'டெங்கு' கொசுவை ஒழிக்க துப்புரவு பணி கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டெங்கு' கொசுவை ஒழிக்க துப்புரவு பணி
கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:'அனைத்து மாவட்டங்களிலும், 15 நாட்களுக்கு, 'டெங்கு' கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள பகுதிகளில், கலெக்டர்கள் தலைமையில், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 டெங்கு கொசு, Dengue mosquito, கலெக்டர்கள் ,collectors,முதல்வர் பழனிசாமி ,  Chief Minister Palanisamy, சென்னை, Chennai, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,  Deputy Chief Minister Panneerselvam, ஏடிஸ் கொசு, Etis  mosquito, மருத்துவமனை,Hospital,  டெங்கு காய்ச்சல், Dengue Fever,

டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், டெங்கு ஏற்படுத்தும், 'ஏடிஸ்' கொசுக்களை ஒழிக்க, தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு

பிரசாரம், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், முதல்வர் ஆய்வு செய்தார்.

அதன்பின், அதிகாரிகளுக்கு, முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:

* அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள் தலைமையிலும், சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், வரும், 15 நாட்களுக்கு, டெங்குகொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள, நீர் தேங்கும் இடங்கள், குப்பை, கட்டுமானப் பகுதிகள் போன்றவற்றில், முழுமையாக துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும்
* இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக, சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள், தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், துப்புரவு பணி நடைபெறுவதை கண்காணித்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
* இப்பணிகளை கண்காணிப்பதற்காக, கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும், கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
* பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில், இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்

Advertisement

* சுத்தம் செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப் பட்டால், அந்த இடத்தின் உரிமையாளர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அனைத்து மருத்துவமனைகளிலும், கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர்
* இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, தேவைகளை நிறைவேற்றவும், ஒவ்வொரு மாவட்டத்திற் கும் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள், உடனடியாக மாவட்டத்திற்கு சென்று, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Gunasekaran - Lakshmipuram,இந்தியா
13-அக்-201722:33:03 IST Report Abuse

P GunasekaranI am subedar P Gunasekaran of Indian Army, a resident of Surya Nagar lakshmipuram again invited your kind attention towards poor hygiene and sanitary problem being faced by the residents of the area. I raised the issue before three months to your kind office for which you had instructed the concerned area health inspector to submit a report on this issue. However, despite elapse of considerable time, no action has been taken by any authority and day by day, the condition of the area become very worsening. I think the concerned authorities will wake up once any untoward incident like series illness or any death has taken place. The above complaint has been out up by me to the hon'ble district collector, BDO, Health Department and the Panchayat Office in number of tomes in the last two to three years. No nody has taken any action till date.

Rate this:
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
13-அக்-201721:05:17 IST Report Abuse

raguraman venkatநமக்கு தான் 'Swach Bharath' பிடிக்கவே பிடிக்காதே, அப்புறம் எப்படி கொசுவைக் கட்டுப்படுத்துவது? இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தேன். ரயிலில் பயணம் செய்யும் போது எதிரில் அமர்ந்திருந்த பயணி (ஆங்கிலப் பத்திரிகை படித்தார், புதிய ஏற்பாடும் படித்தார்) குடித்து விட்டு அந்த தேநீர் கோப்பையை தன் காலடியிலேயே நசுக்கினார். பொறுக்க முடியாமல், நானே வாங்கி அதை குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அரசாங்கம் எதுவும் செய்வதில்லை என்று எனக்கு உபதேசம் வேறு. Many times I think that and I am fairly certain that had MMS or PC introduced this Swach Bharath or Demonitization or GST, there would not have been such a fierce opposition in Tamil Nadu (and my thinking gets more convincing from the recent agitation for Jallikattu, Methene, ONGC issues - all these things were started when previous Government was in the office, and no one even knew about those projects, and now all of a sudden everything becomes anti-Tamil Nadu. Losers). சாராயத்துக்கும் பணத்துக்கும் ஓட்டை விக்கிற அடிமைகளை கொசு கடிக்காம பின்ன மயிலா வந்து தன் இறகால தடவிக் குடுக்கும்

Rate this:
venkat - chennai,இந்தியா
13-அக்-201720:20:38 IST Report Abuse

venkatஅமெரிக்காவில் 6 மாதம் சுற்றுலா பயணியாக தங்கி இருந்த பொது ஒரு கொசு, ஒரு ஈ பார்க்கவில்லை. வீட்டிலும் வெளியிலும் கடைகளிலும் சாலைகளிலும் பொது இடங்களிலும் ஒரு குப்பை யாரும் தரையில் போடுவது இல்லை. அவ்வளவு சுத்தம். வீடுகளில் பாத்ரூமில் குளிக்கும் தண்ணீர் கூட தரையில் சிந்தாமல் குளியல் தொட்டி குழாய் வழியே மறுசுழற்சிக்கு செல்லும். கிச்சன் தண்ணீரும் அவ்வாறே. குப்பைகள் வீட்டிலேயே மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இரண்டு பைகளில் கட்டப்பட்டு அவரவர் மாடி சூட் வழியே தரைத்தளத்துக்கு அனுப்பப்பட்டு மக்கா குப்பைகள் யாவும் மறுசுழற்சி செய்யப்படும். மக்கும் குப்பை எரிபொருள் மற்றும் கம்போஸ்ட் போன்று பல வழிகளில் குப்பை மேடு ஆகாமல் பயன் படுத்தப் படும். எல்லா பொது இடங்களிலும் இரண்டு குப்பை தொட்டிகள் (மக்கும், மக்கா) இருக்கும். யாரும் தொட்டிக்கு வெளியே குப்பை போட்டால் அபராதம் கட்டாயம் கட்ட வேண்டும். எல்லா பொது இடங்களிலும் மிக சுத்தமான கழிப்பிடம் அழகாக அமைக்கப் பட்டு இருக்கும். திறந்த வெளியில் சிறுநீர் கழித்தால் கட்டாயம் மாட்டிக்கொண்டு கட்ட வேண்டிய அபாரதத்திற்கு பயந்து எல்லோரும் கழிப்பிடத்தை சுத்தமாகப் பயன் படுத்துவர். சாலைகளிலும்சி, நடைபாதைகளிலும் ஒரு ஆக்கிரமிப்பு இருக்காது. ஏரி, குளம், ஆறுகளில் எந்த ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப் படாது. சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் இவ்வாறே பொது இடங்களில் சுத்தம் பராமரிக்கப் படுகிறது. அங்கு சட்டங்கள் தயவு தாட்சயமின்றி அமுலாக்கப் படுகின்றன. இங்கு டெங்கு கொசு நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை இடுகிறது என்று ஒரு கதை விட்டு, கெட்ட சாக்கடை தண்ணீரை தெருவில். ஆறுகளில், குளம், ஏரிகளில், மழை நீர் கால்வாய்களில் விட்டால் கேட்க எந்த அலுவலருக்கும் கடமை இல்லை என்பது போல் ஒரு மாய வார்த்தை பேசி எங்கும் பரவி உள்ள அசுத்தத்தால் நோய் எல்லோருக்கும் பரவி குழந்தைகள் நோயினால் இறந்த பின் மறுபடியம் குப்பையை எடுக்காமல் மருந்து அடிக்கிறார்கள், கஷாயம் தருகிறார்கள். A to Z சுத்தம் இருந்தால் தான் மக்கள், குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X