நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கருணை வேண்டாம்: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கருணை வேண்டாம்: ஐகோர்ட்

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீர்நிலைகள், Water Resources,ஆக்கிரமிப்பு, aggressive, சென்னை ஐகோர்ட், Chennai High Court, கலெக்டர்கள்,Collector,  சென்னை, Chennai,

சென்னை: நீர்நிலைகளை காப்பாற்ற தேவைப்பாட்டால், கருணை காட்டாமல் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.


ஆஜர்

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வழக்கில் நெல்லை, விழுப்புரம், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், தூத்துக்கடி, தர்மபுரி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.

13 கலெக்டர்கள் ஐகோர்ட்டில் ஆஜர்


உதவ தயார்


அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நீர்நிலைகளை காப்பாற்ற, தேவைப்பட்டால் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கலாம். நீர்நிலைகள் முக்கிய ஆதாரம் என்பதால், அதனை பாதுகாக்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமான பணிகளுக்கு இடையே இயற்கையை பாதுகாக்க நேரம் ஒதுக்க வேண்டும். பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீர்நிலைகளை காக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் இடையூறு இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். கீழ்நீதிமன்றங்கள் ஏதும் விசாரிக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம் எனக்கூறினார்.
தொடர்ந்து அடுத்த முறை ஆஜராவதிலிருந்து கலெக்டர்களுக்கு விலக்கு அளித்து விசாரணையை நவம்பர் 17 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Advaiti - Chennai,இந்தியா
13-அக்-201713:51:08 IST Report Abuse
Advaiti வேறெந்த மாநிலங்களிலும் நீர் நிலைகள் தெய்வமாகப் போற்றப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன. அவைகளும் மக்களைக் குழந்தைகளைப் போலக் காக்கிறது. கருணை காட்டாமல் வேலை செய்தால் கலெக்டர் மேலும் கருணை காட்டப்பட மாட்டாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:08:41 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை சட்டபூர்வமாக விக்க அனுமதித்தவர்களை தண்டியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
13-அக்-201707:43:19 IST Report Abuse
அம்பி ஐயர் பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கல்லூரிகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டன.... கலெக்டர்கள் மற்றும் தாசில்தார் இதர அதிகாரிகளின் ஒத்துழைப்போடு...
Rate this:
Share this comment
Cancel
Uyirinam - Frankfurt,ஜெர்மனி
13-அக்-201705:44:53 IST Report Abuse
Uyirinam அப்புறம் நீங்களே அகற்றுவதற்கு stay தருவீங்களே எசமான் ..
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - Hyderabad,இந்தியா
13-அக்-201701:19:35 IST Report Abuse
Viswanathan நீர் நிலைகள் ஆக்ரமிப்பினால் தேசமே வறண்டு போய் விட்டது. எல்லா மாகாணங்கள் உயர் நீதி மன்றங்களும் அந்த, அந்த அரசங்களுக்கு நீர் நிலைகளை காப்பாற்ற சொல்லி உத்திரவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201723:08:02 IST Report Abuse
அப்பாவி இவிங்க பாதுகாக்கக் கூடிய ஒரே நீர்நிலை கடல்தான். ஏரிகளை மீட்கவேண்டுமென்றால் நங்கநல்லூர் போன்ற பெருங்குடியிருப்புகள் கலியாக வேண்டும். எந்த ஜ்ட்ஜ் எந்த ஏரியில் வீடு கட்டியிருக்கிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:23:33 IST Report Abuse
balakrishnan இது போன்ற உத்தரவுகள் ஏற்கனவே உள்ளன, ஆனால் என்ன பயன், எந்த ஆக்கிரமிப்பையும் யாரும் அகற்றவில்லை, கரண்ட் வசதியோடு, சௌகரியமாகவே இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-அக்-201718:09:01 IST Report Abuse
Srinivasan Kannaiya பல நீர்நிலைகள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்றுக்கு அப்பறம்தான் எம் எம் டி ஏ வழியாக பெருவாரியாக தனியார் கல்வி கூடங்கள்... ரியல் எஸ்டேட் உரிமையாளரிகளுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. இது எம் எம் டி ஏ வின் பதிவேடுகளில் இதுவரை அவற்ற்றை அழிக்காமல் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்..அல்லது அந்த பகுதி பத்திர பதிவு அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம்... இதை நீதிமன்றம் மட்டும் நினைத்தால் நடக்காது... நடுவண் அரசும் மாநில அரசும் நீதிமன்றமும் கைகோர்த்தால்தான் நீர் பிடிப்பகுதிகள், அனைத்துவகை பொறம்போக்கு நிலங்களை மீட்டு எடுக்கமுடியும்.,.ஒரே ஒரு நபரின் தூண்டுகோலால தான் இந்தநீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள் அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டது...
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
12-அக்-201717:47:44 IST Report Abuse
Nalam Virumbi வட நாட்டில் , ராஜஸ்தான், குருக்ஷேத்திரா, மற்றும் உ பி யில் மதுரா, போன்ற இடங்களில் நீர்நிலைகள் பாதுகாக்கப் படுகின்றன. தமிழ் நாட்டில்தான் ஆக்கிரமிப்புகள் அதிகம். அக்காலத்து தமிழ் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்கினார். நவீன திராவிடத் தமிழன் அவற்றை அழித்து பிளாட் போட்டு விற்கிறான்.
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
12-அக்-201718:32:51 IST Report Abuse
balakrishnanஒரு சில இடங்களை தவிர இந்தியா முழுவதும் இது தான் பிரச்சனை, நான் கடந்தவாரம் காரைக்குடி சென்றிருந்தேன் அங்கு அழகான முறையில் சிறப்பாக ஊர் மக்களே ஒன்று கூடி மிக சிறப்பாக குளத்தை சீர்படுத்தி இருக்கிறார்கள், இது போல இன்னும் பல இடங்களில் நன்றாகவே உள்ளது திருவாரூர் கமலாலய குளம் இன்றும் சிறப்பாக பராமரித்து வருகிறார்கள், கலைஞர் அவர்களின் சொந்த ஊர் திருக்குவளை கோயில் அருகே இருக்கும் குளம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது, இருந்தாலும் இது பத்தாது, ஆக்கிரமிப்புக்கள் இரும்புக்கரம் கொண்டு அகற்றப்படவேண்டும்,...
Rate this:
Share this comment
Kumz - trichy,இந்தியா
12-அக்-201721:18:01 IST Report Abuse
Kumz பாலகிருஷ்னா தி மு கவுக்கு உம்மை போல யாரும் சொம்பு தூக்க முடியாது...
Rate this:
Share this comment
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
13-அக்-201702:39:35 IST Report Abuse
Rathinasami Kittapaகோயில் குளங்கள் மட்டும் அல்லாது, பாசனத்துக்கான ஏரிகளும்,குளங்களும், ஆறு, வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் ஆம்பூருக்குள் ஓடும் பாலாறு சுமார் 450 மீட்டர் அகலமிருந்தது, தற்போது 100 மீட்டராக சுருங்கிவிட்டது. ஆற்றுக்குள் ஆறு தெருக்கள் உள்ளன. கான்கிரீட் சாலை, குடிநீர் பைப்புகள், சாக்கடைக்கு கால்வாய், தெரு விளக்கு என அனைத்தும் நகராட்சி செலவில் போடப்பட்டுள்ளன. இவையனைத்தும் தற்போதைய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட உள்ளன. அவ்வீடுகளுக்கு இழப்பீடும், தங்க வேறு இடமும் தற்போது கொடுத்தாக வேண்டும். ஓட்டுக்காக செய்த தில்லுமுல்லுகளால் மக்கள் பணம் வீணாகிறது....
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
12-அக்-201717:28:31 IST Report Abuse
ganapati sb நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு அகற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் அதிகாரிகளும் அரசுகளும் தடையாணை ஏதும் பிறப்பிக்காமல் நீதிமன்றம் துணை நிற்கும் இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை