கேமிராவிற்கு கொண்டாட்டம்...| Dinamalar

கேமிராவிற்கு கொண்டாட்டம்...

Updated : அக் 12, 2017 | Added : அக் 12, 2017
Advertisement

கேமிராவிற்கு கொண்டாட்டம்...


பொதுவாக திருவிழா என்றாலே புகைப்படக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.இதற்கு ஒரே காரணம் நிறைய வித்தியாசமான படங்கள் கிடைக்கும் என்பதுதான்.

திருமலை திருப்பதியில் நடந்த பிரம்மோற்சவ விழாவில் அப்படி கிடைத்த சில படங்களைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.
அங்கு நிலவும் ஒரே மாதிரியான 'லைட்டிங்கும்' சந்தோஷமான சூழ்நிலையும் நல்ல படம் எடுப்பதற்கு கூடுதல் அனுகூலங்கள்.

உயரமான கட்டைக்கால் கலைஞர்கள் ரிலாக்சாக எங்கும் உட்காரமுடியாது ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து கொண்டு ஒய்வு எடுத்தால்தான் உண்டு.

ஆண்களுக்கு நிகராக பெரிய ட்ரம்ஸ் இசைக்கும் பெண்கள் இசைத்து முடித்ததும் கிடைத்த திருப்தியை வெளிப்படுத்தும் விதமே தனி

சிவனைக்கண்டால் பக்தியோடு பயமும் ஏற்படும் அப்படிப்பட்ட சிவன் வேடம் அணிந்தவரே பயப்படும்படியான வேடம் புனைந்துவந்தவர்களும் உண்டு.
மூச்சுக்கட்டி சங்கு முழங்கியவர்களும், போட்டோகிராபி பார் ஆல் என்பதற்கேற்ப வேதபாடசாலை மாணவர்கள் புகைப்படம் எடுத்தும் பழகியதும், நமக்கு இவ்வளவு பெரிய நாமம் போட்டவர்கள் யாராக இருக்கும் என்பது போல வலம்வந்த சிறுமியும், தோளில் சாய்ந்தபடி எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி வந்த குழந்தை உள்பட எல்லாமே எனது கேமிராவின் கண்களுக்கு விருந்தாகவே அமைந்தது.உங்களுக்கு எப்படி?


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை