பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகள், பணம் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகள், பணம் கொள்ளை

Added : அக் 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகள், பணம் கொள்ளை

திருநெல்வேலி, திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே உள்ள ராம்நகரில் குடியிருப்பவர் தேவி 32. இவர் துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். புதிதாக ராம்நகரில் வீடுவாங்கி குடிவந்துள்ளார். அதனால் தேவியின் தந்தை அருணாசலம் மற்றும் தாயாா் சகுந்தலா உடன் வசிக்கின்றனர். தேவியின் கணவர் சுப்பிரமணியன் இரவில் வெளியே சென்றிருந்தார். இரவு 8.45 மணியளவில் கைக்குட்டை துணியால் முகமூடியணிந்த மூன்று பேர் கும்பல், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் சென்றனர். பெரியவர் அருணாசலத்தைக் கயிற்றால் கட்டிப் போட்டனர்.
தேவி மற்றும் அவரது தாயார் சகுந்தலாவை வீட்டின் இன்னொரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 13 பவுன்நகை மற்றும் 70000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லையில் கடந்த சில மாதங்களாக இத்தகைய கொள்ளையர்களின் கைவரிசை தொடர்ந்து நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை