டெங்குவை கட்டுப்படுத்த நடந்த யாகம்: அமைச்சருக்கு முதல்வர் யோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்குவை கட்டுப்படுத்த நடந்த யாகம்: அமைச்சருக்கு முதல்வர் யோசனை

Added : அக் 12, 2017 | கருத்துகள் (39)
Advertisement
டெங்கு,Dengue,  யாகம்,yagam, முதல்வர் , Chief Minister, தமிழகம், Tamil Nadu,டெங்கு காய்ச்சல்,Dengue Fever, தமிழக அரசு,Tamil Nadu Government, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,Tamil Nadu Health Minister Vijayapaskar, ஏடிஸ் கொசு, Edis mosquito, தமிழக சுகாதாரத் துறை ,Tamil Nadu Health Department, அமைச்சர் விஜயபாஸ்கர், Minister Vijayapaskar,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, டெங்கு பிரச்னை பெரும் பிரச்னையாக விசுவரூபம் எடுத்துள்ளது. ஒரு நாளில் பதினைந்து மணி நேரத்தை டெங்குவை கட்டுப்படுத்தும் விவகாரத்திலேயே தான் செலவிடுவதாக கூறும், விஜயபாஸ்கர், எல்லா நிலைகளிலும் பொது சுகாதாரத் துறையை முடுக்கி விட்ட பின்னும், டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை; வேதனையாக இருக்கிறது என்று புலம்பும் நிலைக்கு, டெங்குவின் வீரியம் தமிழகத்தில் இருக்கிறது.

டெங்குவை, பொதுச் சுகாதாரத் துறை மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது. உள்ளாட்சித் துறையும் இணைந்து முழு வேகத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தால் மட்டுமே, டெங்குவை உற்பத்தி செய்யும் கொசுவை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முடியும். ஆனால், உள்ளாட்சித் துறையும், லோக்கல் மாவட்ட நிர்வாகங்களும், டெங்குவை கட்டுப்படுத்தும் விஷயத்தில், பெரும் ஆர்வம் காட்டி செயல்படாமல் இருப்பதால், டெங்குவை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியாததோடு, பாதிப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெங்கு ஒழிய ரகசிய யாகம்


ரகசிய யாகங்கள்இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏதோ தெய்வக் குற்றம் இருப்பதால்தான், டெங்கு நம்மை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், இறைவனை நினைத்து, யாகம்; பூஜை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும், டெங்குவை கட்டுப்படுத்த, ரகசிய யாகங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இதையடுத்து, விரைவில் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரும் என, தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.


தீபாவளிக்கு பின் கட்டுப்படும்

இதற்கிடையில், தீபாவளி நெருங்குவதால், வெடி வெடித்து, அதிலிருந்து கிளம்பும் நச்சு அலுமினியத் துகள்கள், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை அழிக்கும் வல்லமை உடையவை. அதனால், தீபாவளி வந்து சென்றதும், டெங்கு கட்டுக்குள் வந்து விடும் என்றும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். எப்படியாவது டெங்குவை கட்டுக்குள் கொண்டு வந்தால் போதும் என்ற நினைப்பில், அமைச்சர் விஜயபாஸ்கர் நாலா பக்கமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Prasad - Chennai,இந்தியா
13-அக்-201709:50:48 IST Report Abuse
Krishna Prasad கொசுவை கொல்வதற்கு யாகமா இது என்ன புதுசா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201708:57:54 IST Report Abuse
ArunagiriSundharamurthy யாகம் செய்து டெங்குவை கட்டுபடுத்த முதல்வர் யோசனை பெரியார் வாரிசுகள் அவருக்கு பரிகாரம் தேடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ
13-அக்-201708:45:44 IST Report Abuse
Anton Pham கொசுவுக்கு டாஸ்மாக் சரக்கு தெளித்துவிட்டால் எல்லாம் சாக போகுது. இதுக்கு எதுக்குடா யாகம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை