேனாமிகளையும் சேர்த்து. இப்போது சிறையில் தண்டனை கிடைத்தாலும் தண்டனை முடிந்து திரும்பி வந்ததும் அந்த சொத்துக்களை வைத்து சுகமாகவே வாழ்கிறார்கள். இனி சொத்து சேர்க்கமுடியாவிட்டாலும் சேர்த்த சொத்தே நான்கைந்து தலைமுறைக்கு காணும். அப்படி பார்த்தால் இது ஒரு தண்டனையே இல்லை. தண்டனை என்பது மறுபடியும் செய்யமுடியாத தடுப்பு தண்டனை (டீடெரன்ட் பனிஷ்மென்ட் ) ஆக இருக்கவேண்டும். சிறைக்கு செல்லும்போது கூட புன்னகையோடு கை அசைத்து செல்லும் விதம் அறவே ஒழியவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
13-அக்-201701:03:55 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தப்பாக நடக்கும்போது இந்த ஞானோதயம் வராலேயே தாயீ. எவ்ளோ பேர்களின் சொத்துக்களை அராஜகமான வழியே போயி பிடுங்கினீங்க அப்போ சோகமா இருந்துச்சா அவா எல்லோருடைய சாபமும் உன்னை இத்தோட விடாது பாத்துண்ணே இரு
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
12-அக்-201721:49:24 IST Report Abuse
balasubramanian திருந்துவது என்பதெல்லாம் முடியாதுங்க ,நான்கு வருடங்களில் வெளியே மறைமுக எதிரிகள் உருவாகி விடுவார்கள் .வெளியே வந்து பாறாங்கல் மனதோடு அவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டும் .கொஞ்சம் கஷ்டம்தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை