சிறுமி ஆருஷி கொலை வழக்கு; பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்| Dinamalar

சிறுமி ஆருஷி கொலை வழக்கு; பெற்றோரை விடுவித்தது ஐகோர்ட்

Added : அக் 12, 2017 | கருத்துகள் (44)
Advertisement
சிறுமி ஆருஷி கொலை ,girl Aarushi murder, பெற்றோர் ,parent, விடுதலை,release, அலகாபாத், Allahabad, ஆயுள் தண்டனை, life imprisonment,  அலகாபாத் ஐகோர்ட் ,Allahabad HC, ஆருஷி தல்வார், Aarushi Talwar, ஹேம்ராஜ்,Hemraj, ராஜேஷ் தல்வர்,  Rajesh Talwar, நுபுர் தல்வார் , Nupur Talwar, சி.பி.ஐ. விசாரணை , CPI Investigation,

அலகாபாத்: சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.


கொலை


கடந்த 2008ல், உ.பி., மாநிலம் நொய்டாவில், ஆருஷி தல்வார், என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ், 45, ஆகியோர், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்த இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்தது.


ஒத்திவைப்பு


நாட்டை உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் 2013ம் ஆண்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு இன்று (அக்., 12) ஒத்திவைக்கப்பட்டது.


தீர்ப்பு


இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் நிரபராதிகள் எனவும், அவர்கள் கொலை செய்யவில்லை எனக்கூறி, வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் சந்தேகத்தின் பலனை இருவருக்கும் அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201703:05:59 IST Report Abuse
Mani . V இந்தியாவில் பணம் படைத்தவர்கள் எத்தனை கொலை செய்தாலும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அட போங்கய்யா நீங்களும், உங்கள் நீதிகளும்.
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
12-அக்-201720:40:05 IST Report Abuse
Mal Good that the parents are let free... The loss of their only child itself is enough for them... Why torture them again.... And yes this is a lesson to all... It's not enough if people just give birth... Before parenting you can be anything but after a child is born the responsibility is yours... Money is not important being with the kid is important for a mother... This is what our ancestors did. . While they regarded ladies as equal to gods n worshipped them as godesses, they had them in kitchen to ensure a healthy family in every family... And to be a moral support to all in family... Be it oldies, hubby or kids.... Because God knew ladies are capable of giving everything , expecting nothing... And every shakthi in home made a great country....
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
12-அக்-201720:30:43 IST Report Abuse
Shanu இதுவே தமிழ்நாடு போலீஸ் ஆக இருந்தால், யார் கொலை செய்தார்கள் என்று கண்டு பிடித்திருப்பார்கள். வடநாட்டுகாரங்கள் முட்டாள்கள். தென் இந்திய மக்களை போல் ஸ்மார்ட் கிடையாது.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
13-அக்-201714:23:01 IST Report Abuse
parthaதிமுகவின் கு ப கிருஷ்ணன் , நேரு தம்பி ராமஜெயம் ஆகிய கொலைவழக்குகளையும் வடநாட்டுகாரங்கள் முட்டாள் போலீஸ் தான் விசாரிக்கிறார்களா??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X