ரியல் எஸ்டேட் துறைக்கும் ஜி.எஸ்.டி.,; அமைச்சர் அருண் ஜெட்லி தகவல் Dinamalar
பதிவு செய்த நாள் :
ரியல் எஸ்டேட் துறைக்கும் ஜி.எஸ்.டி.,
அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

வாஷிங்டன்: ''மிக அதிகளவு வரி ஏய்ப்பு மற்றும் ரொக்கம் புழங்கும், ரியல் எஸ்டேட் துறையை, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையின் கீழ், கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, மத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ரியல்,எஸ்டேட்,துறைக்கும்,ஜி.எஸ்.டி.,அமைச்சர்,அருண்ஜெட்லி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அமெரிக்கா சென்றுள்ள, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, ஹார்வர்டு பல்கலையில் நடந்த கருத்தரங்கில்
பேசியதாவது:

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., ஜூலை, 1 முதல்

அமலுக்கு வந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையை யும், ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பல மாநிலங்கள் வலியுறுத்துகின்றன. அதே நேரத்தில், சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, அசாம் மாநிலம், கவுகாத்தியில், நவ., 9ல் நடக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது, வீடு வாங்குவோருக்கு, மிகப்பெரிய பலனை அளிக்கும். நிழல் பொருளாதாரத்தின் அளவை குறைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் தான், அதிகளவு வரி ஏய்ப்பு, ரொக்க பரிவர்த்தனை நடக்கிறது. அத்துறையை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவதால், பொருளாதாரத்துடன், ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி அடையும்.

நாட்டில்மேற்கொள்ளப்படும், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையாக, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமைந்துள்ளது.இது, 'டிஜிட்டல்' பரிவரித்தனை உட்பட, பல்வேறு நீண்ட கால பலன்களை அளிக்கும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்களிடம் உள்ள

Advertisement

பணத்தை பறிக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கமல்ல.

இத்தனை காலங்களாக, எவ்வளவு மதிப்புள்ள ரூபாய் இருந்தது; அது யாரிடம் உள்ளது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, யார் யாரிடம், எவ்வளவு பணம் உள்ளது என்பது தெரிய வந்து உள்ளது.ஆனால், செல்லாத ரூபாய் நோட்டு திட்ட அறிவிப்பின், உண்மை நோக்கத்தை, யாருமே புரிந்து கொள்ள வில்லை. அதனால் தான், அது குறித்து விமர்சிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

தொடர்புடைய செய்திகள்:



மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (15+ 58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201715:26:01 IST Report Abuse

karthikeyanஇருக்குற வரியை வசூல் பண்ணு. மார்வாடி பசங்க வரியே கட்டறதில்லை.

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
13-அக்-201710:31:37 IST Report Abuse

Prabaharanநல்லது தான். ஆனால் சிலை வைப்பதற்கு அரசு பணத்தில் இருந்து 2000 கோடி , 3000 என இவர்கள் இஷ்டம் போல் செலவு செய்கிறார்களே? இதற்கு எல்லாம் எந்த கட்டுப்படும் இல்லை?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-அக்-201709:29:17 IST Report Abuse

Pugazh Vஎஸ்டேட் வேண்டாம் விவசாயம் பண்ணணும்னு எழுதும் அறிவாளி ப்ளாட்பாரத்தில் வசிக்கிறாரா? மாநில அரசுகளின் வருவாயில் மத்திய அரசு கைவைப்பது புரியாமல் வெரிகுட் என்று பிஜேபி பக்தர்கள் கை தட்டுகிறார்கள்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-அக்-201708:56:58 IST Report Abuse

balakrishnanஜி.எஸ்.டி யின் பலன் எதுவும் இன்னும் முழுமையாக தெரியவில்லை, இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டிய சூழல், பொதுவாக பலமுனை வரிவிதிப்பு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, இன்னும் எளிமைப்படுத்த வேண்டும், இரண்டே ஸ்லாப் அல்லது ஒரே ஸ்லாப் இருந்தால் நலம், ஒரேயடியாக மக்களை நசுக்கும் விதத்தில் இருப்பது, வெறுப்பை ஏற்படுத்துகிறது, உயர் பணமதிப்பு நீக்கம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்த சூழலில், அரசுக்கு பல வழிகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது, இன்னும் சிறப்பாக செயல்படவேண்டிய நேரம்,

Rate this:
14-அக்-201707:09:22 IST Report Abuse

அப்பாவிகவலைப் படாதீங்க...2050ம் வருஷத்துல GST யின் முழுப் பலனும் மக்களுக்கு சென்றடைஞ்சுடும்....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201708:25:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaரியல் எஸ்டேட் துறைக்கும் ஜி.எஸ்.டி.... விவசாயத்தை பாதிக்கும் இந்த ரியல் எஸ்டேட் துறை இந்தியாவிற்கு தேவை இல்லை... ரியல் எஸ்டேட் முதலாளிகள் விவசாயத்தை அழித்தது போதும்... விவசாயத்தை வாழ வழி செய்யுங்கள்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201704:20:30 IST Report Abuse

Kasimani Baskaranரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த வேண்டும்... அதை செய்யாமல் GST க்குள் கொண்டுவந்தால் வரி ஏய்ப்புதான் அதிகம் இருக்கும்... கறுப்புப்பணம் உருவாக ரியல் எஸ்டேட் ஒரு முக்கியமான காரணி...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-அக்-201712:01:07 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதிக வரி விகிதம், அதிக வரி ஏய்ப்பு....

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201702:42:55 IST Report Abuse

Mani . Vபாஜக காரர்களுடைய பினாமிகள் விற்கும் பெட்ரோல், டீசல் முதலியவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடியவில்லை. வரும் காலத்தில் தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்புண்டு.

Rate this:
venkat - chennai,இந்தியா
13-அக்-201708:59:13 IST Report Abuse

venkatபிரதமர் மோடி அவர்கள் முதலில் ஜி எஸ் டி அமுல் படுத்திய போது எல்லாம் போச்சு என்றவர்கள் தற்போது ஜி எஸ் டி பெட்ரோலுக்கு வேண்டும் என்கிறார்கள். பெட்ரோலுக்கு ஜி எஸ் டி கொண்டு வர கர்நாடக பாண்டிச்சேரி கேரளா மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் அரசுகள் சம்மதம் தேவை. இவர்கள் சம்மதம் தருகிறார்களா? தந்து விட்டார்களா? இவர்கள் ஒத்துக்கொண்டு ஜி எஸ் டி ல் பெட்ரோல் கொண்டு வந்து 28% வரி மற்றும் செஸ் போட்டாலும் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய்க்கு வந்து விடும்? காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் அரசுகள் பெட்ரோலை ஜி எஸ் டி க்குள் கொண்டு வர சம்மதித்து விட்டார்களா ? இன்று பெட்ரோல் வரிகளில் பாதி இந்த பி ஜெ பி அல்லாத மாநில அரசுகளும் வாட் மற்றும் பேசிக் எக்ஸைஸ் டூட்டியில் 42% பங்கு மூலம் பெறுகிறார்கள். இதை விட்டு கொடுக்கவோ குறைத்துக்கொள்ளவோ செய்தால் இன்றே பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு வரும். இதை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் அரசுகள் செய்வார்களா?...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
13-அக்-201716:37:01 IST Report Abuse

Gopiமணி அவர்களே, மகாராஷ்டிரா, குஜராத் , சட்டிஸ்கர் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளது அது போல் நம் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் செய்தால் நன்று. GST வரம்பிற்குள் வராத மலை முழுங்கி மகாலிங்கங்களான உற்சாக பானம், பெட்ரோல், டீசல் போன்றவைகளால் தான் இப்பொழுது தலைவலி. மாநில சர்க்கார் இதற்க்கு உடன்படவில்லை...

Rate this:
Rajan - chennai,இந்தியா
13-அக்-201702:00:49 IST Report Abuse

Rajanநாசமா போச்சு... நீங்களும் GST உம்...

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
13-அக்-201701:58:02 IST Report Abuse

அன்புரியல் எஸ்டேட்டில் கருப்பு பணம் இன்றுவரை ஜொலிக்கிறது. பூனைக்கு மணி கட்ட ஜெட்லீ தயாரா?

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
13-அக்-201700:59:45 IST Report Abuse

ramasamy naickenயாரிடம் எவளவு பணம் உள்ளது என்று தெரிவதெற்கு ஏழைகளையும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் ஏன் பாடாய் படுத்தினீர்கள்? வருமான வரி துறை, அமலாக்க துரையெல்லாம் புடுங்குவதற்க இருக்கின்றன? கேட்பவன் கேனைப்பயலா ?

Rate this:
Gopi - Chennai,இந்தியா
13-அக்-201716:40:47 IST Report Abuse

Gopiநீங்க தான் ஒரு நல்ல வழியை சொல்லுங்களேன். வைத்திருக்கும் பணம் மதிப்பிழந்து விட்டது என்று கூறியும் கேடு தேதியை தாண்டி காருளையும் பஸ்ஸுளையும் கட்டுக்கட்ட மதிப்பிழந்த பணத்த வச்சு பைத்தியக்காரங்களா இன்னமும் சுத்துறாங்க . இதுக்கு மேல என்ன சொல்ல...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்