மதுரையில் மாற்று இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம் : உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் மாற்று இடத்தில் ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததை, ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாற்று இடத்தில் அக்.,22ல் நடத்த அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆர்.எஸ்.எஸ்., செயலாளர் கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
விஜயதசமி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பு தினத்தையொட்டி அக்.,8 மாலை 5:00 முதல் 6:00 மணி வரை மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபத்திலிருந்து அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் வரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் விண்ணப்பித்தோம்.
மதுரை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) அனுமதி மறுத்தார். இது சட்டவிரோதம். அந்த உத்தரவை ரத்து செய்து அனுமதி மற்றும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கிருஷ்ணன் மனு செய்திருந்தார்.இதை அவசர வழக்காக அக்.,6ல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். அரசு வழக்கறிஞர்,''மனுதாரர் அமைப்பின் ஊர்வலம், பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளன. அங்கு அனுமதித்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும்,'' என்றார்.
நீதிபதி,''ஊர்வலம் நடத்த மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து மனுதாரர் தரப்பினருடன், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
இதன்படி சில மாற்று இடங்கள் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேற்று பிறப்பித்த உத்தரவு:
போலீசார் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர் அமைப்பு அக்.,22ல் மதுரை பைபாஸ் ரோடு முதல் பழங்காநத்தம் சந்திப்பு வரை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
காயங்களை ஏற்படுத்தும் லத்தி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை ஊர்வலத்தின்போது எடுத்துச் செல்லக்கூடாது. ஊர்வலத்திற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், நிபந்தனைகளுக்குட்பட்டு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதியளிக்க வேண்டும் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
13-அக்-201707:12:18 IST Report Abuse
தேச நேசன் அராஜகத்தடை வெறெந்த மாநிலத்திலுமில்லை காழ்ப்புணர்ச்சி மயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை