காவி நிறத்துக்கு மாறும் உ.பி., Dinamalar
பதிவு செய்த நாள் :
காவி நிறத்துக்கு மாறும் உ.பி.,

லக்னோ :உ.பி., மாநிலம், படிப்படியாக, காவி நிறத்துக்கு மாறி வருகிறது. லக்னோவில் நேற்று நடந்த விழாவில், காவி நிறமுடைய அரசு பஸ்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.

 காவி நிறம், Brown color,முதல்வர் யோகி ஆதித்யநாத்,Chief Minister Yogi Aditya Nath, அரசு போக்குவரத்து கழகம் ,State Transport Corporation, மாயாவதி, Mayawati,பகுஜன் சமாஜ் ,Bahujan Samaj, அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav, சமாஜ்வாதி , Samajwadi, ஸ்ரீகாந்த் சர்மா,Srikanth Sharma, தேசியக் கொடி,National Flag, உ.பி., UP,லக்னோ, Lucknow,பஸ், bus,

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. எப்போதும் காவி உடை அணியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இருக்கையில், காவி நிறத்திலான துண்டுகள் வைக்கப்பட்டன.

அதன்பின், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகப் பைகள், காவி நிறத்தில் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசு விழாக்களுக்கான

மேடைகளும், காவி நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு வழங்கும் சான்றிதழ், விழா தொடர்பான அழைப்பிதழும், காவி நிறத்தில் அச்சிடப்பட்டன.

அரசின், முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கியடைரிகளும், காவி நிறத்தில் இருந்தன. தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடையாள அட்டைக்கான கயிறும், காவி நிறத்தில் இருந்தது.

இந்நிலையில், மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கிராம பகுதிகளுக்கு, 50 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யும் விழா, லக்னோவில் நேற்று நடந்தது. இதில், விழா மேடை மட்டுமல்ல, பஸ்களும் காவி நிறத்தில் இருந்தன. பஸ்களை அழகுபடுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பலுான்களும், மாலைகளும், காவி நிறத்தில் இருந்தன.

உ.பி., மக்களுக்கு இது ஒன்றும்புதிதல்ல. மாயாவதியின், பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, இவையெல்லாம் நீல நிறத்தில் இருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சியின் போது, சிவப்பு ,பச்சை நிறங்களில் இருந்தன. தற்போது, இவை அனைத்தும்

Advertisement

காவி நிறத்துக்கு மாறி வருகின்றன.இது குறித்து, மாநில அமைச்சர், ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:

எங்களுக்கு அனைத்து நிறங்களும் பிடிக்கும். காவி நிறம், தியாகத்தையும், வீரத்தையும் குறிக்கிறது. நம் தேசியக் கொடியிலும், காவி நிறம் உள்ளது.காவி நிறத்தை தான் பயன் படுத்த வேண்டும் என, அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பஸ் முதல், புத்தகப் பை வரை, காவி நிறத்தில் அமைந்தது எதேச்சையானது; இது திட்டமிட்டதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (79)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
21-நவ-201711:44:55 IST Report Abuse

Balamurugan Balamuruganஉத்திரபிரதேசம் தன்னுடைய பாரம்பரிய இந்திய கலாச்சாரத்திற்க்கு மாறி வருகிறது

Rate this:
13-அக்-201721:12:59 IST Report Abuse

கு.சந்திரசேகரன்சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

Rate this:
13-அக்-201721:12:59 IST Report Abuse

கு.சந்திரசேகரன்சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
13-அக்-201720:08:05 IST Report Abuse

சிற்பி தமிழகத்தில் பச்சை நிறமும், மஞ்சள் நிறமும் மாற்றி மாற்றி வருவது போல உத்திர பிரதேசத்தில் பச்சை மற்ற கலர்கள், இப்போது காவி நிறத்தில் மாறி வருகிறது. இந்திய தேசிய கொடியின் கலரை உடைய காங்கிரஸ் அதை காங்கிரஸ் கலர் என்றே கூறுகிறார்கள். இன்றும் வீட்டு விசேஷங்களில் கல்யாண பந்தல் போடும் கடை காரர் காங்கிரஸ் கலரை தான் போடுகிறார். ஆக கலர் ஒன்றும் பெரிய விழயமில்லை. காவி மட்டும் தான் விஷயம். காவி மட்டுமே வேண்டாம். பச்சைக்கு எப்போது மே ஜே. இல்லையென்றால் அவர்கள் ஒட்டு கிடைக்காது என்கிற பயம்.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
13-அக்-201719:53:26 IST Report Abuse

sundaramநம்மூர்ல ஒருத்தரு முதலமைச்சரான இருந்தப்போ எல்லாமே மஞ்சள் நிறத்துல இருந்திச்சு. விழா மேடைகள் பொன்னாடைகள் சால்வைகள் தோரணங்கள் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கிய பை இப்படி இன்னும் பலப்பல.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-அக்-201719:25:26 IST Report Abuse

Malick Rajaமுட்டாள்கள் மட்டுமே உலகம் தங்களுடையது என்று நம்பினால் யாருக்கும் பயனில்லை .. தனது தியாக வாழ்வில் சந்நியாசியாக வாழும் சாமிக்கு உலக ஆசை இருப்பது நியாயமில்லை .. போலி சாமியார்களுக்கு விதிவிலக்கு .. சங்கரமடத்தில் நம்நாட்டில் எத்தனையோ ஜீவிகள் உலக ஆசையற்று காவி போர்த்தி இருப்பதில் நியாயம் இருக்கிறது .. இந்த சாமி நல்ல போட்டுத்தாக்கி வளர்ந்து அரியணை ஏறியதில் மனநல பாதிப்பு இருப்பது சகஜமே .. கொஞ்ச காலம் வாழும் மனிதன் தனது நிலையை உணராமல் இருப்பது பரிதாபத்திற்குரியது தான் .

Rate this:
David Thomas - Tirunelveli,இந்தியா
13-அக்-201718:56:23 IST Report Abuse

David Thomasகாவியம் படைக்கிறார்கள்.

Rate this:
mukundan - chennai,இந்தியா
13-அக்-201718:53:52 IST Report Abuse

mukundanநிறத்தை பார்த்து இவர் செய்த விஷயங்களை மறைக்கிறீரே மக்களே. நிறத்தில் வேண்டும் என்றால் காவி இருக்கட்டும், மக்களுக்கு நல்லது நடந்தால் நன்மை தானே.

Rate this:
தாண்டவக்கோன் - Belgaum,இந்தியா
13-அக்-201718:12:19 IST Report Abuse

தாண்டவக்கோன்யதா பிரதமர், ததா முதல்வர். மக்களுக்கு மட்டும் இவர்களிடமிருந்து விமோட்சனமில்லை.

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
13-அக்-201717:42:08 IST Report Abuse

Srikanth Tamizanda..காவியின் அருமை கயவர்களுக்குத் தெரியாது. நாடு முழுவதும் காவி படர வேண்டும், இதுவே நம் நாட்டுக்கு நல்லது..

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement