முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா சீதாராமன் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா சீதாராமன் முடிவு

Added : அக் 13, 2017 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முப்படை, triple force,தீபாவளி,Deepavali, நிர்மலா சீதாராமன்,Nirmala Sitharaman, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், Defense Minister  Nirmala Seetharaman,இந்தியா,  India, அந்தமான் நிகோபார் தீவு, Andaman and Nicobar Island, பிலிப்பைன்ஸ், vPhilippines, BJP,Nirmala,புதுடில்லி,New Delhi,

புதுடில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார்.


கொண்டாட்டம்:

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியாவின் முப்படைகளும் அந்தமான நிகோபார் தீவுகளில் நிலைகொண்டுள்ளன. அங்கு வரும் 18ம் தேதி(அக்.,18) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் தினமான அக்.,19ம் தேதி, முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா தீபாவளி அந்தமானில்


பிலிப்பைன்ஸ் பயணம்:

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். அக்., 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பிலிப்பைன்ஸ் செல்லும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரான பின், நிர்மலா சீதாராமன் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
13-அக்-201714:43:31 IST Report Abuse
truth tofday திடீர் தலைவியின் தியாகங்களில் இதுவும் ஒன்று, பி ஜி பி க்காக இவர் செய்த இந்த தியாகம் தான் பெரியது கரசேவகர்கள் பி ஜி பிக்காக உயிர் விட்டவர்கள் தியாகத்தை விட இவர் தீபாவளி கொண்டாடும் தியாகம் தான் பெரியது திடீர் தலைவியும் இந்திய வரலாறு படைத்துக் கொண்டே இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
Hariharan Iyer - Nagpur,இந்தியா
13-அக்-201714:26:43 IST Report Abuse
Hariharan Iyer அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீமதி சீதாராமன் அவர்களே. உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களை போல் நேர்மையாக உழைக்கும் அரசியல்வாதிகள் குறைவு. இத்தாலியின் அடிவருடிகள் பொறாமையால் பேசும் வார்த்தைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
13-அக்-201714:24:22 IST Report Abuse
vnatarajan அந்தமானில் தீபாவளி கொண்டாடும் மேடம் நிர்மலா சீதாராமனுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். எப்போதுமே அவர் எடுத்துக்கொண்ட துறை ஒளிர்விட்டு பிரகாசிக்கும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை