பெங்களூரில் வெளுத்து வாங்கியது மழை : 9 பேர் பலி| Dinamalar

பெங்களூரில் வெளுத்து வாங்கியது மழை : 9 பேர் பலி

Added : அக் 13, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 பெங்களூரில்,வெளுத்து,வாங்கியது,மழை,9 பேர் ,பலி

குருபரஹள்ளி:பெங்களூரில் இன்று அக்.,13 மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் கோவில் அர்ச்சகர் உட்பட ஒன்பது பேர், பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழை, நேற்றும் நீடித்தது. இதனால், சேஷாத்திரிபுரம் ரயில் பாலம் கீழ், ஐந்தடி வரை தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.ராஜாஜிநகர், மடிவாளா, சாந்திநகர், கோரமங்களா, சிவாஜிநகர், ஹெப்பால், எலஹங்கா, இந்திராநகர் என பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் வெள்ளம், பெருக்கெடுத்து ஓடியது.


பெங்களூரு பேய் மழைக்கு 5 பேர் பலி

இயல்பு வாழ்க்கை பாதிப்புபெங்களூரின் பல இடங்களில், மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவு முழுவதும் தாழ்வான பகுதியில் வசித்த மக்கள், கடும் பாதிப்படைந்தனர். சேஷாத்திரிபுரத்தில் பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இன்று (அக்.,13) மாலை 5:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரை பேய் மழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட சேதங்களின் முழு விபரமும் தெரியவில்லை
* யஷ்வந்த்பூர் பி.எம்.டி.சி., டிப்போ மற்றும் பஸ் நிலையத்தில் மூன்றடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், , வெளியேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறினர். இதனால், பஸ்கள் பஸ் நிலையத்தினுள் வராமல், ரோட்டிலேயே நின்றது.
* நந்தினி லே- அவுட் பகுதியில், வீடு ஒன்றில் தண்ணீர் புகுந்ததால், சிறுவன் ஒருவன், மூழ்கி கொண்டிருந்தான். அவன், கூச்சலை கேட்டு வந்த பக்கத்து வீட்டினர், சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
* எச்.பி.கே. லே - அவுட் குருபரஹள்ளி வார்டு, வெங்கடரமணா சாமி கோவில் அருகிலுள்ள மழைநீர் கால்வாயில், இரண்டு பேர் அடித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், ஒருவர் கோவில் அர்ச்சகர் வாசுதேவ், 35, என்று கண்டறியப்பட்டுள்ளது. மற்றொருவர் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளும், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவின் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கோவிலை பூட்டிக்கொண்டு, வீட்டுக்கு செல்லும் போது, மழைநீர் கால்வாய் காம்பவுண்ட் அருகில் நடந்து சென்ற போது, சுவர் சரிந்து விழுந்து, கால்வாயில் அடித்து செல்லப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தெரிவித்தார்.
* குருபரஹள்ளி 18 வது கிராசில், தாழ்வான பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மழை வெள்ளம் புகுந்தது. வீட்டுக்குள் இருந்த சங்கரப்பா, கமலம்மா ஆகியோர், தப்பிப்பதற்காக, காம்பவுண்ட் சுவர் ஏற முயன்றுள்ளனர். அப்போது, தவறி, விழுந்து, இருவரும், தண்ணீர் மூழ்கி பலியாகினர்.
* குடிசை பகுதி ஒன்றில், வீடு இடிந்து விழுந்ததில், முதியோர் ஒருவர், உயிரிழந்துள்ளதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.
* லக்கரே கெம்பே கவுடா லே - அவுட் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், மழைநீர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டார்.
இதே பகுதியில், வீட்டில் தண்ணீர் புகுந்து, அங்கிருந்த தாய் மீனாட்சி, 57, மகள் புஷ்பா, 22, ஆகியோர், மழைநீர் கால்வாயில், அடித்து செல்லப்பட்டனர்.
* சாம்ராஜ்பேட்டை சங்கரமடம் அருகில், வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரும், மழைநீர் கால்வாயில், அடித்து செல்லப்பட்டுள்ளார்.
* மஹாலட்சுமி லே அவுட் பகுதியில், நடந்து செல்ல முடியாத வெள்ளம் பெருக்கெடுத்தது. இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில், வெள்ளத்தில் லாரி ஒன்று சிக்கியது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-அக்-201710:11:11 IST Report Abuse
P. SIV GOWRI பலியானோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-அக்-201707:46:45 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இதுதான் காங்கிரஸ் ஆட்சி ,
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-அக்-201707:04:45 IST Report Abuse
தேச நேசன் அளவுக்குமீறி அவர்களைத்திட்டவேண்டாம் அங்கு பெரும்பகுதி தமிழர்கள் உள்ளனர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மேயர் ஒரு தமிழர் அவரது பொறுப்பு அதிகரித்துள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை