தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு விசாரணை 27க்கு தள்ளிவைப்பு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
வழக்கு விசாரணை 27க்கு தள்ளிவைப்பு

சென்னை:உரிமை மீறல் பிரச்னையை எதிர்த்தும், துணை முதல்வர் உள்ளிட்ட, 12 எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரியும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையை, வரும், 27க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தி.மு.க., DMK,   சென்னை உயர் நீதிமன்றம்,Chennai High Court,  குட்கா,Gudka,  புகையிலை , Tobacco, சட்டசபை, Assembly, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், Opposition leader Stalin, நீதிபதி எம்.துரைசாமி, Justice M Duraiasamy,கொறடா சக்கரபாணி, whip Chakrapani, நீதிபதி ரவிசந்திரபாபு ,Judge Ravi Chandrapabhu,  வழக்கறிஞர் கபில்சிபல், Advocate Kapilsipal, எம்.எல்.ஏ., MLA,விசாரணை, Investigation,சென்னை,உரிமை மீறல் பிரச்னை,Right Violation PROBLEM, துணை முதல்வர்,Deputy Chief Minister,

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, சட்டசபைக்கு, தி.மு.க., -

எம்.எல்.ஏ.,க்கள் எடுத்து வந்து, பிரச்னையை எழுப்பினர். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேர் மீது, உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து, விளக்கம் அளிக்கும்படி, 21 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும், மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த,நீதிபதி, எம்.துரைசாமி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட்டு, மறுஉத்தரவு வரும் வரை, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என, இடைக்கால தடை விதித்தார்.

அதேநேரத்தில், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 12 எம்.எல்.ஏ.,க்கள், அரசு கொறடா உத்தரவை மீறி ஓட்டளித்ததால், அவர்களை தகுதி இழப்பு செய்யகோரி,சென்னை

Advertisement

உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., கொறடா, சக்கரபாணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டுமனுக்களும், நீதிபதி ரவிசந்திரபாபு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சட்டசபை செயலர் தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ''நம்பிக்கை ஓட்டெடுப்பில், எதிர்த்து ஓட்டு அளித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை; ஆளும் கட்சி கொறடா உத்தரவு மீறப்பட்டது,'' என்றார்.

சட்டசபை செயலர் தரப்பில் ஆஜரான, அட்வ கேட் ஜெனரல், விஜய் நாராயண், பதில் அளிக்க அவகாசம் கோரினார். அதற்கு, மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். பின், 2 வழக்குகளின் விசாரணையையும், வரும், 27ம் தேதிக்கு, நீதிபதி, ரவிச்சந்திரபாபு தள்ளி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rama - johor,மலேஷியா
13-அக்-201718:38:29 IST Report Abuse

ramaவருங்காலம் ஒரு நபருக்கு ஒரு நீதிமன்றம் இதுதான் வருங்கால இநதியா இனி ஜிஸ்டி வருமானமெல்லாம் நீதிமன்றத்திடம் கொடுத்துவிடுங்கள் சம்பளசம்பளமாக

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
13-அக்-201718:15:59 IST Report Abuse

venkateshஜவ்வு மிட்டாய் அடுத்த தேர்தலுக்குலாவது வழக்கு முடியுமா ?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
13-அக்-201709:17:31 IST Report Abuse

balakrishnanஒரு பக்கம் குட்கா அவைக்கு எடுத்து வந்து காண்பித்தது குற்றம், அவர்களுக்கு தண்டனை, ஆனால் அடுத்த பக்கம் குட்கா விற்பனை தொடர்பாக லஞ்சம் பெற்றவர்கள் மீது வழக்கு, ஆக குட்கா புழக்கத்தில் இருந்தது நிரூபணம் ஆகிறது,

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X