கொலை வழக்கில் மீண்டும்சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் மீண்டும்சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்

Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



திருநெல்வேலி, நெல்லையில் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார்நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.துாத்துக்குடி மாவட்டம் ஆத்துார், புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம,47.தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் தலைவராக இருந்த பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்.நெல்லை மத்திய சிறையில் கைதியாக இருந்தவர், கடந்த பிப்ரவரி 24ல் துாத்துக்குடிகோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்துச்சென்றனர்.அப்போது ஒரு கும்பலால் சிங்காரம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், சுபாஷ்பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியன் சேர்க்கப்பட்டார்.வழக்கில் மற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ்பண்ணையார் தலைமறைவாக இருந்தார்.அவர் தலைமறைவான குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. சுபாஷ் பண்ணையார் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரப்பட்டது.வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெறலாம் என நீதிமன்றம் அறிவித்தது.அதன்பேரில் கடந்த 10ம் தேதி நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.நீதிபதி சந்திரா அவருக்கு ஜாமின் வழங்கினார். மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். அதன்படிநேற்று மீண்டும் நெல்லை கோர்ட்டில் ஆஜரானார். அவரை இம்மாதம் 26ல் மீண்டும்ஆஜராக உத்தரவிட்டார். அந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ள கைதிகள் 13 பேரும் அங்கிருந்தபடியே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X