என் மகன் ஊழல் செய்யவில்லை: பா.ஜ., தலைவர் அமித் ஷா விளக்கம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
என் மகன் ஊழல் செய்யவில்லை
பா.ஜ., தலைவர் அமித் ஷா விளக்கம்

ஆமதாபாத்:''என் மகனின் நிறுவனம், எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை,'' என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறினார்.

பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷாவின் மகன், ஜெய் நடத்தி வரும் நிறுவனம், மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பின், 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக, இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து, கருத்து ஏதும் கூறாமல் இருந்த, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, நேற்று, அதற்குவிளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:என் மகனின் நிறுவனம், எந்த ஊழலிலும், முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எனக்கும், பிரதமர் நரேந்திர

மோடிக்கும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், காங்., வீண் பிரசாரம் செய்கிறது.காங்., பல ஊழல், மோசடி களை சந்தித்துள்ளது. அவர்கள்,இதுவரை

 என் மகன்,ஊழல்,செய்யவில்லை,பா.ஜ., தலைவர்,அமித் ஷா விளக்கம்

அவதுாறு வழக்குகளைதாக்கல் செய்துள்ளனரா... அதே நேரத்தில், என் மகன் ஜெய், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அவதுாறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த விவகாரத்தில், விசாரணை நடத்த

Advertisement

வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த தைரியம், காங்கிரசுக்கு இருந்ததா? ஜெய் மோசடி செய்ததாக,உங்களிடம் ஆதாரம் இருந்தால், நீதிமன்றத்தில் அதை தாக்கல் செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
22-அக்-201705:00:01 IST Report Abuse

Barathanஅரசியல்வாதிகள் எப்போதுமே பொய்தான் பேசுவார்கள்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-அக்-201711:02:02 IST Report Abuse

Malick Rajaஅடிவருடிகள் அவலங்கள் தானாக வருவதை தடுக்கவே முடியாது.. விதியின் விளையாட்டு ... உயர்வுக்கு பின் வீழ்ச்சி என்பதே உலக நியதி .. இதில் பிஜேபிக்கு விதி விலக்கில்லை .. விதியை மதியால் வெல்லலாம் ஒருமுறை மட்டுமே ..

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-அக்-201718:09:22 IST Report Abuse

Malick Rajaபிஜேபி யின் தேசிய தலைவர் பங்காரு அவர்கள் டெஹல்கா மூலம் பிடிபட்டது மூலம் உலகமே நாறியது பிடித்து தண்டனை பெற்று மரணித்தார் .. இது இந்திய சரித்திரத்தில் சாதனை என்று பிஜேபிக்கு தெரியும் .. இப்போது தேசியத்தலைவரின் மகன் தகுந்த ஆதாரங்களை ராகுல்காந்தி வெளிப்படுத்தி இருக்கிறார் ... ஆனால் எங்கோ சத்தம் கேட்கிற மாதிரி இருக்கு என்று பிரதமர் மவுனி ஆகி விட்டார் ..

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)