Rahul Gandhi To Take Over As Congress President Soon: Sonia Gandhi | காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்| Dinamalar

காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்

Added : அக் 13, 2017 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காங்., தலைவராகிறார் ராகுல், சோனியா, ஒப்புதல்

புதுடில்லி: காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்க உள்ளார் அதற்கான நேரம் நெருங்கிவிட்டது என காங். தலைவர் சோனியா கூறினார்.

காங். தலைவராக சோனியாவும், துணை தலைவராக ராகுலும் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களி்ல் காங். அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் கட்சி தலைமை பொறுப்பேற்க தயக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.


பொறுப்பேற்பது உறுதிஇந்நிலையில் டி.வி. சானல் ஒன்றிற்கு காங்.தலைவர் சோனியா அளித்த பேட்டியில், காங். தலைவராக ராகுல் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அது விரைவில்நடக்கும் அதற்கான நடவடிக்கைகளை துவங்கிவிட்டோம். தீபாவளி முடியட்டும் அதுவரை பொறுத்திருங்கள் என்றார். சோனியாவின் இந்த பேட்டி வாயிலாக காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு காங்.தலைவராக சீத்தாராம் கேசரிக்கு பிறகு காங்.தலைவராக சோனியா பொறுப்பேற்றார். தொடர்ந்து 19 ஆண்டுகளாக தலைவராக இருந்து வருகிறார். தற்போது கட்சி தலைமை பொறுப்புக்கு ராகுல் வருவது உறுதியாகிவிட்டதால் நடக்க உள்ள குஜராத், இமாச்சல் பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் ராகுலை முன்வைத்து பிரசாரம் செய்ய காங். திட்டமிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - singapore,சிங்கப்பூர்
14-அக்-201712:28:55 IST Report Abuse
karthikeyan தலைவராக பதவி உயர்வு பெற்று என்னத்த சாதிக்க போற ?
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-அக்-201712:00:05 IST Report Abuse
Nagarajan D டேய் மகனே என்னால முடிஞ்ச அளவுக்கு இந்தியாவையும் காங்கிரெஸ்ஸையும் அழித்துவிட்டேன், வரலாறு உன்னை கேவல படுத்திவிட கூடாது என்று உனக்கும் அதில் பங்கு வேண்டும் என்பதால் உன்னை காங்கிரஸ் கட்சியின் முதலாளியாக ஆக்க விரும்புகிறேன். நீ தான் இந்த சாம்ராஜ்யத்தின் கடைசி தூண். இந்த நாட்டையும் காங்கிரெஸ்ஸையும் நீ தான் அழிக்க வேண்டும் செய்வாயாடா என் செல்ல கோமாளி காந்தியே?
Rate this:
Share this comment
Cancel
Ashok - Sacramento,யூ.எஸ்.ஏ
14-அக்-201711:59:03 IST Report Abuse
Ashok BJP will win in Gujarath election as Congress doesn't CM candidate and lack of Organizational structure compare to the ruling Party. HP also will go to BJP due to corruption charge and law and order issue against CM Virbadhra sing. However the best chance for Congress is next year Kartnataka and Rajastan election as both states have popular CM candidates for Congress. I think Rahul will become President after Karnataka assembly election victory.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
14-அக்-201711:57:43 IST Report Abuse
Anand சோனியா வடநாட்டுக்காரர், ராகுல் தென்னாட்டுக்காரர், இவர்கள் இருவரும் வெவ்வேறு இனம், மதம், மொழி போன்றவற்றால் வேறுபட்டவர்கள், இவர் மிகவும் பெருந்தன்மையோடு தலைவர் பதவியை அவருக்கு (அளப்பரிய திறமையை பாராட்டி) கொடுக்க சம்மதித்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Paran Nathan - Edmonton,கனடா
14-அக்-201711:31:26 IST Report Abuse
Paran Nathan வாழ்த்துக்கள் இன்றைய மத்திய அரசு ராகுலை பிரதமராக்கி விடும். அந்த நம்பிக்கை எல்லோருக்கும் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Chennai,இந்தியா
14-அக்-201711:23:01 IST Report Abuse
Vijay Kumar பிஜேபியின் வெற்றி உறுதி
Rate this:
Share this comment
Cancel
Rajagopal P - coimbatore,இந்தியா
14-அக்-201710:54:22 IST Report Abuse
Rajagopal P திரு. ராகுல் தான் பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடைய எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறார். அவர் நீண்ட காலமாக கட்சி தலைவராக முடிசூடப்படாதது கட்சியின் பல தேர்தல்களில் படு தோல்விக்கு அவர்தான் முக்கிய காரணம். தற்போது தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தான் அவருக்கு முடி சூட்டப்படுகிறது. காங்கிரஸ் வாரிசு அரசியலை கடைபிடித்து திறமையானவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை. ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளது. இதற்கு துதிபாடுபவர்கள் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
14-அக்-201710:14:24 IST Report Abuse
kowsik Rishi குட்டிசுவருக்கு யார் காவல் நின்றால் என்ன ? மக்களை விட்டுவிட்டு தலைவர்களை தேடிய காங்கிரஸ் கம்பெனிக்கு இது தான் முடிவு திருந்தினால் மக்கள் நிறுத்துவார்கள் காமராஜர் லால் பகதூர் மொரார்ஜி தேசாய் வினோபாவே பில்லு மோடி என்று இருந்த காங்கிரஸ் கம்பெனி மறு சீராய்வு செய்து திருந்தட்டும்
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-அக்-201710:06:23 IST Report Abuse
P. SIV GOWRI காங்கிரஸின் அத்தியாயம் முடிவுக்கு வர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
14-அக்-201709:32:14 IST Report Abuse
Appu தவுதியான,, ராவுலுக்கு தலைவர் பொறுப்பு ஒரு மணிமகுடந்தா... சூப்பரு உயி உயி உயி உயி உயி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை