மண்ணின் பெருமை பேசும் நடனங்கள் பல அதில் படமாக சில...| Dinamalar

மண்ணின் பெருமை பேசும் நடனங்கள் பல அதில் படமாக சில...

Updated : அக் 13, 2017 | Added : அக் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


மண்ணின் பெருமை பேசும் நடனங்கள் பல அதில் படமாக சில...


ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் சார்ந்த நடனம் இருக்கவே செய்யும் இந்த கலாச்சாரம் சார்ந்த நடனங்களை காண ஒவ்வொரு மாநிலமாக போகலாம் அல்லது திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெறும் நாளில் சென்றால் பெரும்பாலான மாநில கலாச்சார நடனங்களை ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்கலாம்.திருமலையில் தங்களது நடனத்தை மாடவீதிகளில் இறைவன் முன் சமர்ப்பிப்பது என்பது பெரிய பாக்கியம் என்பதால் பல்வேறு மாநில கலைக்குழு முன்கூட்டியே விண்ணப்பித்து இருப்பர்.அவர்களில் சிறந்த குழுக்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு இங்கு வரவழைக்கப்பட்டு நடனமாட அனுமதிக்கப்படுவர்.

இப்படி வரும் நடனக்குழுவில் இடம் பெறுபவர்களில் பலர் கல்லுாரி மாணவியர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். பாரதப் பண்பாட்டை பலர் முன்னிலையில் பறைசாற்றப் போகிறோம் என்ற பொறுப்புணர்ந்து வரும் இவர்களை பார்க்கும் போது பெருமையாகவே இருக்கிறது.

காஷ்மீரில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரையிலான மண்ணின் பெருமை பேசும் நடனங்கள் பல அவற்றில் படமாக சில.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை