கறுப்பு, வெள்ளை உடையில் கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள்! ஐகோர்ட் கடும் கண்டனம்; அரசுக்கு காட்டமான கேள்விகள் Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கறுப்பு, வெள்ளை உடையில்
கட்டப்பஞ்சாயத்து வழக்கறிஞர்கள்!

சென்னை:கறுப்பு, வெள்ளை ஆடை அணிந்து, வழக்கறிஞர்கள் என கூறியபடி, கட்டப் பஞ்சாயத்து, கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்ட கல்லுாரிகள் திறக்க தடை விதிக்கவும், மாணவர்கள் சேர்க்கைக்கு, குறைந்தபட்ச மதிப்பெண், 75 சதவீதம் என, நிர்ணயிப்பது குறித்தும், பதில் அளிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கறுப்பு வெள்ளை உடை, Black and white dress, கட்டப்பஞ்சாயத்து, kattapanjayat, வழக்கறிஞர்கள், lawyers,சென்னை உயர் நீதிமன்றம்,Chennai high court, சட்ட கல்லூரிகள் ,Law colleges, மாணவர்கள்,students, அன்னை மருத்துவ கல்லூரி ,Annai Medical College , நீதிபதி கிருபாகரன் , justice, kripaakaran,ஐகோர்ட்,

ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள, அன்னை மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தில், பழைய மற்றும் புதிய அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கு இடையே பிரச்னை உள்ளது. இந்த கல்லுாரியில் முதலாம் ஆண்டு முடித்த, 144 மாணவர்கள், அரசு மருத்துவ கல்லுாரிக்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கறுப்பு, வெள்ளை ஆடை அணிந்து, வழக்கறிஞர்கள் என கூறியபடி, சிலர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக, மூத்த வழக்கறிஞர்கள் சிராஜுதீன், சிங்காரவேலன் ஆகியோர் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

தனியார் மருத்துவ கல்லுாரியை, தங்கள் வசம் வைத்து கொள்வதில் பழைய அறங்காவலர்களும், அதை மீட்பதில் புதிய அறங்காவலர்களும், வழக்கறிஞர்கள் என, கூறி கொள்பவர்களை ஏற்பாடு செய்திருப்பது, இந்த நீதிமன்றத்துக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. கறுப்பு, வெள்ளை உடை அணிந்தவர்கள், வழக்கறிஞர்கள் எனக் கூறியபடி, இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சில ஆண்டுகளாக, தமிழகத்தில் இத்தகைய போக்கு நிலவுகிறது. நீதி நடைமுறையில் நம்பிக்கை இல்லாமல், இத்தகைய கறுப்பு, வெள்ளை உடை அணிந்தவர்களை நம்பி செல்வதற்கு, இந்த வழக்கு ஓர் உதாரணம். சொத்து பிரச்னைகளில் தலையிட, வழக்கறிஞர்கள்என கூறிக் கொள்ளும்

இவர்களுக்கு, பணம் கொடுத்து ஏற்பாடு செய்கின்றனர்.

ஆந்திராவில், 200, கர்நாடகாவில், 125, சட்டக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இவ்வளவு எண்ணிக்கையில் சட்டக் கல்லுாரிகள் ஏன் தேவைப் படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கல்லுாரிகளுக்கே செல்லாமல், பலர் பட்டம் பெறுகின்றனர். கிரிமினல் நடவடிக்கை களில் இருந்து பாதுகாத்து கொள்ள, சட்டக் கல்லுாரிகளில் பெறும் பட்டங்களை, சிலர் பயன்படுத்துகின்றனர்.

'லெட்டர் பேடு' கல்லுாரிகளில் இருந்து, சட்டப் படிப்புக்கான பட்டங்களை வாங்கி, சிவில் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக, கட்டப் பஞ்சாயத்தில் பலர் ஈடுபடுகின்றனர். எதிர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை மிரட்டும் அளவுக்கு, இவர்கள் செல்கின்றனர். நீதிமன்றத்துக்குள்ளேயே இப்படி நடக்கும்போது, வெளியில் நடப்பதை, கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.சரியாக பரிசீலனை செய்யாமல், அதிக எண்ணிக்கையில், சட்ட கல்லுாரிகள் துவங்க, பார் கவுன்சில் அனுமதி வழங்குகிறது.

சட்டம் படித்தவர்களுக்கு, வேலை இல்லாத நிலை உள்ளது. அவர்கள், கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்கும் சூழ்நிலை உள்ளது. தற்போதைய நிலைக்கு, பார் கவுன்சிலையும் குறை கூற வேண்டும். இப்போதாவது உணர்ந்து, பார் கவுன்சில் விழித்து எழ வேண்டும். வழக்கறிஞர்களின் பங்கு இல்லாமல், நீதி பரிபாலனம் நடக்காது. அவர்கள், நீதிமன்றங்களின் அதிகாரிகள். சில வழக்கறிஞர்கள் தான், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எல்லாம், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடு பவர்களை பற்றி தான்.எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு, பார் கவுன்சில் மற்றும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
* போலீஸ், ரவுடிகளுடன் சேர்ந்து, வழக்கறிஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா?
* வழக்கறிஞர்கள் தொடர்புடைய, கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
* சட்டக் கல்லுாரி மாணவர்களையும், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது, பார் கவுன்சில் மற்றும்போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியுமா?
* வழக்கறிஞர்களுக்கு எதிராக புகார்கள் அளித்தால்,அதை பதிவு செய்வதில்லையா; புகாரில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கும்படி வற்புறுத்தப்படுகின்றனரா?
* வழக்கறிஞர்கள் என கூறி கொள்பவர்கள், உண்மையில் வழக்கறிஞர்கள் தானா; அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, போலீசார் பயப்படுவது ஏன்?
* தமிழகத்துக்கு வெளியில் இருந்து, சட்ட

Advertisement

கல்லுாரிகளில் பட்டங்களை வாங்கி கொண்டு, கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு தேடுவது பற்றி, போலீசுக்கும், பார் கவுன்சிலுக்கும் தெரியுமா?
* இந்தியாவில், 175 சட்ட கல்லுாரிகள் போதுமானது என கூறினாலும், எந்த அடிப்படையில், 800 எண்ணிக்கையில் இருந்த சட்ட கல்லுாரிகள், 1,200 ஆக உயர்த்த, பார் கவுன்சில் அனுமதி வழங்கியது; மேற்கொண்டு சட்ட கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சிலுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?
* பத்து ஆண்டுகளில், சட்ட கல்லுாரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; எத்தனை பேர், பட்டம் பெற்றனர்; எத்தனை பேர், வழக்கறிஞர்களாக பதிவு செய்தனர்?
* போலீசாரும், வழக்கறிஞர்கள் என கூறி கொள்பவர்களும் சேர்ந்து, சொத்து பிரச்னைகளில் தலையிடுவதால், அதுகுறித்து வரும் புகார்களை விசாரிக்க, மாநில அரசு ஏன் ஒரு குழுவை நியமிக்கக் கூடாது?
* சட்டக் கல்லுாரிகளில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 'பயோ மெட்ரிக்' முறையை ஏன் கொண்டு வரக் கூடாது; வகுப்புகள் நடத்தாமல், உள்கட்டமைப்பு வசதியில்லாமல், எத்தனை கல்லுாரி கள், பட்டங்களை விற்கின்றன?
* சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 படிப்பில் குறைந்தபட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என, பார் கவுன்சில் ஏன் வரையறை செய்யக் கூடாது?
* வழக்கறிஞர்களின் தேவை பற்றி, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து விபரங்களை பெற்று, அதன் பின், புதிய சட்ட கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க, பார் கவுன்சில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

நீதிமன்றங்களில், 'பிராக்டீஸ்' செய்யும் வழக்கறிஞர்களை பாதுகாக்கவும், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்கவும், சட்ட கல்வியையும், வழக்கறிஞர் தொழிலையும் ஒழுங்குபடுத்தவும், இந்த நீதிமன்றம் முயற்சிகளை எடுக்கிறது.இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
08-டிச-201708:56:53 IST Report Abuse

sarathiஎல்லா வக்கீல்களின் சான்றிதழ்களையும் பரிசீலித்து ,சான்றிதழ்கள் அசலா அல்லது போலியா ,முதலில் கண்டுபிடித்தாகவேண்டும்

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
13-அக்-201719:06:10 IST Report Abuse

VOICEஅரசு அதிகாரிகளுக்கு பியூன் புரோக்கர் வேலை பார்த்த நீதிமன்றத்தில் நீதிபதிக்கு வக்கீல் தான் ப்ரோக்கர் என்ற பேச்சு மக்களிடம் பல காலமாக இருக்கிறது. மதுரை நீதிபதி PRP க்ரானைட் கேஸ் பைலை பார்த்த அழகு ஜெயலலிதா சொத்துக்குவிப்பில் குமாரசாமி கணக்கு ஊர் கைதட்டி சிரித்தது. நேர்மையான நீதிபதியாக இருந்தால் இருக்கவிடமாட்டார்கள். சில வக்கீல் பீஸ் கோடிகளில் வாங்குவதே தீர்ப்புக்கு கமிஷன் கொடுப்பதற்கு என்று மக்கள் பேசுவதை கேட்கமுடிகிறது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இந்தியாவில் ராணுவம் இறங்கி ஒரு நாள் நீதிபதிகள் போலீஸ் மற்றும் அரசு அதிகாரி வக்கீல்கள் மருத்துவர்கள் சார்ட்டட் அக்கௌன்டன்ட் மீது ரெய்டு விட்டால் மோடி சொல்லுகிற மாத்ரி 15 லட்சம் அல்ல 50 லட்சம் போடலாம் இன்னும் ஒரு படி மேல் ஆயுதம் வாங்கும் பொறுப்புகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளை சோதனை இட்டால் இன்னும் ஒரு 50 லட்சம் அதிகமா போடலாம். எல்லாரும் கெட்டவர்கள் அல்ல ஆனால் நல்லவர்கள் மைனாரிட்டியாகவும் கொள்ளைஅடிப்பவன் majority யாகவும் பதவி பொறுப்புகளில் இருப்பது தான் கொடுமை. இந்தியாவில் டெல்லி தமிழ்நாடு மக்கள் இளைஞர்கள் ஓர் அளவிற்கு விழிப்புணர்வு இருக்கிறது மற்ற மாநிலத்தை இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை..

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-அக்-201718:12:28 IST Report Abuse

நக்கீரன்யப்பா நீதிபதி முழிச்சிட்டாரு போல...சமூக அவலங்களுக்கு நீதிமன்றங்களும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தால் சரி.

Rate this:
Meenu - Chennai,இந்தியா
13-அக்-201716:19:04 IST Report Abuse

Meenuவக்கீல்களே ஒரு சிலர் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனை கையில் வைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்தில், எதிர் பார்ட்டியுடன், ஈடுபடுகின்றனர். லோக்கல் போலீசுக்கும் வக்கீலுக்கும் ஒரு understanding. இவர்கள் கூட்டு சேர்ந்து, நிறைய படித்த அப்பாவி பசங்க மீது பொய் வழக்குகள் பதிந்து, அவரகளது எதிர்காலத்தை பாழாக்கி இருக்கின்றனர். இதையெல்லாம் ஏன் மனித உரிமை ஆணையத்திற்கு தெரியவில்லை என்பது தான் புதிராய் இருக்கிறது.

Rate this:
ENMANAM -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201715:31:34 IST Report Abuse

ENMANAMஇவர்கள் சொத்தையும், இருப்பையும் பார் கவுன்சிலில் ரிஜிஸ்டர் செய்து பிறகு தான் இவர்களை வழக்காட அனுமதி தரவேண்டும். இவர்களால் பல குடும்பம் நடுத்தெருவுக்கே வந்துள்ளன. ஒரு சிலர் ஜாதியை(கீழ்) வைத்து பொய் கேசு போடுகிறார்கள். அதாவது தன்னை கீழ் ஜாதி என்று சொல்லிவிட்டான் .

Rate this:
kmish - trichy,இந்தியா
13-அக்-201715:07:56 IST Report Abuse

kmishதமிழகத்துக்கு வெளியில் இருந்து சட்ட கல்லுாரிகளில் பட்டங்களை வாங்கி கொண்டு என்று தீர விசாரிக்காமல் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது , அந்த அந்த கல்லூரிகளை நேரில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை அறிய முடியும் , மேலும் எந்த நாட்டு குடிமகனுக்கும் அடிப்படை தேவை சட்ட அறிவு , அது கிடைப்பதிற்கு நீதி மன்றம் கேள்வி எழுப்புவது வியப்பாக இருக்கிறது , சமூகத்தில் நல்ல மாற்றம் வேண்டும் என்றால் அனைவரும் சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம் , மேலும் ஒரு வழக்கு 20 வருடம் முப்பது வருடம் நடக்கும் பொழுது பாதிக்க படுபவர் சரியான நீதி சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது , இதற்காக தானே சட்டம் படித்து தன்னுடைய வழக்கை நடத்த துவங்கி உள்ளனர் , மேலும் நீதி மன்றங்களில் வாய்தாக்கள் அதிகமாக கொடுப்பதை தடுக்க வேண்டும் , மேலும் சட்டம் படிக்காமல் கட்ட பஞ்சாயத்து பண்ணுபவர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம்

Rate this:
Sulikki - Pudukkottai,இந்தியா
13-அக்-201711:42:08 IST Report Abuse

Sulikkiதாங்கள் சார்ந்த தொழில் பாதிக்கப்படும் போது மட்டும் இவ்வளவு கேள்விகள் கேட்கும் நீதிமன்றம், பொறியியல் கல்வி நிலையை மட்டும் கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 550 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. நாடு முழுவதும் எவ்வளவு இருக்கும்? தெருவுக்கு 10 இன்ஜினீயர் இருக்கான். இதை நீதிமன்றம் கேட்குமா?

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-அக்-201711:11:04 IST Report Abuse

ganapati sbவக்கீல்கள் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு ஆதரவாக பணத்திற்காக செயல்படுவதால் தான் ஏமாற்றப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் இதில் போலி வக்கீல்கள் செய்யும் கட்டப்பஞ்சாயத்து சேர்ந்தால் நீதி கிடைப்பது எப்போது வக்கீல்கள் திருந்தினால் ஊழல்அரசியல்வாதியோ அதிகாரியோ திட்டமிட்டு தவறு செய்யும் குற்றவாளியோ நீதிமன்றத்தில் தப்பமுடியாது

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-அக்-201711:09:30 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இதுல இன்னொரு கருத்தையும் சேருங்க எசமான் . அடிதடிக்கு தயாரா இருந்தா தான் சட்ட கல்லூரிப் பக்கம் போக முடியும். மற்றும் இடஒதுக்கீடு , ரௌடிசம் இருப்பதால் நேர்வழியில் இந்த தொழிலில் ஈடுபட நினைப்பவர்கள் இந்த பக்கம் வருவதில்லை .

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201710:56:04 IST Report Abuse

Sampath Kumarகட்ட பஞ்சாயத்து ஒன்னும் தப்பு இல்லை நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க ஹி ஹி ஹி

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement