தீவுகளுக்கு அரணாக விளங்கும் பவளப்பாறைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவுகளுக்கு அரணாக விளங்கும் பவளப்பாறைகள்

Updated : அக் 13, 2017 | Added : அக் 12, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பவளப்பாறைகள், Corals, தீவு,island,  சாயல்குடி, sayalkudi, மன்னார்வளைகுடா , 
Mannar Gulf,மண்டபம்,mandapam, கீழக்கரை,Keelakarai, முயல் தீவு, rabbit island,  மனோலி, manoli, மனோலிபுட்டி,manoliputti, பூமரிச்சான்,poomarichan, புள்ளிவாசல், pullivasal,குருசடை, gurusadai,சிங்கில் , sinkil கீழக்கரை வனப்பகுதி, keelakarai forest, ஆனைபார் தீவு, anaipar island, வாலிமுனை,Walimunai, அப்பா தீவு,Father Island,பூவரசன்பட்டி,poovarasanpatty, தலையாரி,Talaiyari,  வாலை,vaalai, முள்ளித்தீவுகளும்,mulliisland, துாத்துக்குடி வனப்பகுதி, Thoothukudi Forest,

சாயல்குடி, மன்னார்வளைகுடா உயிர்கோள காப்பகத்தின் தேசிய பூங்காவாக
மண்டபம், கீழக்கரை, சாயல்குடி ஆகிய கடற்பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன.
மண்டபத்தில் முயல் தீவு, மனோலி, மனோலிபுட்டி,பூமரிச்சான், புள்ளிவாசல், குருசடை, சிங்கில் தீவுகளும், கீழக்கரை வனப்பகுதியில் ஆனைபார் தீவு, வாலிமுனை, அப்பா தீவு,பூவரசன்பட்டி, தலையாரி, வாலை, முள்ளித்தீவுகளும், துாத்துக்குடி வனப்பகுதியில் சாயல்குடியில் நல்லதண்ணீர் தீவு, புளுகுனிசல்லி, உப்புத்தண்ணீர், விலங்கு சல்லி, காரைச்சல்லி, காசுவார்,வான் தீவுகளும் உள்ளன. மீன்கள், ஆமைகள், டால்பின்கள், கடற்பசு, கடல்பல்லி, பாம்பு உள்ளிட்ட அரியவகை உயிரினங்களுக்கு புகலிடமாகவும், கடலின் உயிர்க்கோள தகவலமைப்பிற்கு ஆதாரமாகவும்பவளப்பாறைகள் விளங்குகிறது.
மன்னார் வளைகுடாப்பகுதியில் 5 வகையான பவளப்பாறைகள் உள்ளன. விரல், மனித மூளை, பூக்கள், டேபிள், விசிறி ஆகிய வடிவங்களில் உள்ளன. ஆழிப்பேரலை மற்றும் கடல் கொந்தளிப்பு நேரத்தில் தீவுகளின் பாதுகாப்பு அரணாக எங்கும் வியாபித்துள்ளது. தேசிய தடைச்சட்டம் வருவதற்கு முன்பு பவளப்பாறைகளை சேகரித்து, அதில் சுண்ணாம்பு, கால்சியம், உரம், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பயன்பட்டது. இயற்கை பாதுகாப்பு வளத்திற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவியதால், 1985க்கு பிறகு பவளப்பாறைகள் எடுப்பது தடைசெய்யப்பட்டது.
குறைந்த அலைகள் கொண்ட தீவுப்பகுதிகளில் பவளப்பாறைகளின் இயற்கை சூழல் கட்டமைப்பு அதிசயத்தக்கதாக உள்ளது. வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தீவிற்கு அருகே வரும் ஒருசில நாட்டுப்படகால்பவளப்பாறைகள் சேதத்தை சந்திக்கிறது. 1 செ.மீ., நீளமுள்ள பவளப்பாறைகள் வளர்வதற்கு 1 வருடம் ஆகிறது. எனவே தீவிற்குள் வருவதற்கு வனத்துறையின் சட்டப்படி அனுமதியில்லை, என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
13-அக்-201723:08:10 IST Report Abuse
Kuppuswamykesavan மீன்களின் வாழ்வாதாரமே , இந்த பவள பாறைகள்தான் . ஆனால், புவி வெப்பம் மிகுவதினாலும், இவைகள் அழிய தொடங்கி இருக்கு எனலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை