தமிழகத்துக்கு கருணை காட்டிய தென் மேற்கு பருவ மழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு கருணை காட்டிய தென் மேற்கு பருவ மழை

Updated : அக் 13, 2017 | Added : அக் 13, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகம்,tamilnadu, கருணை,grace, தென் மேற்கு பருவ மழை , South Western Monsoon,புதுடில்லி,New Delhi,  இந்திய வானிலை ஆய்வு மையம்,Indian Meteorology Center,  ஆந்திரா, Andhra Pradesh, தெற்கு கர்நாடகா, South Karnataka,தெலுங்கானா,  Telangana, புதுச்சேரி, Pondicherry,கே.ரமேஷ் , K.Ramesh,

புதுடில்லி: தென்மேற்கு பருவமழை, தமிழகத்தில் தான் அதிகமாக பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை, ஜூனில் துவங்கி, செப்டம்பரில் முடியும். இந்த ஆண்டு, மே, 30ல் பருவ மழை துவங்கியது; நாடு முழுவதும் கொட்டி தீர்த்தது. செப்., 15க்கு பின், வட மாநிலங்களில் மழை குறையத் துவங்கியது.

நேற்றைய நிலவரப்படி, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரியில் மட்டும், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. படிப்படியாக குறைந்து, ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அளவு விபரங்களை, இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர், கே.ரமேஷ் வெளியிட்டுள்ளார்.


அதன் விபரம்:


• தென்மேற்கு பருவ மழை காலத்தில், வழக்கத்தை விட அதிகமாக, தமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது
• நாடு முழுவதும், 84.1 செ.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், 90; மத்திய மாநிலங்களில், 94; கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில், 96 சதவீதமும் மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில், 100 சதவீதம் பெய்துள்ளது
• தென் மாநிலங்களில், இயல்பாக பெய்ய வேண்டிய, 71.6 செ.மீ.,க்கு பதில், 71.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, தமிழகம், புதுச்சேரியில், இயல்பான அளவான, 31.7 செ.மீ.,க்கு பதில், 41.4 செ.மீ., பெய்து உள்ளது
• இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலத்தில், புயல் எதுவும் உருவாகவில்லை. ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆறு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் ஐந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-அக்-201719:38:44 IST Report Abuse
THINAKAREN KARAMANI இனி அடுத்த வருட மழைக் காலத்துக்குள்ளாவது அரசியல் குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நீர் நிலைகளைச் செம்மைப்படுத்தி எல்லா ஆறுகளிலிருந்தும் அருகிலுள்ள எல்லா ஏரி குளங்களுக்கு வழிகள் அமைத்துக்கொடுத்து அணைத்தும் நிரம்பிவழிய ஏற்ப்பாடு செய்யுங்கள். நாடு செழிக்கும் வளம் பெரும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
Chola - bangalore,இந்தியா
13-அக்-201712:12:20 IST Report Abuse
Chola இவ்வளவு மழை பெய்தும் வைகையில் நீர் இல்லை எனும் போது மிகுந்த வேதனையாக உள்ளது :(
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201709:54:02 IST Report Abuse
Rockie-பாலியல் ஜனதா கட்சி 100 சதவீதம் இல்ல 200 சதவீதம் மழை பெய்தாலும் நாங்க மழை நீரை, அணைகளிலோ/ எதிலும் சேமிக்க மாட்டோம். சேமித்தால் எங்களால் அரசியல் செய்யமுடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X