‛டெங்குவால் உயிரிழப்பு இல்லை': 'சரவெடி' ராஜு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛டெங்குவால் உயிரிழப்பு இல்லை': 'சரவெடி' ராஜு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (76)
Advertisement
டெங்கு, Dengue, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு ,
Co-operative Minister Raju, டெங்கு விழிப்புணர்வு,Dengue awareness, டெங்கு காய்ச்சல், Dengue Fever, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,
DMK chief executive Stalin, அரசு மருத்துவமனை,Government Hospital, பிரதமர் மோடி, Prime Minister Modi, துணை முதல்வர் பன்னீர்செல்வம், Deputy Chief Minister Panneerselvam, மதுரை,Madurai, தமிழகம்,Tamil Nadu, செல்லூர் ராஜூ,sellur Raju,

மதுரை: ''தமிழகத்தில் டெங்குவால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும், தீவிர டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல்செய்கின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவை கட்டுப்படுத்த, போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரத்தவங்கிகளிலும் தேவையான அளவு ரத்தம்உள்ளது. கொசுக்களை ஒழிப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும், என்றார்.


டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் உயிர் இழக்கவில்லை. இறப்பு தடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் மற்றும் எதிர் கட்சியினர் டெங்கு காய்ச்சலை வைத்து அரசியல் செய்கின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தெரிவித்தார்.

மேடையை சுற்றி கொசு மருந்து:

செல்லுார் ராஜு செல்லும் இடங்களில் ஏதாவது தடாலடியாக பேசுவார் என, 'மீடியாக்கள்' வம்புக்காக அவர் முன் மைக் நீட்டி கருத்து கேட்கின்றன. அவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தமிழகமே டெங்கு பாதிப்பால் பதறிக்கிடக்கும் நிலையில், அதன் தீவிரம் உணர்ந்து முதல்வர் முதல் அதிகாரிகள் வரை உயிரிழப்பு குறித்து புள்ளி விபரங்களுடன் பேசி வருகின்றனர். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பேட்டி அளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், டெங்கு பாதிப்பை உணர்ந்து மத்திய மருத்துவ குழுவை அனுப்ப மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அமைச்சர் ராஜுவோ, ''டெங்குவால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை,'' என காமெடி சரவெடிகளை தெறிக்க விடுகிறார்.

நேற்று, 'டெங்கு விழிப்புணர்வு' என்ற பெயரில், நிகழ்ச்சி நடந்த மேடையை சுற்றி கொசு மருந்து தெளிப்பது போல் நான்கு முறை 'போஸ்' கொடுத்தார். மேலும், 'டெங்குவால் மரணம் இல்லை' என காமெடிகளை அவிழ்த்து விட்டது அப்பகுதியினரை கடுப்பேற்றியது.

Advertisement
வாசகர் கருத்து (76)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
P.MANIMARAN - V.KEERANUR,இந்தியா
16-அக்-201702:22:26 IST Report Abuse
P.MANIMARAN இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும் வரை இந்தியா உருப்படுமா????
Rate this:
Share this comment
Cancel
Prem - chennai,இந்தியா
13-அக்-201716:33:58 IST Report Abuse
Prem அரசு சரியான முறையில் இயங்கி வருகிறது டெங்குவை தடுக்க எல்லாம் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன
Rate this:
Share this comment
Cancel
niki - Chennai,இந்தியா
13-அக்-201716:08:22 IST Report Abuse
niki denguva control panna makkaloda othulaippu mikavum avasiyam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X