Aadhaar helped Indian govt save $9 billion: Nandan Nilekani | 'ஆதார் அட்டையால் மத்திய அரசுக்கு ரூ.59,000 கோடி மிச்சம்'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஆதார் அட்டையால் மத்திய அரசுக்கு ரூ.59,000 கோடி மிச்சம்'

Added : அக் 13, 2017 | கருத்துகள் (47)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'ஆதார்  அட்டையால், மத்திய அரசுக்கு, ரூ.59,000 கோடி, மிச்சம்'

வாஷிங்டன்: ''பல்வேறு திட்டங்களுக்கு, 'ஆதார்' விபரங்களை கட்டாயமாக்கி, முறைகேடுகளை தடுத்த காரணத்தால், மத்திய அரசுக்கு, 900 கோடி டாலர் மிச்சமாகி உள்ளது,''என, 'இன்போசிஸ்' நிறுவனத்தின், செயல்சாரா தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
அவர், வாஷிங்டனில், மின்னணு பொருளாதாரம் குறித்த, உலக வங்கியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசால், ஆதார் திட்டம் துவக்கப்பட்டது. அடுத்து, 2014ல், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த மத்திய அரசு, ஆதார் திட்டத்தை தொடர்வதற்கு, ஆர்வமுடன் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகள் மூலம், தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் கிடைத்துள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டதால், போலி பயனாளிகளை சுலபமாக கண்டறிந்து நீக்கவும், நிதி முறைகேடுகளை தடுக்கவும் முடிந்தது.இந்த வகையில், ஆதார் மூலம், மத்திய அரசுக்கு, 900 கோடி டாலர், அதாவது, 58,500 கோடி ரூபாய் மானியம் மிச்சமாகி உள்ளது.

ஆதார் அட்டையால் அரசுக்கு ரூ.,58,500 கோடி மிச்சம்

வங்கிக் கணக்கில், 50 கோடி பேர், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர். மேலும், 1,200 கோடி டாலர் அளவுக்கு, அரசு மானியம், பயனாளிகளின் வங்கிக் கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது.இது, உலகளவில், மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்ற, மிகப்பெரிய ரொக்கப் பரிமாற்றம் ஆகும். சரியான மின்னணு கட்டமைப்பு வசதியை உருவாக்கினால், மிக விரைவான வளர்ச்சி காணலாம் என்பது, நிரூபிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - New Delhi,இந்தியா
14-அக்-201710:32:54 IST Report Abuse
Ramesh சரி, இதில் இவ்வளவு மிச்சம் அதில் அவ்வளவு மிச்சம் என்று செய்திதான் வருகிறதே தவிர, அந்த மிச்சமான பணமெல்லாம் எங்கே போகிறது, எந்த வழியில் செலவழிகிறது என்ற ஒரு கணக்கும் காட்டப்படுவதில்லையே?..ஏழை இன்னும் ஏழையாகிறான், பணக்காரன் உயர்ந்துகொண்டே போகிறான்..இதுதான் இன்றைய நிதர்சனம்..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
30-நவ-201711:32:28 IST Report Abuse
Anandanஅதெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-அக்-201709:39:35 IST Report Abuse
Appu சைஞ்சுக்...சைஞ்சுக்..சைஞ்சுக்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201708:26:20 IST Report Abuse
Srinivasan Kannaiya இதை இப்பிடி சொல்லவில்லை என்றால் இன்போசிஸில் வருமானவரி துறையினர் படையெடுப்பார்கள் என்று தெரியாதா.. என்ன மிச்சம்.. ஆதார கார்டு தயாரிக்க எவ்வளவு தொகை கொடுத்து இருக்கிறீர்கள்.. மேலும் கொடுத்த ஆதாரை பிளாஸ்டிக்காக மாற்ற அட்டைக்கு முப்பது வீதம் மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் மக்களிடம் அரசு சுரண்ட போகிறதே..அது தெரியாதா... உங்களுக்கு...
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
14-அக்-201707:37:22 IST Report Abuse
Chanemougam Ramachandirane அப்படியானால் ஏன் அதிக வரி போடுகிறார்கள் மத்தியில்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201707:16:36 IST Report Abuse
Kasimani Baskaran காங்கிரஸ் போட்ட திட்டம் என்பதால் அதை ஒதுக்கி வைக்காமல் செயல்படுத்தியது தவறு என்று சில பன்றிகள் சொல்வது கேட்கிறது... காங்கிரஸ் திட்டம் மட்டும் போடும் - செயல்படுத்தாது... அதை புரியக்கூட புத்தி இல்லை என்பது தெளிவாக தெரிகிறது..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
30-நவ-201711:33:56 IST Report Abuse
Anandanஆதார் அட்டையை மிக தீவிரமாக எதிர்த்தது பிஜேபி மட்டும்தானே. அப்போ ஒரு இசை இப்போ ஒரு இசை. சூப்பரப்பு....
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
14-அக்-201706:56:18 IST Report Abuse
K.   Shanmugasundararaj ஆதார் திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டுவந்தபோது அதனை எதிர்த்தது இந்த பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் கூட்டம் தானே. அன்றே வந்து இருந்தால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டு இருக்குமே.ஆக தேசபக்தி என்று இவர்கள் பேசுவது எல்லாம் வேஷம் .ஆங்கிலேயரின் கையாளாக சுதந்திர போராட்டத்தில் செயல்பட்ட இவர்கள் இன்னும் திருந்தவே இல்லை என்பது உறுதியாகின்றது. மோடி , பி ஜெ பி ஆகியோரின் தேசபக்தி எல்லாம் வேசமே.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
14-அக்-201706:29:23 IST Report Abuse
krishnan ஆட்களை விட்டு விளம்பரம் செய்யும் underachving கார்பொரேட் ஸ்டைல் அரசாங்கம்
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201705:23:19 IST Report Abuse
அப்பாவி ஒண்ணுக்கு போறதுக்குக் கூட ஆதாரைக் கட்டாயமாக்கி உலக சாதனை படைத்தவர்கள். இதப்போய் அமெரிக்காவில் சொன்னால் கைத்தட்டல் விழும். இங்கே சொன்னால் அடுத்த தேர்தலில் ஆப்பு விழும்.
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
14-அக்-201702:31:45 IST Report Abuse
Dol Tappi Maa ஏழைக்கு ஆதார் . 50000 மேல தங்கம் வாங்கினா ஆதார் தேவையில்லை .தங்கம் wholesale வியாபாரிகள் எல்லாம் கொண்டாட்டம் தான்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-அக்-201701:37:09 IST Report Abuse
D.Ambujavalli அப்படியே ஆதாருடன் வாக்காளர் அடையாளத்தையும் லிங்க் செய்தால் கள்ள ஒட்டு பிரசினை தீருமே செய்யுமா மத்திய அரசு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை