பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா

Added : அக் 13, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா,India, பட்டினி நாடுகள், Hungry countries, வடகொரியா, North Korea,  சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் , International Food Policy Research Institute,ஆப்கானிஸ்தான், Afghanistan,பாகிஸ்தான், Pakistan, குழந்தைகள்,Children,  ஊட்டச்சத்து குறைபாடு, Nutrition Disorder, புதுடில்லி, New Delhi, வங்கதேசம், Bangladesh,ஈராக் , Iraq,

புதுடில்லி : வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து வடகொரியா, வங்கதேசம், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97 வது இடத்தில் இருந்தது.
சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.
உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-அக்-201719:21:04 IST Report Abuse
THINAKAREN KARAMANI நமது நாட்டில் எல்லாவளமும் இருந்தாலும் நதிகள் இணைப்பை நிறைவேற்றி திட்டங்களில் "விவசாயத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும்" என்ற கோட்பாடோடு நாட்டை நடத்திச் சென்றால் நிச்சயமாக பட்டினி என்கிற பேச்சே வராது. THINAKAREN KARAMANI, VELLORE, INIDA.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-அக்-201716:40:12 IST Report Abuse
Endrum Indian அந்த ஆய்வறிக்கையில் உள்ளே நுழைந்து பார்த்தால் இந்தியாவில் இது முஸ்லிம்களின் அளவில்லாத ஜனப்பெருக்கத்தால் என்று இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
13-அக்-201715:24:24 IST Report Abuse
Karuthukirukkan இந்தியா இந்த பட்டியலில் 2003 ஆம் ஆண்டில் 96 வது இடத்திலும் , 2014 இல் 55 ஆவது இடத்திலும் இருந்தது .. இப்போது மோடிஜியின் மிக சிறந்த ஆட்சியால் 100 வது இடத்துக்கு வந்திருச்சு .. செம செம .. இப்படி தான் நாட்டை வளர்க்க வேண்டும் .. நாங்க ஆதார் மூலம் சேமித்துவிட்டோம் சேமித்துவிட்டோம் என்று சொன்னாரகளே ?? ஞாபகம் இருக்கா ?? அது இப்பிடி தான் .. ஏழைகளுக்கு சென்று கொண்டிருந்த உணவு தானியங்களை குறைத்து சேமித்த சாதனை .. இன்னமும் கொஞ்ச நாள் தான் மானியம் முற்றிலும் தடை பண்ணிட்டா , இந்த பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துரலாம் .. அதாவது 119 வது இடத்துக்கு .. கடைசியில் இருந்து அது தானே முதல் இடம் என்று பக்தா சொல்லுவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை