ஈரோடு மாட்டுச்சந்தையில் வரத்து சரிவு | Dinamalar

ஈரோடு மாட்டுச்சந்தையில் வரத்து சரிவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஈரோடு மாட்டுச்சந்தையில் வரத்து சரிவு

ஈரோடு: 'தொடர் மழையால், ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு, மாடுகள் வரத்து சரிந்தன' என்று, மாட்டுச்சந்தை நிர்வாகி தெரிவித்தார்.
கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையின் மேலாளர் முருகன் கூறியதாவது:
வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரம், சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருக்கும். மாடுகளை விற்கும் பணத்தால் தான், தீபாவளியை விவசாயிகள் கொண்டாடுவர்.
கடந்த சில மாதங்களாக, பரவலாக மழை பெய்கிறது. இதனால், மாடுகள் வரத்தும் சரிவடைந்துள்ளது. கடந்த வாரம், வியாழன் நள்ளிரவு முதல், வெள்ளி அதிகாலை வரை, ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அன்று மாடுகளை ஏற்றி சென்ற வாகனங்கள், கடும் சிரமங்களை சந்தித்தன.
இதேபோல் நேற்று முன்தினம் திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள், மாடுகளை வாகனங்களில் கொண்டு வந்தால் சிரமத்துக்குள்ளாவோம் என்று, சந்தைக்கு வரவில்லை.
இந்த வாரம், 300 பசுக்கள், 250 எருமைகள், 150 வளர்ப்பு கன்றுகள் என, 700 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
பசு மாடு, 16 ஆயிரம் முதல், 32 ஆயிரம் ரூபாய்; எருமை, 18 ஆயிரம் - 36 ஆயிரம் ரூபாய்; வளர்ப்பு கன்றுகள், 2,000 முதல், 8,000 ரூபாய் வரை விற்பனையாகின.
கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும், வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தும், மாடுகள் வரத்து குறைவால், ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.