காவி நிறத்துக்கு மாறும் உ.பி., Dinamalar
பதிவு செய்த நாள் :
காவி நிறத்துக்கு மாறும் உ.பி.,

லக்னோ :உ.பி., மாநிலம், படிப்படியாக, காவி நிறத்துக்கு மாறி வருகிறது. லக்னோவில் நேற்று நடந்த விழாவில், காவி நிறமுடைய அரசு பஸ்களை, முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.

 காவி நிறம், Brown color,முதல்வர் யோகி ஆதித்யநாத்,Chief Minister Yogi Aditya Nath,  அரசு  போக்குவரத்து கழகம் ,State Transport Corporation,  மாயாவதி, Mayawati,பகுஜன் சமாஜ் ,Bahujan Samaj,  அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav, சமாஜ்வாதி ,  Samajwadi, ஸ்ரீகாந்த் சர்மா,Srikanth Sharma,  தேசியக் கொடி,National Flag, உ.பி., UP,லக்னோ, Lucknow,பஸ், bus,

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. எப்போதும் காவி உடை அணியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இருக்கையில், காவி நிறத்திலான துண்டுகள் வைக்கப்பட்டன.

அதன்பின், துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகப் பைகள், காவி நிறத்தில் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசு விழாக்களுக்கான

மேடைகளும், காவி நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. அரசு வழங்கும் சான்றிதழ், விழா தொடர்பான அழைப்பிதழும், காவி நிறத்தில் அச்சிடப்பட்டன.

அரசின், முக்கிய அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கியடைரிகளும், காவி நிறத்தில் இருந்தன. தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடையாள அட்டைக்கான கயிறும், காவி நிறத்தில் இருந்தது.

இந்நிலையில், மாநில போக்குவரத்து கழகம் சார்பில், கிராம பகுதிகளுக்கு, 50 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யும் விழா, லக்னோவில் நேற்று நடந்தது. இதில், விழா மேடை மட்டுமல்ல, பஸ்களும் காவி நிறத்தில் இருந்தன. பஸ்களை அழகுபடுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த பலுான்களும், மாலைகளும், காவி நிறத்தில் இருந்தன.

உ.பி., மக்களுக்கு இது ஒன்றும்புதிதல்ல. மாயாவதியின், பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, இவையெல்லாம் நீல நிறத்தில் இருந்தன. அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சியின் போது, சிவப்பு ,பச்சை நிறங்களில் இருந்தன. தற்போது, இவை அனைத்தும்

Advertisement

காவி நிறத்துக்கு மாறி வருகின்றன.இது குறித்து, மாநில அமைச்சர், ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:

எங்களுக்கு அனைத்து நிறங்களும் பிடிக்கும். காவி நிறம், தியாகத்தையும், வீரத்தையும் குறிக்கிறது. நம் தேசியக் கொடியிலும், காவி நிறம் உள்ளது.காவி நிறத்தை தான் பயன் படுத்த வேண்டும் என, அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பஸ் முதல், புத்தகப் பை வரை, காவி நிறத்தில் அமைந்தது எதேச்சையானது; இது திட்டமிட்டதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
21-நவ-201711:44:55 IST Report Abuse

Balamurugan Balamuruganஉத்திரபிரதேசம் தன்னுடைய பாரம்பரிய இந்திய கலாச்சாரத்திற்க்கு மாறி வருகிறது

Rate this:
13-அக்-201721:12:59 IST Report Abuse

கு.சந்திரசேகரன்சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

Rate this:
13-அக்-201721:12:59 IST Report Abuse

கு.சந்திரசேகரன்சிறுபான்மையினருக்கு பயப்பட வேண்டிய நிலை இந்தியாவில் மட்டுமே நடக்கும்

Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X