பெங்களூரு சிறையில் சசி மீண்டும் அடைப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
பெங்களூரு சிறையில் சசி மீண்டும் அடைப்பு

பெங்களூரு: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவரை பார்க்க, பரோலில் சென்ற சசிகலா, மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு திரும்பினார்; நேற்று மாலை, அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 பெங்களூரு,சிறையில்,சசி,மீண்டும்,அடைப்பு

தகராறு உச்சக்கட்டத்தை எட்டியதால், சசியுடன் வருவதை தவிர்த்த தினகரன், தனியாக பெங்களூரு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற, சசிகலா, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை பார்ப்பதற்காக, சசிகலாவுக்கு ஐந்து நாள், 'பரோல்' வழங்கப்பட்டது.இதையடுத்து, 6ம் தேதி, சிறையிலிருந்து வெளியில் வந்த அவருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பார்வையாளர்கள் சந்திப்பு, அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது, ஊடகங்களுடன் பேசுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. 12ம் தேதி மாலை,6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐந்து நாட்களாக, சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று, தினமும், தன் கணவரை பார்த்து, நலம் விசாரித்தார். சென்னை, தி.நகரிலிலுள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவின் பரோல், நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டார்; உடன், இளவரசி மருமகன் ராஜராஜன் மட்டும் வந்தார்.பூந்தமல்லி, வேலுார், கிருஷ்ணகிரி வழியாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, மாலை, 4:30 மணிக்கு வந்தார்.

உட்கட்சி தகராறு உச்சக்கட்டத்தை எட்டியதால், சசியுடன் வருவதை தவிர்த்த தினகரன், முன் கூட்டியே தனியாக பெங்களூரு வந்தார். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில், சசிகலா காருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மீடியாக் கள் அனுமதிக்கப்படவில்லை; தொண்டர்கள் அனுமதிக்கப் பட்டனர்.

சிறைக்குள் சென்ற சசிகலாவுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் சென்றதும், இளவரசியை பார்த்து கண்கலங்கியதாக சிறைத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன. வெளி யில் இருந்த சம்பவங்கள் குறித்து, இளவரசியுடன் விவாதித்து உள்ளார்.

Advertisement

இதற்கிடையில், தன் ஆதரவாளர்களுடன் சிறை வளாகம் வந்த தினகரன், மாலை, 4:55 மணிக்கு, சிறைக்குள் சென்று, சசிகலாவை சந்தித்தார்.

ஆம்பூரில் பிரியாணி:


பரோல் முடிந்து, பெங்களூரு சிறைக்கு, சசிகலா காரில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. நேற்று காலை, சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு, வேலுார் வழியாக காரில் சென்றார்.வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை டோல்கேட்டுக்கு, காலை, 11:30 மணிக்கு வந்த சசிகலாவை, ஆதரவாளர்கள் வரவேற்றனர். பகல், 12:45 மணிக்கு, வேலுார் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும் வரவேற்பு அளித்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சசிகலாவுக்கு, வழியெங்கும், அ.தி.மு.க., அம்மா அணியினர், நீண்ட வரிசையில் நின்று, வரவேற்பு அளித்தனர். ஆம்பூரில் இருந்து மின்னுார் வரை, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், 2 கி.மீ.க்கு நீண்ட வரிசையில், நடு ரோட்டில் ஆதரவாளர்கள் நின்றனர்.

இதனால், அந்த பகுதியில், அரை மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. முன்னதாக, வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே உள்ள குத்துாஸ் கடையில், சசிகலா டீ சாப்பிட்டார். ஆம்பூரில், பிரியாணி சாப்பிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
13-அக்-201717:52:08 IST Report Abuse

narayanan iyerதியாகத்தலைவி என்கிறார்களே எதை தியாகம் செய்தார்? ஜெயாவை மூலதனமாகக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு சொத்தை சேர்த்து ஜெயாவை கெடுத்து , கொலைசெய்தது தான் தியாஹமா? தாலி கட்டிய கணவனை பிரிந்து வந்து பணத்திற்காக வேலை செய்தது தியாகமில்லை . கணவனுக்கு பணிவிடைசெய்து வாழாமல் வாழ்ந்து என்னப்பயன்? ஒரு மஹாபாவி .

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
13-அக்-201716:40:35 IST Report Abuse

Shanuஒரு களவாணிக்கு இந்த மீடியா எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ??

Rate this:
Prem - chennai,இந்தியா
13-அக்-201716:32:16 IST Report Abuse

Premதெரிந்தோ தெரியாமலோ கர்நாடக அரசு பரோல் வழங்கி விட்டது இனி அப்பிடி ஒரு தவறை அந்த அரசு செய்ய கூடாது சசி சிறைக்கு உள்ளேயே இருந்து சாகட்டும்

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X