மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு | Dinamalar

மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 மனைகள்,Plots, தமிழக அரசு,Tamilnadu Government, சென்னை,  Chennai, ஏழை மக்கள் , Poor People, வரன்முறை, Specification, தமிழக அமைச்சரவை,Tamilnadu Cabinet,  ஓ.எஸ்ஆர், OSR,

சென்னை: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மனைகள் வரன்முறைபடுத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் புதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.


2018-மே-3வரை நீட்டிப்புஅனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனைகளை வரன் படுத்த 6 மாதம் அவகாசம் என்பதை ஒரு ஆண்டாக 2018-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது விற்கப்பட்ட மனை அடிப்படையில் மனை பிரிவுகளை 3 பிரிவுகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்படுகிறது. அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனை பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒருமனை விற்பனை செய்யப்பட்டால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும்.மனைப்பிரிவில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.


உள்ளாட்சிக்கு நிலம் தானம்விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீதம் நிலத்தை உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். ஓ.எஸ்ஆர். எத்தகைய அளவு இருப்பினும் விதிகளில்உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தனிநபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன் முறைப்படுத்த ஓ.எஸ்.ஆர்-ல் விதியில் இருந்து முழு விலக்குஅளிக்கப்படுகிறது.
சென்னையை பொறுத்த வரையில் 1975 ஆக ., 5முதல் 2016 அக்., 20 வரை வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும் .சென்னை தவிர ஊரக பகுதிகளில் 1972-ம் ஆண்டுநவ.,29 முதல் 2016 அக்.,20வரையிலும்,சென்னை தவிர பிற நகரப்பகுதிகளில் 1980 ஜன.,1-ம் தேதி முதல் 2016 அக்.,20வரையிலும் வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும்.மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து மனைகளும் வரன்முறைப்படுத்தப்பட்டாக கருதப்படும்.


வளர்ச்சிக் கட்டணம் குறைப்பு


மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிக்கட்டணம் ரூ.600-ல் இருந்து 500ஆக குறைக்கப்படுகிறது. வரன்முறைக்கட்டணம் ரூ.100 ஆகவும், நகராட்சி நிலை 1மற்றும் நிலை 2 ஆகிய பகுதிகளில் வளர்ச்சிக் கட்டணம் ரூ150, வரன்முறைக்கட்டணம் ரூ.60 ஆகவும் , நகராட்சி சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை வளர்ச்சி கட்டணம் ரூ.250, வரன்முறை கட்டணம் ரூ. 60 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதிகளில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக்கட்டணம் ரூ.75,வரன் முறைக்கட்டணம் ரூ.30 ஆகவும், கிராம ஊராட்சியில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டணம் ரூ.25வரன்முறைக்கட்டணம்ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் மேற்கண்ட கட்டணத்துடன் மனை ஒன்றிற்கு கூர்ந்தாய்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:02:58 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பிடியோ விவாசாயத்தை மொத்தமாக மூடு விழா நடுத்துகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
13-அக்-201706:45:07 IST Report Abuse
சென்னை பாலன் தமிழ்நாட்டு அரசாங்கம் நல்ல திட்டங்களை அறிவித்தாலும், உண்மையில் நமக்கு திட்டங்களை செயல்படுத்தி கொடுக்கும் ஊழியர்கள் தங்களுக்கு இந்த திட்டங்களை பற்றி ஒன்றும் தெரியாது போல் பேசுவார்கள். நம்மை மீண்டும் மீண்டும் சுத்தவிடுவார்கள். எல்லாம் எதற்கு, நம்மிடம் இருந்து பணம் கரக்கத்தான்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
12-அக்-201722:46:30 IST Report Abuse
தங்கை ராஜா அனாவசியமாக முடக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையில் கட்டண கொள்ளையிலிருந்து ஒரு முன்னேற்றமாக இதை பார்க்கலாம். பன்னீர் தன் நண்பர்களுக்கு உதவி இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Johnson Santhosh - Coimbatore,இந்தியா
12-அக்-201721:08:57 IST Report Abuse
Johnson Santhosh நான் 1996-ல் சைட் பிரிக்க பட்டு 2015-ல் விற்க பட்ட மனையை வாங்கி , கடந்த 20 ஏப்ரல் 2017-ல் (அங்கிகாரம் இல்லாத மனையை பதிவு செய்ய நீதிமன்றம் விலக்கு அளித்த நேரத்தில்) பத்திரபதிவு செய்தேன். அந்த மனைக்கு தமிழக அரசின் புதிய விதி முறை படி அங்கீகாரம் பெற முடியுமா?
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
13-அக்-201707:39:53 IST Report Abuse
அம்பி ஐயர்எப்படிப்பட்ட மனைக்கும் அங்கீகாரம் பெறலாம்..... கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால்.......
Rate this:
Share this comment
Cancel
Henry baskar - ipoh,மலேஷியா
12-அக்-201721:05:06 IST Report Abuse
Henry baskar Nalla thittam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.