போலீஸ் செய்திகள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓய்வில் '100'
மதுரை: நகர் போலீஸ் கட்டுபாட்டு எண்
100 தற்காலிகமாக செயல் இழந்துள்ளது. இதன்காரணமாக தற்காலிக எண்ணான 0452 - -
233 0070 அல்லது 94981 81207 ல் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.
வீட்டில் திருட்டு
மதுரை: நாகனாகுளத்தைச் சேர்ந்தவர் முகமது மொகைதீன்,75. உறவினர் திருமணத்திற்காக
பெரியகுளத்திற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, வீடு திரும்பினார். அப்போது கதவு
உடைக்கப்பட்டு 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. தல்லாகுளம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
சிறையில் கஞ்சா
மதுரை: மத்திய சிறையில் போலீசார் திடீர்
சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2வது பிளாக்கில் 4வது 'செல்'லில் ஒரு கைதியின்
போர்வைக்கு அடியில் இருந்து 50 கிராம் கஞ்சா, ஒரு அலைபேசி, பேட்டரி, சிம் கார்டு
கண்டெடுக்கப்பட்டது.
நுாதன திருட்டு
வாடிப்பட்டி: சடையம்பட்டியை சேர்ந்தவர்
விவசாயி கருப்பு,68. நேற்று முன்தினம்
வாடிப்பட்டி வங்கியிலிருந்து 47 ஆயிரம் ரூபாய் எடுத்துவிட்டு பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார், அங்கு வந்த ஒருவர், 'சட்டையில் பறவை எச்சம் உள்ளது' எனக்கூறி, கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடினார். வாடிப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை