சபரிமலை வழக்கு அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
மாற்றம்!
சபரிமலை வழக்கு அரசியலமைப்பு அமர்வுக்கு...
பெண்களை அனுமதிக்கலாமா என விசாரிக்க முடிவு

புதுடில்லி:புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை, Sabarimala, அரசியலமைப்பு சட்டம் ,Constitutional Law, சபரிமலை அய்யப்பன் கோவில் ,Sabarimala Ayyappan Temple,  உச்ச நீதிமன்றம் ,Supreme Court,  கேரளா முதல்வர் பினராயி விஜயன்,Kerala Chief Minister Pinarayi Vijayan, பெண்கள் , Women,தேவஸம் போர்டு,  Devasam Board, கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன்,Kerala Devasam Board Minister Kadagampalli Surendran ,  புதுடில்லி, New Delhi,

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, பத்தினம் திட்டா மாவட்டம், சபரிமலையில், பிரசித்தி பெற்ற, அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், 10 - 50 வயதுள்ள பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


இதை எதிர்த்து, பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் அமர்வு விசாரித்தது.முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையின் போது, 'மாதவிடாய்

ஏற்படுவதால், 10 - 50 வயதுள்ள பெண்கள் சபரிமலைக்கு வருவதால், புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும். அதனால்தான், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என, கோவிலை நிர்வகிக்கும், திருவிதாங்கூர் தேவஸம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவிலுக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானதா என்பது உள்ளிட்டவை குறித்த விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியலமைப்பு சட்டஅமர்வு விசாரணைக்கு மாற்றுவது குறித்து விசாரிக்கப்பட்டது.

தீர்ப்பு


அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான விசாரணைக்கு பின், உச்ச நீதிமன்ற அமர்வு, பிப்., 20ல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் கூறியுள்ளதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை தொடர்பாக, பல கேள்விகள் எழுகின்றன; அவற்றுக்கு விடை தேடும் வகையில், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமைப்பு சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள, மத சுதந்திரத்துக்கு எதிராக, இந்தத் தடை உள்ளதா; பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகிறதா; பெண்கள்

Advertisement

நுழைவதற்கு, கோவில் நிர்வாகம் தடை விதிக்க முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள் தொடர் பாக, அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கும். இவ்வாறு அமர்வு கூறிஉள்ளது.

கேரள அரசு வரவேற்பு


சபரிமலையில், பெண்களுக்கு அனுமதி மறுப்பது தொடர்பான வழக்கின் விசாரணையின் போது,2016 நவ., 7ல், தாக்கல் செய்த பதிலில், 'பெண்களுக்கு'அனுமதி அளிக்க வேண்டும்' என, கேரள முதல்வர், பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்திருந்தது.

முன்னதாக, 2008ல், அப்போது ஆட்சியில் இருந்த, இடது ஜனநாயக முன்னணி அரசும், பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, 2016ல் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் தலைமை யிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, பெண்களுக்கு அனுமதி மறுக்கும், தேவஸம் போர்டு முடிவை ஏற்பதாக, பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, கேரள தேவஸம் போர்டு அமைச்சர், கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: கோவிலில் நுழைவதற்கு, எந்த பாலின பாகுபாடும் இருக்க கூடாது; முந்தைய ஆட்சியின் போது, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பதிலில், இதை குறிப்பிட்டுள்ளோம். எங்கள் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
14-அக்-201719:13:43 IST Report Abuse

S Rama(samy)murthyதூங்கும் புலியை [ ஹிந்துகளின் ] உணர்வை சீண்டவேண்டாம் . இதன் விளைவு கான் கிராஸ் , கம்யூனிஸ்ட் களை இல்லாமல் செய்துவிடும் . பாஜக வில் கேரளா, தமிழக , ஹிந்துக்கள் இணைய வேண்டும் . இவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் .சுபராம காரைக்குடி

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-அக்-201716:49:18 IST Report Abuse

சிற்பி உலகில் பல நாகரிகங்கள் தோன்றின. பல ஒழிந்து விட்டன. பல ஒழிக்கப்பட்டன. இப்போது ஒழிக்கப்படும் பட்டியலில் இந்து மதம். அதை ஒழிப்பது இந்துக்களே. இந்திய சட்டங்களே...? இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம்? ஆலய வழிபாடுகளை பற்றி தெரியாதவர்கள், அதில் ஈடுபாடு இல்லாதவர்கள் இந்த செயல்களை சட்டத்தின் பெயரால் செய்கின்றனர். அதற்க்கு விஷமிகளின் துணை வேறு. இஸ்லாமியர்கள் இந்தியாவை பல நூறு ஆண்டுகள் ஆண்டனர். இவர்களின் நோக்கமே ஆலயங்களை அழிப்பது, இந்துக்களை மதம் மாற்றுவது. ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன் பிறகு ஆங்கிலேயர்கள் ஆண்ட போதும் இந்துக்களின் கோவில்கள் அழிக்கப்பட்டு தேவாலயங்கள் கட்டப்பட்டன. பணம், வேலை கொடுத்து மதம் மாற்றினார். அவர்களும் ஆலய வழிபாடுகளில், சம்பிரதாயங்களில் தலையிடவில்லை. இந்துக்களை மதம் மாற்றுவதில் வெற்றியடையவில்லை. இப்போது எழுபது வருடம் ஆகிறது. என்ன கூத்து நடக்கிறது நாட்டில்? பெரும்பான்மையான மக்களின் பழக்க வழக்கங்களை, கலாச்சாரத்தை, அழிப்பதில் கோர்டே முன்னிற்கிறது. ஒரு ஊழல் செய்த, கொலை கொள்ளை செய்த அரசியல்வாதியை தண்டிக்க இயலவில்லை, வாய்தா வாய்தா... புதிய வித கணக்கு, கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு அலையவிடும் கோர்ட்டு, இந்துக்களின் வழக்கு என்றால் உடனே எடுத்து கொள்கிறது. ஏன்? உங்கள் நோக்கம் தாம் என்ன...? இந்து மக்களின் கலாச்சாரத்தை உங்கள் இஷ்டப்படி வளைக்கவா...? ஆகமங்களின் படி அமைக்கப்பட்ட கோவில்களில் உள்ள வழக்கங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆகமங்கள் என்பது அவ்வப்போது மாற்றப்படும் அரசியல் சாசம் போல அல்ல. இது ஜனநாயக நாடு தான். இதன் கலாச்சாரத்தை பேணி காக்கவே ஜனநாயகம். ஆளுபவன், சட்டத்தை கையில் வைத்துள்ளவர்கள் எல்லாம் தங்கள் இழ்டம் போலே கலாச்சாரத்தை வளைக்க கூடாது. எல்லாமே அறிவியல் முறைப்படி என்றால்... அறிவியலில் தெய்வம் இல்லை... அப்போது எல்லா ஆலயங்களையும் இடித்து தள்ளி விடலாமா..? எல்லா சமயங்களிலும் பல வழக்கங்கள் உள்ளன. சில வழக்கங்கள் மாற்றப்படலாம், சில வழக்கங்கள் மாற்ற பட கூடாது. இன்னும் சில பல ஆண்டுகள் கழித்து திருமணத்திற்கு பெண்ணே கிடைக்கவில்லை என்று உடன் பிறந்தவளை திருமணம் செய்து கொள்ள இயலுமா...? பெண்ணை தானே ஆண் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் என்ன.. சட்டத்துக்கு தான் கண் கிடையாது, உறவுகள் கிடையாது என்று வாதாட இயலுமா...? அரசியல் சட்டங்கள் மக்களின் தேவைக்காக, நாட்டு நடப்புக்காக உருவாக்க பட்டவை. அவைகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழலாம். ஆகமங்கள் அப்படி இல்லை. ஆகம முறையில் வழிபாடு செய்யும் கோவில்களில் பூஜை வேண்டாம், வெறும் தரிசனம் போதும் என்று கூற முடியுமா...? சிறுபான்மையினரை ஒப்பிட்டு யாரும் இங்கே கருத்து கூறாதீர்கள். அவர்களுக்கு குரல் கொடுக்க அனைத்து அரசியல் கட்சியும் முன் வருவார்கள். இல்லை மற்ற நாடுகளில் போராட்டம் முதலியவைகளை நடத்துவார்கள். இந்துக்களுக்கு குரல் கொடுக்க யார் வருவர்...? இந்துக்கள் வாழும் நாடு தானே இந்தியா..? இவர்கள் தானே பெரும்பான்மையாக உள்ளனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஏட்டளவு தானோ..? இந்திய அரசியல் வாதிகளே புறம் தள்ளினால்....?

Rate this:
14-அக்-201712:50:35 IST Report Abuse

Gayathriparameswaranஇது என்ன புதுசா இப்புடி மாத்துமாத்துனு மாத்தி ஒரு 30 வருசத்துக்கு அப்புறம் பெண்கள் உள்ளே செல்லக்கூடாதுனு மறுபடியும் சொல்லுவானுக. பெண்களுக்கான உரிமையில் கூட மதத்தை திணிக்கும் மட்டமானவர்களே கேளுங்கள். அய்யப்பர் சிவனின் அவதாரம் தானே அவர் ஏன் திருமணம் செய்து கொண்டார் பிறகு ஏன் குழந்தை பெற்றுக்கொண்டார் ஏன் அவர் உடலில் சம உரிமை அளித்தார் இது கட்டு கதை யல்ல என்பது மடையர்களுக்கும் தெரியும்.அனைத்து மதத்திலும் பெண்களை அடக்கியே வைத்திருக்கிறார்கள். நீங்கள் அனைத்து கடவுள்களையும் அவர்களின் பெண்கள் மீதான தவறான கொள்கைகளையும் கண் முன் நிறுத்துங்கள் பெண்களுக்களுக்கான நீதி தானாக கிடைக்கும்.கற்பனைகளை உண்மை என்று நம்பி அதை மதமாக்கி இப்படி பெண்களை அடிமையாக்கி சொல்ல வாய் கூசுகிறது.

Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
14-அக்-201716:45:36 IST Report Abuse

Enrum anbudanவேறு எந்த கோவிலிலும் இந்த மாதிரி ஒரு மரபு பின் பற்ற படுவதில்லை. பிறகு ஏன் எதற்கு எடுத்தாலும் பெண்ணுரிமை என்ற கூப்பாடு? கேரளாவில் ஒரு கோவிலில் பெண்கள் மட்டுமே அர்ச்சனை பண்ண முடியும் என்று ஒரு விதி இருக்கின்றது. அதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவும் இல்லை இவ்வாறு கூப்பாடு போடவும் இல்லை. இது ஒரு சில கோவில்களில் ஒரு ஆகம விதி என்பதை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அதை பின்பற்றுகின்றார்கள். இதில் ஒன்றும் பிழை இருப்பதுபோல் தெரியவில்லை. இதில் பெண் அடக்குமுறை எங்கு வந்தது. எல்லா வழிபட்டுதலங்களிலும் இவ்வாறான நடைமுறை இருந்தால் நீங்கள் சொல்லுகின்ற பெண் அடிமை உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளலாம். அதை விட்டு விட்டு சும்மா பினாத்தக்கூடாது....

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)