சபரிமலையில் பெண்கள் தரிசனம்: சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய முடிவு| Dinamalar

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய முடிவு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சபரிமலை,பெண்கள்,தரிசனம்,சுப்ரீம் கோர்ட்,முக்கிய முடிவு,Supreme Court

புதுடில்லி : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று(அக்.,13) முக்கிய முடிவு எடுக்கிறது.

சபரிமலையில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான முடிவை சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்., மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JOKER - chennai,இந்தியா
13-அக்-201710:34:09 IST Report Abuse
JOKER ஒரு கோவிலின் பாரம்பரிய முறையில் கோர்ட் ஏன் தலையிடவேண்டும் .இந்த வழக்க விசாரிக்க உகந்தது அல்ல
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
13-அக்-201710:07:05 IST Report Abuse
V.Rajeswaran ஐயப்பன் பார்த்துக்கொள்வார் இந்த பிரச்சனையை சாமி சரணம் ஐயப்ப சரணம்
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-அக்-201710:05:10 IST Report Abuse
P. SIV GOWRI இளம் பெண்கள் சபரி மலைக்கு போவது அழிவுக்கே வழி வகுக்கும். தேவை இல்லாத வேலை
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-அக்-201709:27:59 IST Report Abuse
Kasimani Baskaran கோவில்களில் நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கமுடியும்? இதே போல மசூதிகளில் யார் யார் போகவேண்டும் என்று தீர்ப்பு சொல்வார்களா? இளித்தவாயர்கள் இந்துக்கள் மட்டுமே..
Rate this:
Share this comment
Cancel
athikesavan - sholavandan  ( Posted via: Dinamalar Windows App )
13-அக்-201709:27:37 IST Report Abuse
athikesavan சிவன் சொத்து குல நாசம் ஆக போகிறது
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
13-அக்-201709:05:29 IST Report Abuse
Mal Please stay away from religious matters.... Dear respected Supreme court.... Those feminists who don't go to temples or believe in gods are the ones who protest... We need not pay heed to them... Kerala is going to get ruined .... First Padmanabha temple ing of lockers and now aiyapan temple issue ... These non Hindus of Kerala are taking Kerala to destruction.... Please leave Hindu temple issues to Hindus and concentrate in social n national issues ....instead
Rate this:
Share this comment
Cancel
A R J U N - ,இந்தியா
13-அக்-201709:03:17 IST Report Abuse
A R J U N எது எதுல எல்லாம் தலையிடுவது என 'அரசியல்'வாதிகள்..இப்போது நீதிமன்றம்- ஆகம விதிகள் என்ன சொல்கின்றன? என ஒருவராவது நினைத்ததுண்டா.. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நீதி மன்றம் தலையிடலாமா.. SORRY என தான் சொல்ல தோன்றுகிறது.. அது முன்னோர் பரம்பரையாக ஏற்படுத்திய விதிகள்... மீறலாகாது..அழிவிற்கு "வழிவகுக்கும்".. இன்னும் என்னென்ன நடக்குமோ .இறைவா
Rate this:
Share this comment
Cancel
V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்
13-அக்-201708:24:03 IST Report Abuse
V .வெங்கடேஷ் எதற்கு இந்த வீம்பு..யார் கேட்டார்கள்.. இறை நம்பிக்கை உள்ள பெண்கள் ஒரு விஷயம் மரபு மீறல் என்றால் நிச்சயமாக செய்யமாட்டார்கள்.. பாப் கட் மாதர் சங்க போராளிகளுக்கோ கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது.. இவர்கள் என்ன வருஷாவருஷம் இருமுடி எடுத்து மலையேற போறார்களா?..பிறகு யாருக்காக இதனை ஆர்பாட்டம் சத்தியமாக புரியவில்லை... இதே கேரளாவில் சில பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன...அங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை... ஆண்கள் அனுமதி கேட்டு போராடப்போவதுமில்லை.. அனுமதிக்கவில்லையே என்று கவலைப்படப் போவதுமில்லை..சில இடங்களில் சில கட்டுப்பாடுகள் நமக்கு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இருப்பதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201707:39:54 IST Report Abuse
Srinivasan Kannaiya அய்யப்ப சரணங்களுடன் முக்கல் முனகல்களை கேட்க வைத்து விடாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
RENU - Chennai,இந்தியா
13-அக்-201707:39:46 IST Report Abuse
RENU அயோத்யா ராமஜென்ம பூமி வழக்கு எழுபத்தி ஐந்து வருடங்கள் கழித்தும் தீர்ப்பு வழங்க வில்லை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை