ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி விடுதலை! Dinamalar
பதிவு செய்த நாள் :
விடுதலை!
ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி...
சந்தேகத்தின் பலனை அளிப்பதாக ஐகோர்ட் தீர்ப்பு

அலகாபாத்: டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாணவி, ஆருஷி தல்வார், 14, கொலை வழக்கில் அவரது பெற்றோரும், பல் டாக்டர் களுமான, ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வாரை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆருஷி,கொலை,வழக்கில்,தல்வார்,தம்பதி,விடுதலை!

டில்லியை அடுத்துள்ள, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த, பல் டாக்டர்கள், ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார் தம்பதியின் ஒரே மகளான, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த, 14 வயதான ஆருஷி தல்வார், 2008ல், தன் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த, ஹேம்ராஜ், 45, மீது, போலீசார் சந்தேகப் பட்டனர். இதற்கிடையே, மறுநாள் காலையில், வீட்டின் மொட்டைமாடியில், ஹேம்ராஜ் கழுத்தறுபட்ட நிலையில், சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அவரது தலையிலும் காயங்கள் இருந்தன. இதையடுத்து, ஆருஷியின் தந்தை, ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். ஹேம்ராஜ் - ஆருஷி இடையே உறவு இருந்ததாகவும், இதனால், இருவரையும், ராஜேஷ் தல்வார் கொலை செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாறியது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் உட்பட சிலரை, சி.பி.ஐ., கைது செய்தது. போதிய சாட்சியம் ஏதுமில்லை என, சி.பி.ஐ., நீதிமன்றம், ராஜேஷ் தல்வாரை விடுதலை செய்தது.

இதற்கிடையே, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக, சி.பி.ஐ., கூறியது. 'கொலை செய்தது ராஜேஷ் தல்வார் தான்; ஆனால், அதை நிரூபிக்க, போதிய சாட்சியங்கள்

இல்லை' என, சி.பி.ஐ., கூறியது. காஜியாபாத், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், தல்வார் தம்பதிகள் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை தொடரும்படி உத்தரவிட்டது.

கொலை செய்தது, சாட்சியங்களை கலைத்தது, சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆருஷி, ஹேம்ராஜ் இடையே தகாத உறவு இருந்தது. இதை நேரில் பார்த்ததால், இருவரையும் தல்வார் தம்பதி கொலை செய்துள்ளனர்' என, சி.பி.ஐ., தரப்பில் வாதிடப்பட்டது.

மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், 2013, நவ., 26ல், ராஜேஷ் தல்வார் மற்றும் நுாபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அதை எதிர்த்து, இருவரும்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, அலகாபாத் உயர் நீதிமன்றம், நேற்று தீர்ப்பு அளித்தது. 'யூகங்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் அடிப்படையிலும், இருவரும் குற்றவாளிகள் என்பதை தீர்மானிக்க முடியாது. சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளிக்க வேண்டும். அதன்படி, இருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2013ல் இருந்து, தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேஷ் தல்வார், நுாபுர் தல்வார், இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த, ஆருஷியின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் அகலவில்லை.

கண்ணீர் விட்டனர்


விடுதலை தீர்ப்பு தெரிய வந்ததும், ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார், கண்ணீர் விட்டு அழுததாக, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆருஷி கொலை வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும்,அதன் விபரங்கள் ராஜேஷ் தல்வாருக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'சிறை அதிகாரிகளை கட்டிப் பிடித்து, அவர் கண்ணீர் விட்டு அழுதார்' என, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நுபுர் தல்வார் அமைதியாக இருந்தார். ஆனால், கண்ணீர் விட்டு அழுதார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக தீர்ப்பு நாளான நேற்று காலையில்,

Advertisement

இருவரும் நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆருஷி கொலை வழக்கு கடந்து வந்த பாதை
மே 16, 2008: டாக்டர்களான, ராஜேஷ் --- நுாபுர் தல்வார் தம்பதியின், 14வயது மகள் ஆருஷி, படுக்கை அறையில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். வீட்டு வேலைக்காரர், ஹேம்ராஜ் குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகம்
மே 17: ஹேம்ராஜும், பிணமான நிலையில், தல்வார் தம்பதியின் வீட்டு மாடியில் கண்டெடுப்பு
மே 18: ஆப்பரேஷன் செய்பவர்கள் தான், இக்கொலையை செய்துள்ளனர் என, போலீஸ் சந்தேகம்
மே 23: ராஜேஷ் தல்வார் கைது
மே 31: வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைப்புஜூன் 13: ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா கைது
ஜன., 5, 2010: ராஜேஷ் தல்வார் தம்பதிக்கு, 'உண்மை கண்டறியும் சோதனை' நடத்தப் பட்டது
டிச., 29: 'ராஜேஷ் தல்வார் முக்கிய குற்றவாளி; ஆனால் போதுமான ஆதாரம் இல்லை' என, சி.பி.ஐ., மனு தாக்கல்
ஜன., 25, 2011: காஜியாபாத் கோர்ட்டில், ராஜேஷ் தல்வார் தாக்கப்பட்டார்
பிப்., 9: வழக்கை முடித்துக் கொள்வதாக கூறிய, சி.பி.ஐ.,க்கு, காஜியாபாத் நீதிமன்றம் கண்டிப்பு. மேலும், ராஜேஷ் மற்றும் நுாபுர் தல்வார் குற்றவாளி என்றும், சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் உத்தரவு; சி.பி.ஐ., வழக்கை தொடர்ந்தது.
ஏப்., 11: நுாபுர் தல்வாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கும்படி, சி.பி.ஐ., வாதம்
ஏப்., 18: நுாபுர் தல்வார், ஏப்., 30க்குள் கோர்ட்டில் ஆஜராகும்படி, காஜியாபாத் நீதிமன்றம் உத்தரவு
ஏப்., 30: ஆஜராகாததால் நுபுல் தல்வார் கைது
செப்., 25: சுப்ரீம் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, நுபுல் தல்வாருக்கு ஜாமின்
ஏப்ரல், 2013: ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகிய இருவரையும் கொலை செய்தது, தல்வார் தம்பதி தான் என, சி.பி.ஐ., வாதம்
நவ., 26: தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து, காஜியாபாத் நீதிமன்றம் தீர்ப்பு
செப்., 5, 2016: நுாபுர் தல்வார் மூன்று வார பரோலில் வெளியே வந்தார்
அக்., 12, 2017: தல்வார் தம்பதியின் மேல் முறையீட்டு வழக்கில், அவர்களை விடுதலை செய்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-அக்-201719:27:45 IST Report Abuse

Vamanan Nairஅப்போ கொலை செய்தது யாரு ?. அதை கண்டுபிடிக்க (இனி கண்டுபிடிக்கவும் முடியாது) வக்கில்லாத போலீசுக்கு என்ன தண்டனை ?

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201710:59:05 IST Report Abuse

Sampath Kumarசட்டத்துக்கு தேவை சாட்சி மட்டும் அதை அழித்து விட்டால் ஆண்டவனால் கூட கண்டு பிடிக்க முடியாது

Rate this:
ranga - chennai,இந்தியா
13-அக்-201710:54:08 IST Report Abuse

rangaசின்ன கொலை திருட்டு இவற்றையே சி பி ஐ கண்டு பிடிக்கிறப்ப இது இருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறப்ப இந்த கொலையே ஏன் சி பி ஐ கண்டு பிடிக்கல .அப்ப கொலை செய்தது யாரு . எந்த ஒரு சாட்சியும் இல்லாதபோது உண்மையான குற்றவாளிய எப்ப கண்டு பிடிக்க போறிங்க. பணம் பத்தும் செய்யும் அதற்கு மேலும் செய்யும் போல் இருக்கே .

Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-201709:05:00 IST Report Abuse

முக்கண் மைந்தன் Supreme Court ல அப்பீல் செஞ்சி தீர்ப்பு வர்றப்போ ஆயி-அப்பென் சோடிய மறுவடியும் உள்ற போட்ருவாங்க.......

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-அக்-201708:48:41 IST Report Abuse

balakrishnanஅப்படியானால் ஆருஷி யை கொலை செய்தது யார், சி.பி.ஐ வழக்கு விசாரணை இப்படித்தான் இருக்கும், இத்தனை நாள் பெற்றோர் உள்ளே இருந்ததற்கு யார் பொறுப்பு, இந்த விசாரணை நடைமுறை மொத்தமாக ஒன்பது வருடங்கள் ஆகியுள்ளன, இந்த ஒரு வழக்குக்கு இந்த அளவு கால நேரம் தேவைப்படுகிறது, இனி மேல்முறையீடு இருக்கும், அப்படியானால் இந்த அரசியல் வழக்குகள் லட்சணம் எப்படி இருக்கும்,

Rate this:
Seenivasakumar Ganapathi - rajpalayam,இந்தியா
13-அக்-201718:37:50 IST Report Abuse

Seenivasakumar Ganapathiமகளை பறிகொடுத்து சிறை தண்டனை அனுபவித்துள்ள இந்த பெற்றோரின் கதிக்கு அரசு என்ன சொல்லப்போகுது, நீதிமன்றம் என்ன சொல்லப்போகுது, இனி அவங்களின் வாழ்வாதாரம் ?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:23:20 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆருஷி ஆன்மா யாரையும் மன்னிக்காது...

Rate this:
sankar - trichy,இந்தியா
13-அக்-201721:48:12 IST Report Abuse

sankarயாரை அவளை தூண்டிய வேலைக்காரனையா இல்லை ?? அவமானத்தால் கொலை செய்த பெற்றோரையா ??? பருவ வயதில் தவறு புரிந்த தன்னையா ??...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
13-அக்-201706:49:56 IST Report Abuse

தேச நேசன் ஆகமொத்தம் ஊடகங்களுக்கு தீனி டி ஆர் பி மூலம் விளம்பர வரும்படி வேறெதுக்கு இதை பெரிய செய்தியாக்கினாங்க?

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-அக்-201704:54:44 IST Report Abuse

Sanny மகளின் படத்தை பார்க்கும்போது வேதனையை தருகிறது, ஆனால் தகப்பனின் முகத்தில் குற்ற உணர்வு தெரியுது. பெற்றோரின் பண ஆசையால் பிள்ளைக்கு பாசத்தை கொடுக்காததால் வந்த வினை, அதுக்காக பிள்ளைக்கு இப்படி செய்திருக்கக்கூடாது,

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-அக்-201704:29:48 IST Report Abuse

Sanny விடுதலையானதும் ஒருவகையில் நல்லது ஜெயிலில் இருந்து அனுபவிப்பதைவிட, வீட்டில் இருந்து மக்களின் நினைவில், வெளியில் போகும் போது பலரின் ஏளன பார்வையிலும் , குற்ற உணர்விலும் மனம் படும் வேதனை போதுமானது. இருந்தாலும் தெய்வத்தின் தீர்ப்பு ஒன்று இன்னும் இருக்கு,

Rate this:
sankar - trichy,இந்தியா
13-அக்-201721:46:35 IST Report Abuse

sankarஉனக்கு ஒரு மகள் இருந்து பதினாறு வயதில் நாற்பத்தைந்து வயது வேலைக்காரனுடன் தவறு செய்தால் (அந்த பெண்ணை அந்த வேலைக்காரன் தூண்டி இருக்கிறான் என் என்றால் பொண்ணு மைனர் ) நீ என்ன செய்வாய் சொல்லு ஒரு வாதத்துக்கு தான் . ஒன்று அவமானத்துடன் பெற்றோர் வாழ வேண்டும் இல்லை சாக வேண்டும் இல்லை . தன் பெண்ணை சீரழித்தவநை கொலை செய்ய வேண்டும் அந்த பெண்ணை கொன்றிருக்க கூடாது . அவனை பிடித்து போலீசில் கொடுத்தால் பொண்ணுக்கு அவன்மனம் வெளியே தெரியும் என்ன செய்திருக்க வேண்டும் சொல்லு...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201704:18:03 IST Report Abuse

Kasimani Baskaranஆதாரங்களை எல்லாம் அவ்வளவு தெளிவாக மறைத்து இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது... CBI யால் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மர்மமான விஷயம்தான்... திட்டமிட்டு பிசகில்லாமல் கொலை செய்து இருக்கிறார்கள்..

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-அக்-201708:51:50 IST Report Abuse

balakrishnanதனிப்பட்ட இருவர் இந்த அளவிற்கு திறமையாக வேலை செய்ய முடிகிறதென்றால், பலவிதமான பயிற்சிகள், பல்வேறு மூத்த நிபுணர்களின் வழிகாட்டுதல்கள், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் அனைத்தையும் தன் வசம் வைத்திருக்கும் சி.பி.ஐ, இந்த வழக்கில் தோல்வி அடைகிறதென்றால், எங்கே தவறு இருக்கிறது என்று கண்டுபுடிக்க வேண்டும், மேலும் சிறந்த பயிற்சி, திறமையான ஊழியர்களை அடையாளம் கண்டு, அவர்களை பணியமர்த்த வேண்டும்,...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-அக்-201715:35:01 IST Report Abuse

Sanny திறமையானவர்களுக்கு நாட்டில் இடமில்லை, பதவிசுகம், அரசியல் அணைப்பு, பணத்துக்காக வேலை செய்பவர்கள்தான் அதிகம் இப்போ பாதுகாப்புத் துறையில்,...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement