கே.ஆர்.பி., அணையில் 4,644 கன அடி நீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் 4,644 கன அடி நீர் திறப்பு

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கே.ஆர்.பி., அணையில்  4,644  கன அடி நீர் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு, தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் காவேரிப்பட்டணம் பகுதிகளில், நான்கு மணி நேரம் கன மழை பெய்தது.
இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 50.45 அடியாக இருந்தது. வினாடிக்கு, 3,798 கன அடி நீர் வந்தது. பாதுகாப்பு கருதி, வினாடிக்கு, 4,644 கன அடி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, அணைக்கு வந்த, 4,554 கன அடி நீர் முழுவதும், அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.
அணையின் கீழ் பகுதியில் உள்ள தரைப் பாலத்தில், 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதோடு, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும், ஐந்து மாவட்ட மக்களுக்கு, தொடர்ந்து, 53 நாட்களாக, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு, சுற்றுலா பயணியர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை