ஆருஷி கொலை வழக்கு தீர்ப்பு: 10 முக்கிய அம்சங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆருஷி கொலை வழக்கு தீர்ப்பு: 10 முக்கிய அம்சங்கள்

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆருஷி தல்வார்,Aarushi Talwar, ராஜேஷ் தல்வார், Rajesh Talwar,நுபுர் தல்வார், Nupur Talwar, அலகாபாத்,Allahabad, உயர்நீதிமன்றம், High Court,நொய்டா, Noida,ஹேமராஜ், Harmaraj, சி.பி.ஐ., CBI, இரட்டை கொலை,double murder, சி.பி.ஐ இயக்குனர் ஏ.பி.சிங், CBI Director AP Singh,

அலகாபாத்: நாட்டையே உலுக்கிய, 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில், சிறுமியின் பெற்றோரை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கு குறித்த, 10 முக்கிய அம்சங்கள்:


பல் டாக்டர் தம்பதி

1. டில்லி அருகே உள்ள நொய்டா பகுதி உ.பி., மாநிலத்தை சேர்ந்தது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதி. இவர்களின், 14 வயது மகள் ஆருஷி. இருவரும் பல் டாக்டர்கள். இவர்களின் வீடு, நொய்டாவில், ஜல் வாயு விகார் என்ற இடத்தில் உள்ளது. 2008 ம் ஆண்டு மே மாதம், 16ம் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில், கழுத்து அறுபட்ட நிலையில், ஆருஷி பிணமாக கிடந்தார். இது குறித்து தல்வார் தம்பதி போலீசில் புகார் செய்தனர். அந்த வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டை சேர்ந்தஹேமராஜ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அடுத்த நாள் தல்வார் வீட்டின் மாடி பகுதியில், ஹேமராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ தொழில் அறிந்தவர்களால் இந்த கொலைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், நெருங்கி பழகியவர்களின் செயலாக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.


கவுரவ கொலை என சந்தேகம்

ஆருஷி பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தல்வார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்த நேபாள நாட்டை சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. ஒரு கட்டத்தில், இது கவுரவ கொலையாக இருக்கலாம் என கருதி, தல்வார் தம்பதியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மே, 23ம் தேதி ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். ஜூன், 1ம் தேதி இந்த இரட்டை கொலை வழக்கு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராஜேஷ் தல்வார் மற்றும் அவரது மனைவி நுபுரிடம் இரண்டு முறை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஜூன், 26ம் தேதி இந்த கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்று சி.பி.ஐ., தெரிவித்தது. டிச., 29ம் தேதி சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை காசியாபாத் சி.பி.ஐ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், தல்வார் வீட்டில் வேலை செய்தவர்கள் மீது சந்தேகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தல்வார் தம்பதி மீது சந்தேகம் உள்ளது. ஆனால், அவர்கள் மீது குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் பிறகு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது. இதை ரத்து செய்ய கோரிய தல்வார் மனுக்களை அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ரத்து செய்தன. 2012 ஏப்., 30ம் தேதி நுபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். 2013ம் ஆண்டு நவ., 26ம் தேதி இருவருக்கும் ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தல்வார் தம்பதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.


உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2.இந்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று( அக்., 12) பிறப்பித்தனர். அதில், தல்வார் தம்பதி விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தான் கொலைகளை செய்தனர் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.3. அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்ட போது, தல்வார் தம்பதி, காசியாபாத்தில் தஸானா என்ற இடத்தில் உள்ள சிறையில் இருந்தனர். காலை முதலே இருவரும் பரபரப்பாக காணப்பட்டனர். தீர்ப்பு வந்த பிறகு, 'எங்களுக்கு நீதி கிடைத்து விட்டது' என, இருவரும் தெரிவித்ததாக, சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சட்ட நிபுணர்கள் விமர்சனம்

4. இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை துவக்கம் முதலே குழப்பமாக தான் காணப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை நொய்டா போலீசார் தவறாக கையாண்டனர். கொலைகள் நடந்த வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதித்தது உள்ளிட்ட பல தவறுகள் நடந்தன. எனவே தான் இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. 5. துவக்கத்தில், ' இது தீர்க்க முடியாத வழக்கு. எனவே, வழக்கை முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தெரிவித்த போது, சட்ட நிபுணர்கள், ' பொறுப்பற்றதனமான செயல்' என, கடுமையாக விமர்சனம் செய்தனர்.
6. இது குறித்து, அப்போதைய சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங் கூறுகையில்,' எங்கள் விசாரணையில் பல ஓட்டைகள் இருந்தன. எனவே தான் வழக்கை முடிக்க வேண்டும் என கூறினோம். தற்போது தல்வார் தம்பதியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில், ' இந்த கொலைகளை தல்வார் தம்பதி செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது' என்றார்.

7. இந்த கொலைகளை வீட்டில் இருந்தவர்கள் தான் செய்து இருக்க வேண்டும். அந்த வீடு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அந்த வீட்டின் கதவு உடைக்கப்படவில்லை எனவே, வீட்டில் இருப்பவர்கள் மீது தான் சந்தேகம் எழுகிறது என சி.பி.ஐ., தெரிவித்து இருந்தது. இந்த சந்தர்ப்ப சாட்சிகளை அடிப்படையாக வைத்தே தல்வார் தம்பதிக்கு சி.பி.ஐ., நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
நொய்டா போலீசார் கருத்து

8. துவக்கத்தில் இந்த வழக்கை விசாரித்த நொய்டா போலீசார், ' ஆருஷியும், வேலைக்காரரும் படுக்கையில் ஒன்றாக இருப்பதை தல்வார் தம்பதி பார்த்து விட்டனர். இதனால் அவர்கள் கடும் கோபத்துடன் காணப்பட்டனர்' என்று கூறி இருந்தனர். ஆனால், இதை நிரூபிக்க அவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. 9. அதே நேரத்தில், ' இந்த கொலைகள் குறித்த விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராகவே இருந்தோம். ஆனால், எங்களை சூனியக்காரி போல மீடியாக்கள் சித்தரித்து விட்டன' என, தல்வார் தம்பதி கூறி இருந்தனர்.


10. அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக படித்த பிறகே, அப்பீல் செய்வது குறித்து முடிவு செய்ய முடியும் என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், இந்த கொலைகள் குறித்த அப்பீல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற அறையில், 300 பேர் காத்து இருந்தனர். மதியம் 2.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். தல்வார் தம்பதியை விடுவித்து, 10 நிமிடங்களில் தீர்ப்பை கூறி முடித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VinodKannan -  ( Posted via: Dinamalar Android App )
12-அக்-201720:03:22 IST Report Abuse
VinodKannan இது நிபுணன் படத்தின் கதை ஆச்சே
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
12-அக்-201718:26:12 IST Report Abuse
Appu \\\தற்போது தல்வார் தம்பதியை விடுவித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில், ' இந்த கொலைகளை தல்வார் தம்பதி செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றே தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது'///இந்த தகவலே போதும்.. இவர்களை தப்ப்பிக்க வைத்தது எந்த இயக்கம் அல்லது இயக்கம் சார்ந்த கட்சி என்பது... இவனுகளுக்குள்ளேயே இவ்வளவு அழுக்கை வச்சிருக்கானுக.. இதுல மத்தவன் குறைய பேசிக்கிறானுக அருகதை இல்லாத சொம்பு காவி கைத்தடிங்க..
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
12-அக்-201720:47:47 IST Report Abuse
NRK Theesanஅவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றே தீர்ப்பில் என்றுதான் அனைத்து விடுதலை தீர்ப்புகளில் இருக்கும் .நீ சொல்வதுபோலேஇந்த கொலைகளை குற்றவாளி செய்யவில்லை என்று சொல்லமாட்டார்கள் .விடுதலை தீர்ப்பு அனைத்தும் பெரும்பாலும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை சந்தேகத்தின் பலனை இப்படித்தான் சொல்வார்கள் .அப்பு நீ இன்னும் வளரனும் .முதலில் கருத்து எழுத பழகு அப்போறோம் உன்னுடைய கலர் காண்பிக்கலாம் ....
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
12-அக்-201721:50:21 IST Report Abuse
sivan தல்வருக்கும் காவிக்கும் என்ன சம்பந்தம்? புத்தி பேதலித்து விட்டதா? எது நடந்தாலும் காவி காவி என்று ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் அர்த்தமில்லாத கருத்து என் ஆசிரியர் பிரசுரம் செய்கிறார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை